Wednesday 21 December 2011

என்னை மன்னித்து விடு தோழனே!!!...

நிலவு வளர்வதும் இல்லை...
தேய்வதும் இல்லை...
ஆனால்???...
கண்கள் காணும் காட்சி என்னவோ ...
அப்படித்தான்...

தோழனே!!!...
என் மீது கொண்ட
உன் நட்பின் அன்பும்
நிலவினைப் போல்தானோ...

சில நாட்கள் வளரும்
சில நாட்கள் தேயும்
ஒரு நாள்
இல்லாமலே கூட போகலாம்...

எஞ்சி நிற்பது என்னவோ
பசுமையான நினைவுகளையும் தாண்டி
மனதின் பாரங்கள் மட்டுமே...

அதுவும் ஓர் நாள் மறையலாம்
காலத்தின் மாற்றத்தால்....

தோழனே!!!...
உன் நட்பின் அன்பினை மட்டுமே
சுவாசித்த எனக்கு
கிடைத்த பரிசுதனோ இது...

நண்பர்கள் கேட்டு
நான் ஒருபோதும்
இல்லை என்று சொன்னதில்லை...

என் நட்பையே வேண்டாமென்று
வெறுத்தபோதிலும் கூட...

எதையும் செய்வேன்
என்னை தோழியாக நினைத்த
உன் அன்பு மனதிற்காக...

மனதினால் என்னை விட்டு
பிரிய நினைத்த உனக்கு
நான் தரும் புத்தாண்டுப் பரிசு...

என் நினைவுகளைத் தாண்டிய
உன் சந்தோஷம் மட்டுமே...

இதில் என்றும்
என் சந்தோஷத்திற்கு இடமில்லை...

இனி என்னால்
உன் மனதிற்கு தடுமாற்றம் இல்லை...

இது சரியா ? ... தவறா?...
எனத் தெரியவில்லை...

இருந்த போதிலும்
இதைவிட சிறந்த பரிசாய்
என்னால் உனக்கு
தேர்வு செய்ய இயலவில்லை...

நான் தரும் இந்தப்பரிசு
உனக்கு கண்டிப்பாய்
வரும் புத்தாண்டுகளிலே
மலர்ச்சியைத் தரும் என்பதில்
ஒருபோதும் எனக்குச் சந்தேகமில்லை...

இவையெல்லாம்
உன்னைப் புரிந்து கொண்டதால்
உன் நன்மைக்காகவே செய்கிறேன்...

இனிவரும் நாட்களில்
உன் கனவு நினைவாகி
இலச்சியத்தின் உச்சியை அடைந்து
மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்...

இதுவரை என்னால்
உனக்கு உண்டான காயங்களுக்கு
வருந்துகிறேன்...

என்னை மன்னித்து விடு தோழனே!!!...

Thursday 15 December 2011

நினைவிலும் கனவிலும் நீயே என்பதன் சான்று....

அன்று
நீ என்னை கடந்து சென்ற
சில மணித்துளிகளால்...

இமைகள் அசையாது நின்றது
பிரிவின் வலி பறந்தது
இதயம் லேசாக பனித்தது
இதழ்கள் தானாக சிரித்தது
இரத்தம் உற்சாகத்தில் பாய்ந்தது
மனம் நினைவில் பதித்தது
இரவு அமைதியில் ஆழ்ந்தது
விடியல் புத்துணர்ச்சியில் விடிந்தது
பொழுது மகிழ்ச்சியில் நகர்ந்தது!!!

இருந்துதும் அடங்காது...

பசித்தவனின் ஒரே தேடல்
உணவாகதான் இருக்கும்....
அவ்வாறே,
என்னுள் உயிரான
உன்னை காணும்
என் தேடல்...
அது தொடரும்
என்றும்.....

உன்னை காணாது
ஏங்கி தவித்து
சிவந்த என் விழிகள்... 


தன்னை அறியாது
மெல்ல மூடின
இரவும் நீண்டதால்....

விடிந்ததும் மெல்ல
விழித்து பார்த்தால்
சிவந்த என் இதழ்கள்.....

கசிந்த ஒரு புன்னகை......

பதிந்த சில தழும்புகள்.......

உடல் நனைந்த
இன்ப அதிர்வுகள்.....
மூளையின் ஓரத்தில்
ஒளிவிளக்காய் உற்சாகம்..... 

