Sunday 30 December 2012

அவளைத் தொட்டுச் செல்லவே!!!...


வண்ணத்துப் பூச்சியாய்
பிறந்திருக்க கூடாதா
என ஏங்கித்தவிக்கிறேன்...

ஒவ்வொரு முறையும்
நீ பிடிக்க முயன்று
தோற்றுச் செல்கையில் எல்லாம்!!!.

ஒவ்வொரு முறையும்
ஆசைப் படாதே என
சொல்லிக் கொள்ளும்
மனதிற்கு மட்டும்
ஒரே ஒரு ஆசை...

நம் நட்பு தண்டவாளம் போல்
இணை பிரியாமல் செல்ல!!!...


மின்கம்பிகளின் இணைப்பைப்போல்
ரெட்டை உயிர்கள் பின்னிக்கிடந்து
காதல் விளக்கு எரிந்தது.


அவளைத் தொட்டுச் செல்லவே...
கார்மேகம் காலங்கள்
பல காத்திருந்து...
மழைத் துளியை
பூமிக்கு அனுப்பியது...

ஆனால் அவளோ
குடைக்குள்!!!...
அதனால் தானோ ?!!!...
தன் முயற்சியை
விடா முயற்சியாய்த் தொடர்கிறது
அடை மழையாய்!!! ...

Friday 28 December 2012

இந்த சந்தர்ப்பத்தை


அவன் ஊருக்குச் செல்லும் நாட்கள் குறைந்துகொண்டே இருந்தன. அவளிடமிருந்து எந்த மாற்றமும் காணமுடியவில்லை அவனால். அவள் காதலிக்கிறாளா என்றுகூட அவனுக்கு மிகுந்த சந்தேகமாகிப் போய்விட்டது. ஆனால் அப்படி இருக்க சாத்தியமில்லை. அவளைப்பற்றி அவனுக்குத் தெளிவாகத் தெரியும். வீட்டில் ஏதாகிலும் பிரச்சனை இருக்கலாமோ என்ற சந்தேகம் மேலோங்கியது. பலமுறை சந்திக்க முயன்று தோல்வியிலேயே முடிந்துகொண்டிருந்தது அவனின் முயற்சிகள் அனைத்தும். ட்ரெயினில் ஏற்படுத்தப்பட்ட அந்த சந்திப்பு நடந்திருந்தால் எல்லாமும் சுமூகமாகி இருந்திருக்கும். ம்ம்ம்ம்ம் வீட்டில் எதிர்ப்பு. விரக்தியான மனநிலை. சொதப்பினால் பயங்கரமான பிரச்சனையாகிவிடும் அபாயம்.
அவள் இத்தனை பரபரப்பான, சாதகமான உலகிலும் அவளின் எந்த விதமான தவகல்களையும் அவனுக்குத் தெரியப்படுத்தாமலேயே இருந்துகொண்டு இருந்தாள். அவனைப்பற்றியும் அவளுக்கு நன்கு தெரியும். அவன் சாதாரணமானவன் அல்ல. ஒரு சின்ன அசைவையும் கண்டு எடைபோட்டு முடித்து செயல்படுத்திடுவான். அதுதானே அவளின் சிக்கல்.
ஆனாலும் அவனிடம் அவளுக்குப் பிடித்ததும் அதே பரபரப்புதான். எந்தநேரமும் உயிருடேயே இருந்துகொண்டிருப்பான். வாழ்ந்துகொண்டிருப்பான்.
இருப்பினும் எழுத்துவில் மாற்றுப்பெயரில் ஒரு அக்கௌன்டைத் துவக்கி, அவனுக்காக ஒரு கவிதையினை வடிக்க நினைத்தாள். அதைக்கண்டால் ஏதாகிலும் மாற்றம் நிகழலாமே என்ற ஒரு கணக்கு.
" நீயின்றி நானில்லை அன்பே..
உன் நிழலுக்காக ஏங்கிநிற்கும்
நிலாவினை எப்பொழுது பிரித்தெடுத்து
வானுக்கு
நிரந்தர அமாவாசை தந்திடப் போகிறாய்..... " கவிதையினை எழுதிமுடிக்க அவளின் மாமன் மகன் வந்துநிற்க, கலவரத்துடன் கவிதையினை போஸ்ட் பண்ணாமலேயே அழித்துவிட்டாள்.
அவளின் வாழ்க்கை தனிமையிலேயே இனிமை காண இறைவன் விதித்துவிட்டான் போலும். இந்த சந்தர்ப்பத்தினைத் தவறவிட்டால்.....
தலை சுற்றியது அவளுக்கு. துணிவுடன் வீட்டைவிட்டு வெளியில் வந்து அவனின் செல்லுக்கு போன் செய்தாள்.
ஹல்லோ, ஹல்லோ, யாரும் லைனில் இருக்கிறீர்களா? ஹல்லோ, ஏதோ ராங் நம்பர்போல  இருக்குடா... கட்...
மனதில் துணிவில்லையே எனக்கு என்னசெய்ய?

Wednesday 26 December 2012

போதும்போதும்


நீ விட்டு சென்ற
தடயங்களில் எல்லாம்
உற்று உற்று
பார்க்கிறேன்.....

நீ கொட்டி சென்ற
அன்பின் அடையாளங்கள்
எட்டி எட்டி
பார்ப்பதை......

இதுவரை நீ செயலில்
நடத்திக் காட்டிக் கொட்டிச் சென்ற
அடையாளங்கள் அனைத்தையும்
பட்டியல் கட்டிப் பார்கிறேன்.

