Thursday 1 March 2012

உயிர் வாழ்த்து

கண் உறங்கும் நேரத்தில் 
வரும் கனவு தான் 
உன் காதல்... 
என்றால்... 
காலமெல்லாம்,,, 
கண்ணுறங்க விரும்பிகிறேன்... 
உன் காதலை சுமந்தவளாக... 
என் கல்லறையில்...
உயிருக்கு உயிர் வாழ்த்தும் 
உயிருள்ள வாழ்த்து இது 
உயிருள்ள காலம்வரை 
உன்னோடு உயிர்வாழ 
உயிர்வைத்துக்காத்திருக்கும் 
உன் உயிரானவள்...........
என் உணர்வுடன் கலந்தவனை 
என் இதயத்து சந்தங்களை ரசிக்கவைத்தவனை 
என்னை எனக்கு அடையாளமிட்டவனை 
எனக்கும் மறுபிறவி உண்டென உணர்தியவனை 
என்னை மீண்டும் மழலையாக்கியவனை 
தொலைபேசியில் ரசிக்கும் - என் 
தொலைதூர தோழனிடம் 
சொல்லத்தான் நினைக்கிறன் ............ 
நான் நட்பில் மூடியிருப்பது 
உன்மேல் கொண்ட நேசம்என்பதை - அனால் 
முடியவில்லையடா....... 
உன்னுடன் பேசுகையில் மட்டும் 
என் வார்த்தைகள் விடுப்பெடுத்துக்கொள்கின்றன 
ஆனாலும் ....... 
மனதோரமாய் மட்டும் சொல்லிக்கொள்கிறேன் 
ஐ லவ் யூ டா செல்லம் ................;

இதயம் பேசுகிறது


மரணத்தின் வலியைவிட கொடியவலி 
காத்திருப்பின் வலி ..... 
என் கவிதையின்வழி இறங்கும் 
காதலின் வலிகள் ...... 
என் கண்களின்வழி இறங்கும் 
விழிகளின் வலிகளை -உன் 
கைகளில் ஒற்றிக்கொள்வாயா??..... 

விடியல்கள் எல்லாம் விடியாமல் 
இருக்கின்றது !........... 
இருக்கின்ற நேரங்களில் 
இதயங்கள் கனக்கின்றது ...... 
நினைவுக்குள்ளேயே உன்னை 
ஒளித்து ஒளித்து வைத்து ..... 
ஒளிர்கின்றேன் நான் !!... 
என்னை வேதனை செய்துகொண்டும் 
என்னுள் ஒளிர்கின்றாய் நீ !!!!!!..... 

மறுபடி உனக்கு மடல் எழுத 
எத்தனை மாதங்களானாலும் 
உன் மனசை வாங்க வருவாள் 
உன்னவள் .........................; 
மனசை வாங்க மட்டுமல்ல 
உன்னோடும் உன் உயிரோடும் 
ஒன்றாக !.....வருவாள் இவள் !.....

என் விழிநீர் துடைத்திடுமென நம்பிய உன் விரல்கள் 
என் விழி கொத்திப்போகும் என்பதை நான் 
அறியவில்லை பெண்ணே......... 
உன் விரல்கள் தாங்கி இருப்பவை 
அழகிய நகங்கள் அல்ல 
கொடிய நாகங்கள் என்பதை 
உணர்கிறேனடி உன்னால்........ 
உன் விஷமச்சிரிப்புகள் கூட 
விஷங்கள் தாங்கிய அமுதங்கள் என்பதை 
இப்போதுதான் உணர்ந்தேனடி........... 
இதயத்தை இழந்தால் இருப்பதெல்லாம் 
இழந்து விடுவேன் என்று 
அப்போது நான் அறியவில்லை....... 
இன்று !... 
உனக்கு திருமணபரிசாக கொடுக்க 
என்னிடம் எதுவும் இலையடி---ஏனெனில் 
உனக்கே தெரியும் நான் 
கொள்ளையடிக்கப்பட்ட வீடு--- ஆம் 
உன்னால் கொள்ளையடிக்கப்பட்ட வீடு..............