உறவு கொண்ட உடல் பூத்து, 

புன்னகைத்து கருக்கொண்டு,

வரும் மழலை உருதன்னை.

மனம் கொண்ட உறவு மருவுமே 

மையத்துள் இறையைக் கருவாக்கி 

அமைதியில் ஆனந்தக் கூத்தாடி.

நினைவில் மட்டுமல்ல 

கனவிலும் நீயே
என்னுள் வாழ்கிறாய்
என்பதன் ஒரு சான்றாக
சிரித்தது...... 

 

உன் மௌனம்
எனக்கான தண்டனை அல்ல..
என் நேசத்திற்க்கானது.....

என் நேசமே
நீதான் என்பதால்
உனக்கானது......

உன்னை என்
நேசமாக கொண்டது
தவறு எனில்....

என்னை மட்டும் தண்டித்துவிடு....
என் நேசத்தை விட்டுவிடு!!!


Sunday 4 December 2011

ஒரு கேள்வியும் ஒரு பதிலும்

 

அவனை நினைக்கையில்
என்னுள் பலமுறை
எழும் கேள்வியை
இன்று அவன் என்னிடமே
கூற கேட்டேன்...
 

" ச்சா, நா ஏன் இப்படிருக்கேன்னு தெரியலயே?! "
 

ஆனால் அவனுள்
அவன் நினைவில் வேறொருத்தி....
 

இருக்கட்டும் அப்படித்தான்!
அவன் நினைவுகள் தரும்
மகிழ்ச்சி ஒன்றே
என்றும் எனக்கு போதும்!...
 

" ச்சா, நா ஏன் இப்படிருக்கேன்னு தெரியலயே?! "
 

இந்த நொடியும் என்னுள்
அதே கேள்வி எழுகிறதே!! 

 

நிற்கமுடியாமல் சிதறிக் கொட்டும் நீர்விழுது
கொண்ட கணத்த கார்மேகமாய்,

இன்பம் நிறைந்த அன்பு மழையை எனக்குள்
நித்தம் கொட்டித்தீர்க்கும் எனதன்பே!

அம்பு எய்திய மனம் விம்மி வீழ்ந்தபின்னும்
வம்பு செய்த மனம் கொண்ட என் ஆருயிரே,

கற்பனையில் காதலுக்கான கற்பை உரசிப்
பார்க்கும் கண்ணான என் கண்மணியே,

உன் உலகத்தினுள்ளே உறைந்து கிடக்கும்என்னை
கடைந்து கண்டெடுக்க நீ அனுப்பிய கறை நிலா,

உறுத்தி நிற்கும் காதலில் முழுமை பெற்றுத்
திரும்பவந்து சேர்ந்துவிட்டாளா?

இல்லை, திரும்ப வெட்கப்பட்டு திசை மறந்து
தினவெடுத்த தோள்களுடன் ஓடிவிட்டாளா?

 

கண்கள் கலங்கின
இதயம் வலித்தது
உலகமே இருண்டது!

உனது பதிலால் அல்ல
எனது கேள்வியால்.....

அப்படி ஒன்றை
கேட்டிருக்கக்கூடாது தான்
உன்னிடம் நான்!!!

Monday 21 November 2011

நீயாக உணர்வாய் என எண்ணி....

உள்ளம் என்னவோ
உன் பெயர்
சொல்லியே துடித்தாலும்
உதடுகள் ஏனோ
அதை வெளி
சொல்ல மறுக்கின்றன...

காரணம்;
என் உள்ளத்துடிப்புகளை
நீயாக உணர்வாய்
என எண்ணி...
காத்துகிடகின்றன
என் உதடுகள்... 

உன் வரவுக்கு பிறகும்
தனித்தேதான் இருக்கிறேன்....
இருந்தும்
முன்பில்லாத இன்பம்
இப்போதிருக்கிறது....

என்னுள் தானே
நீயும் வாழ்கிறாய்...
என் தனிமையிலும்
இனிமை
காண செய்கிறாய்.....

இறக்காமல்தான் இருக்கிறேன்
இன்னும் நீ சுவாசிப்பதால்..
மரிக்காமல்தான் இருக்கிறேன்
இன்னும் நீ மறக்காதாதால்..

நீ நேசிக்க மறந்தால்
நான் சுவாசிக்க மறப்பேன்..

நான்
இருப்பதும் இறப்பதும்
உன்னிடம் உள்ளது!!

சுவாசிக்க மறந்தாலும்
என்னை நேசிக்க
மறக்காதே...

நான் வாழ அல்ல...
என்றும் நீ வாழ...
என்னுள்
என் நேசமாக... 

 

கல்லாய் மாறிப்போன
என் கற்பனையை
உளியாக இருந்து செதுக்கி

என்னை மீண்டும்
கவிஞன் ஆக்கிய
சிற்பியே...

எங்கனம் உன்னை நான் மறப்பது...
நன்றி மறப்பது நன்றன்று அல்லவா!!

பின்
எங்கனம் உன்னை நான் மறப்பது..
முயன்றாலும் முடியாது;
முயலவும் என் மனம் விரும்பாது!!

Wednesday 7 September 2011

சரி மறந்து விடுகிறேன்..வழி சொல்..,

பிரியமானவனே..,
நீ கூறிய ஒரு வார்த்தைக்காக..,

இருவரும் ஒன்றாய் இருந்த..,
காலத்தை இன்று நான் மட்டுமே..,
தனியே சென்று பார்க்கிறேன்..,

இதுவரை எந்தன் கண்ணுக்கு தெரியவில்லை..,
எந்த ஒரு குறையும்..,

சிரிக்க செய்த உன் சின்ன சின்ன குறும்புகள்..,

சிந்திக்க செய்த உன் சில சில கேள்விகள்..,

நான் செய்த தவறுக்காய்..,
நீ என்னை திட்டிய நிமிடங்கள்..,
பிறகு..,
என் மௌனம் கலந்த கண்ணீரை கண்டவுடன்..
நீயே என்னை ..,
சமாதான படுத்திய நிமிடங்கள்..,
அப்பொழுது என்னை விட வேதனை பட்ட..,
உன் முகமும்..மனமும்..,

பயித்தியம் பிடித்தாலும்...,
பக்கத்தில் இருப்பேன்..,
பிரியவே மாட்டேன்...,எனும்
பிரியமான வார்த்தைகள்..,

இப்படி உன்னுடன் பழகிய நாட்களில்..,
உன்னை வெறுக்கும் படி ஒன்றும் இல்லையே..,

பிறகெப்படி உன்னை மறப்பது..,

திரும்பி வந்துவிட்டேன்..,
நீ எனக்கு வேண்டாம்..
நினைவுகளே போதும் என்று..,

உன் கண்ணீர்..,

என் கண்களுக்கு..,
நீ பதில் சொல்லா விட்டாலும்..,
என் கண்ணீருக்கு பதில் சொல்லும்..,
காலம் வரும்..,

களங்கங்களை சுமத்தி..,
கை கழுவி நீ விலகினாய்..,

காலம் வரும் காத்திருக்கிறேன்..,

உன்னுடன் கைகோர்த்து நடை போட அல்ல..,

உன் கண்ணீரை என் விரல் கொண்டு..,
துடைக்க..,

இன்றும் உன்னை நேசிப்பதால்..,

போராட்டங்கள் நிறைந்த..இந்த
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்..,

நீ வருவதும்,போவதுமாய் இருக்கிறாய்..,

வலி தருவதும்,
வதைப்பதுமாய் தொடர்கிறாய்..,

எதை நீ தந்த போதும்..,
ஏற்று கொள்ளும் எந்தன் உள்ளம்..,

ஏனெனில்..,
இன்னும் நான் உன்னை..,
நேசிப்பதால்..,

உன்னை விட்டு விலகி செல்கிறேன் நான்...,

வலியும் கண்ணீரும் ...
வலிக்கவில்லை எனக்கு...,

நித்தம் உன்னை நினைத்து..
நெஞ்சில் ஏற்படும் ரணம் எனக்கு பழகிவிட்டது..,

மலர்களின் இதழ்கள்...,
வாடுவதை போல்...,
மனமும் இங்கு கொஞ்சம் கொஞ்சமாய்...,
வாடிவிட தொடங்கிவிட்டது...

அன்புக்கு சக்தி உண்டு என்று...,
இன்று வரை நான் நினைத்திருந்தேன்...,
அது என்னில் மட்டும் இருந்து பயனில்லை...,
நிழல்கள் என்றும் நிஜங்கள் ஆவதில்லை...,
என்பது என் புத்திக்கு புரியவில்லை...,

உன் உள்ளம் ஒரு கோயிலென்று ...,
உட்புகுந்து வந்தேன் நான்...,
நீ என்னை வெளியேற்றியபோதும்...,
வருத்தப்படவில்லை...,அன்பே...

வேறொருத்தியை...,
குடியேற்றிய போது தான்...,
நொந்தளுதேன்...நான்..,
உன் இதயம் ஒரு வாடகை வீடு என்று...,

இங்கு நீயில்லாமல் ...,
இதயம் வலிக்க..,
கண்ணீர் கடலை என் மனதில் புதைத்துகொண்டு..,

உன் உள்ளம் விரும்பும்...,
ஒரு உறவிடம் உன்னை விட்டு விட்டு ..,
விலகி செல்கிறேன்...,
நான்..,
உனக்கு வலிக்க கூடாது என்று...,

எனக்கு வலிக்கும் என்பதையும் மறந்து..,

செல்கிறேன் நான்...,
நீ தந்த கண்ணீரை மட்டும் எடுத்து...,
கொண்டு...,

என் பழைய இதயமாக திரும்பி விடு..,

இருள் சூழ்ந்த இரவினில்..,
என் இதயமோ தூரத்தில்..,

இமை மூடும் பொழுதினில்..,
என் கண்களோ நீரினில்..,

கண்சிமிட்டும் நட்சத்திரங்களும் ..,
கனவுகளை தூண்டி கவலை தரும்..,

விண்வெளியின் தேவதையான..,
வெண்ணிலவும் என்னை வாட்டி..,
வேதனை தரும்..,

மரம் நான் அமைதியானவள் என்றாலும்..,
காற்று அதை விடுவதில்லை..,
அதன் இலைகளை அசைத்து அமைதியை
கெடுக்கிறது...,

அதுபோலத்தான் என் நிலையும்..,
உன்னை விலகி விட்டேன் என்றாலும்...,
உன் நினைவுகள் காற்றை போல என்னை..,
விடுவதேயில்லை..,நீயும் தான்..,

வேதனையிலும்,சாதனையிலும்..,
என்னை தேற்றவும்..,
போற்றவும் ஆயிரம் உறவுகள் ...
அருகில் ஆவலுடன்..கை நீட்டுகின்றன..,
ஆனால்,
இந்த பாலும் மனம்..,
---நீ நூறு பேரில் ஒருத்தி தான் எனக்கு---என்று கூறி..,
என் முன்னே அதை செயல் படுத்தி..,
கொண்டும் இருக்கின்ற..,
உன் அருகாமையை தான் தேடுகிறது..,
நீ ஸ்ரீ ராமன் என்றே நம்பவும் சொல்கிறது..,


தேவாமிர்தம் தேவை இல்லை..,
அதற்கான தேடலும் இங்கில்லை..,

உன் பார்வை மட்டும் காட்டிவிடு..,
என் பழைய இதயமாக திரும்பி விடு..,
நான் இங்கு காத்திருப்பேனடா..,
என்றும் உன் இதயமாகவே..,

என்னவனுக்காக நான் ரசித்த கவிதை..,

என் அன்பே..,
பூக்கள் பேசும் பாசையில்..,

பட்டாம்பூச்சிகள் உலவும் பாதையில்..,

குயில்கள் பாடும் பாக்களில்...,

மயில்கள் ஆடும் அழகினில்..,

அருவி பொழிதலின் ரம்மியத்தில்..,

கவிதை நடையின் கருப்பொருளில்...,

சிற்றோடை நடந்து வரும் சலசலப்பில்..,

தென்றல் தீண்டிய பொழுதுகளில்..,

நான் காண்பதெல்லாம் என்னவனே..
உன் பிம்பம் தான்..,
உன் கவிதை பார்வையும்,நேசமும் தான்..,

நீ படர..,
நான் தேரானேன்..,

நீ பேச..,
நான் மொழியானேன்..,

நீ பார்க்க..,
நான் ஒளியானேன்..,

நீ பறக்க..,
நான் சிறகானேன்..,

ஆனால்..இன்று நீயின்றி ...,
நான் மூச்சு காற்றுக்கே தவிக்கிறேன்..,

ப்ரியமானவனே..,
என் உயிராய் இருக்க வருவாயா..,??
உன் உயிர் காதலில்..,
எனக்கொரு கவிதை தருவாயா..,???

எனது ஆயுள் ரேகை...,

காதலும் ஒரு தீ போல தான்...,
சிலர் குளிரும் காயலாம்..,
சிலர் எரிந்தும் போகலாம்...,

நமது காதலில்...,
எரிகிறேன் நான்...
குளிர் காய்கிறாய் நீ...,

என்ன செய்வது...
எனது ஆயுள் ரேகையை ...
உனது உள்ளங்கையில் ...,
தைத்து விட்டதடா..,
இந்த காதல்...,

என் பிரியமான கவிதையே...,

என்னவனே...

உன்னை கண்ட நாள் முதலாய்...,
உணர்கிறேன்...
நகர்வது நாட்கள் மட்டும் தான்..,
என்னில் கலந்த உன் நினைவுகள் அல்ல...

உறவுகள் மட்டும் நிரந்தரம் அல்ல...,
பிரிவுகளும் நிரந்தரம் அல்ல...
நினைவுகள் மட்டுமே நிரந்தரம்...,

நீ என்னை விட்டு பிரிந்தாலும்...
என் கண்கள் கண்ணீரால் கரைந்தாலும்...,
தினமும் என்னுடன் வாழ்ந்து..,
கொண்டு தான் இருக்கிறாய்...,
கவிதை என்னும் பெயரில்...,

என் வாழ்க்கை எனும்..
வெள்ளை தாள்கள்..,
உன்னால் மட்டுமே அழகு பெற்று கொண்டுள்ளது...
என் பிரியமான கவிதையே...,

இத்தனை நாள் எங்கிருந்தாய்...

என் கவிதைகளின் நாயகனே...
இத்தனை நாள் எங்கிருந்தாய்...

என்றோ என்மேல் சிந்திய மழை துளிபோல்..,
என்றோ என்னை தழுவிய தென்றலை போல்..,
என்றோ நான் தொட்டு பார்த்த பனி துளிபோல்...,
என்றோ நான் கேட்டு ரசித்த பாடலை போல்..,

இப்படி ..

என்றோ உன்னுடன் வாழ்ந்ததையும் ...
நான் உணர்ந்து விட்டேன்...
ஆனால்..
உயிரே...
நீ மட்டும் உணர மறுப்பது ஏனோ...

மென்மையானவனே

இனியவனே...
இனிதாய் நீ பேசிய நாட்களில்...
என் மனதில் சலனம் ஏற்பட்டதில்லை...

ஆனால்..
என் அன்பே...
கோபமாய் நீ பேசிய...
இந்த நொடி முதல்...
என் மனம் சலனத்தில்....

மென்மையானவனே ...
மலர் போல் நானும்..
மகிழ்வாய் ஒருநாளேனும் வாழ ஆசைபடுகிறேன்...
என் மடியில் உன் முகம் புதைத்து..
ஒரு தடவை பொய் சொல்வாயா??...

உன்னை எனக்கு பிடிக்கும் என்று...

உன்னை விட மாட்டேன் உயிரே...

உன்னை...,
பத்திரமாய்...பதியம் போட்டேன்...
என் இதய தோட்டத்தில்...

வேர்கள் ஊன்ற மறுக்கிறாயே உயிரே....

சரி...
வேர்கள் மறுத்தாலும்...
விடவா போகிறது மண்!!!

நீ மலர்ந்து மணம் வீசும்...,
நாளுக்காக என் இதய தோட்டமே...
காத்துக்கொண்டுள்ளது மலரே ...

Thursday 1 September 2011

உன்னை விட்டு விலகி செல்கிறேன் நான்...,

வலியும் கண்ணீரும் ... வலிக்கவில்லை எனக்கு...,
நித்தம் உன்னை நினைத்து.. நெஞ்சில் ஏற்படும் ரணம் எனக்கு பழகிவிட்டது..,
மலர்களின் இதழ்கள்..., வாடுவதை போல்..., மனமும் இங்கு கொஞ்சம் கொஞ்சமாய்..., வாடிவிட தொடங்கிவிட்டது...
அன்புக்கு சக்தி உண்டு என்று..., இன்று வரை நான் நினைத்திருந்தேன்..., அது என்னில் மட்டும் இருந்து பயனில்லை..., நிழல்கள் என்றும் நிஜங்கள் ஆவதில்லை..., என்பது என் புத்திக்கு புரியவில்லை...,
உன் உள்ளம் ஒரு கோயிலென்று ..., உட்புகுந்து வந்தேன் நான்..., நீ என்னை வெளியேற்றியபோதும்..., வருத்தப்படவில்லை...,அன்பே...
வேறொருத்தியை..., குடியேற்றிய போது தான்..., நொந்தளுதேன்...நான்.., உன் இதயம் ஒரு வாடகை வீடு என்று...,
இங்கு நீயில்லாமல் ..., இதயம் வலிக்க.., கண்ணீர் கடலை என் மனதில் புதைத்துகொண்டு..,
உன் உள்ளம் விரும்பும்..., ஒரு உறவிடம் உன்னை விட்டு விட்டு .., விலகி செல்கிறேன்..., நான்.., உனக்கு வலிக்க கூடாது என்று...,
எனக்கு வலிக்கும் என்பதையும் மறந்து..,
செல்கிறேன் நான்..., நீ தந்த கண்ணீரை மட்டும் எடுத்து..., கொண்டு...,

என் பழைய இதயமாக திரும்பி விடு..,

இருள் சூழ்ந்த இரவினில்.., என் இதயமோ தூரத்தில்..,
இமை மூடும் பொழுதினில்.., என் கண்களோ நீரினில்..,
கண்சிமிட்டும் நட்சத்திரங்களும் .., கனவுகளை தூண்டி கவலை தரும்..,
விண்வெளியின் தேவதையான.., வெண்ணிலவும் என்னை வாட்டி.., வேதனை தரும்..,
மரம் நான் அமைதியானவள் என்றாலும்.., காற்று அதை விடுவதில்லை.., அதன் இலைகளை அசைத்து அமைதியை கெடுக்கிறது...,
அதுபோலத்தான் என் நிலையும்.., உன்னை விலகி விட்டேன் என்றாலும்..., உன் நினைவுகள் காற்றை போல என்னை.., விடுவதேயில்லை..,நீயும் தான்..,
வேதனையிலும்,சாதனையிலும்.., என்னை தேற்றவும்.., போற்றவும் ஆயிரம் உறவுகள் ... அருகில் ஆவலுடன்..கை நீட்டுகின்றன.., ஆனால், இந்த பாலும் மனம்..,
---
நீ நூறு பேரில் ஒருத்தி தான் எனக்கு---என்று கூறி.., என் முன்னே அதை செயல் படுத்தி.., கொண்டும் இருக்கின்ற.., உன் அருகாமையை தான் தேடுகிறது.., நீ ஸ்ரீ ராமன் என்றே நம்பவும் சொல்கிறது..,

தேவாமிர்தம் தேவை இல்லை.., அதற்கான தேடலும் இங்கில்லை..,
உன் பார்வை மட்டும் காட்டிவிடு.., என் பழைய இதயமாக திரும்பி விடு.., நான் இங்கு காத்திருப்பேனடா.., என்றும் உன் இதயமாகவே..,

காதல் கிணற்றில் விழுந்திருக்கிறேன்...

சாரல் மழையை 
ஜன்னல் திறந்து ரசிக்காத மனது... 
உன் ஒற்றைப் புன்னகை தூறலுக்காக 
கம்பிகளைப் பற்றிக் கொண்டு காத்து நிற்கிறது..!


அன்னப் பறவையைக் கண்டால் கூட 
அணைத்துக் கொஞ்சுகிற ஆளில்லை நான்... 
இப்போதெல்லாம் சின்னப் பறவைகளோடும் 
சிரித்துப் பேசுகிறேன்..!


சல்வார், சுடிதார் மட்டுமே 
சவுகரியமாய் உணர்ந்தவள்... 
உனக்கு பிடிக்கக் கூடும் என்பதற்காகவே 
பாவாடை தாவணிக்கு மாறியிருக்கிறேன்..!


ஊர் மொத்தமும் கூடுகிற 
திருவிழா கூட்டத்திலும் தெய்வத்தைப் போல 
நீ மட்டும் தனியே தெரிகிறாய்..!
எண்ணெயும், திரியும் இல்லாத 
அதிசய விளக்காக... 

இருபத்தி நாலு மணி நேரமும் 
நீயொருவன் மட்டும்தான் எனக்குள் எரிகிறாய்..!
தூரத்தில் இருந்து கொண்டே 
என்னை தூண்டி விட்டவனே... 

வெட்கத்தை விட்டு உனக்கு நான் 
சொல்லக் கூடிய செய்தி ஒன்றுதான்..!
பாழும் கிணற்றில் விழுந்திருந்தால் 
தீயணைப்புத்துறை மீட்டிருக்கும்... 

காதல் கிணற்றில் விழுந்திருக்கிறேன்... 
நீ யன்றி யார் என்னை மீட்க முடியும்..?