மறுமுறை மாட்டிவிட்டு
மன்றத்தில் மண்ணில் நிறுத்தி
கரும்புளி செம்புளி குத்தாமல்
விட்டதற்காய் வணங்குகிறேன்.

பட்டுவிட்டது போதும்
விட்டுவிட்டு ஓடி
எட்டிஎட்டிப் பார்த்து
கட்டிக்கட்டிக் கல்லெறிந்த கதை.

Sunday 23 December 2012

ஏன் சிதைக்கிறாய்


அதிகாலையிலேயே தூக்கம் கொள்ளாமல் விழித்துவிட்டேன். அவனின் தொந்தரவுகளால் மிகுந்த சலிப்பு ஏற்பட்டுவிட்டது. எத்தனை முறைதான் என் எதிர்ப்புகளை அவனுக்குப் புரியும்படி உணர்த்துவது. விரக்தியில் எழ மனமில்லை. படுக்கையிலேயே புரண்டுகொண்டு கிடந்தேன். உறவுகள்கூட உடம்புக்கு எதுவும் செய்கிறதா என்று கேட்டனர். அவர்களிடம் எப்படி இந்தத் தறுதலையின் முட்டாள்தனமான நடவடிக்கைகளை பற்றி உரைப்பது. மேலும் இன்று அழகுநிலையம் வேறு செல்லவேண்டும். எப்படித்தான் என் நடவடிக்கைகள் அனைத்தையும் அறிந்துகொண்டு என்ன இம்சைப் படுத்துகிறானோ புரியவில்லை. இதையே கருத்தில் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவார்கள் போலும். ரோதனைதான்.
11.30 க்கு செல்வதாக முடிவு செய்து 11 க்கு வழக்கம்போல் இல்லாமல் வேறொரு காரில் கிளம்பினேன். அழகுநிலையம் சென்றடையும் பொழுது கொஞ்சம் தூரம் தள்ளி அவன் நின்றுகொண்டிருந்தான். சனியன் விடவே மாட்டேன் என்கிறதே என்று காரிலிருந்து இறங்காமல் அப்படியே திரும்பிவிட்டேன். அழகுநிலையம் போன்செய்து 12.30 க்கு வருவதாக சொல்லிவிட்டு அப்படியே கோபத்துடன் படுக்கையில் சரிந்துவிட்டேன். எப்படித்தான் இதை சரி செய்வது என்ற கலக்கம் இருந்துகொண்டேயிருந்தது. இன்று எப்படியாகிலும் அவனின் முகம்முறித்து சொல்லிவிடவேண்டும், உறவுகள் பார்த்துவிட்டால் மிகவும் தவறாகிடும். அப்புறம் வெட்டுகுத்துத்தான்.
12.30 க்கு செல்லும்பொழுது அவனை எங்கும் காணவில்லை. சந்தோசமாக முகத்தில் அழகினை ஏற்றிக்கொண்டு வெளியில் வரும்பொழுது ரோட்டோரத்தில் ஏதோ விபத்து என்றார்கள். அருகில் சென்று பார்த்தேன். அவன்தான் இறந்துகிடந்தான். கவனக்குறைவாக ரோட்டைக் கடக்கமுயன்று இப்படி ஆகிவிட்டிருக்கின்றது. மிகவும் சிறுமையாக உணர்ந்தேன். என் அழகிய முகத்தில் ஒரு கொடு விழுந்ததை உணர்ந்தேன். என்னைக்காணவே வந்த அவன் வீழ்ந்து கிடக்கிறான், என்பது மனதை உறுத்தியது. ஆண்டவனே ஏன் எனக்கு இப்படியொரு அழகினைக் கொடுத்து ஆண்களைச் சிதைக்கிறாய்

Thursday 20 December 2012

ஏனடா என் வாழ்கையில் வந்தாய்..,


ஏனடா என் வாழ்கையில் வந்தாய்..,
நண்பனே...,

அன்று ஒரு நாள் என் வாழ்க்கையில் வந்தாய்..,

துன்பத்தை மட்டுமே அனுபவித்த என் வாழ்கையில் ..,இன்பத்தை காட்டினாய்..,

இன்று நானோ..,நீ இன்றி வாழும் நிலை...,

ஆனால்,உன் மனதிலோ வேறு ஒரு அதிர்ஷ்டசாலி..,

இறந்தே போனேனடா..,

எனினும்..,உன் மனம் கவர்ந்த பெண்ணுடன் உன் மண வாழ்க்கை அமையட்டும்..,

உன் திருமண நாள் என் மரண நாள்..,

உனக்காக இறந்தும் இந்த ஜீவன் காத்திருக்கும்...,

ஏனடா என் வாழ்கையில் வந்தாய்..,

உனக்காய் பிறந்து..,
உனக்கென வாழ்ந்து..,
உனக்கென இறக்கும்..,
இவள் என்றும் உனக்காய்,,

Wednesday 19 December 2012

நீ , நான் , நிலவு ...


உன்னை பார்க்க வேண்டும் என்று...
என் இதயம் துடித்தாலும்..

உன்னை பார்க்க கூடாது என்று
என் விழிகளை வேகமாக மூடி கொள்கிறேன்...!!

ஆனால் என்னவோ என் விழிகளுக்கு போட்ட வேலியை...

என் இதயதிற்குள் போட முடியவில்லை...


நீ , நான் , நிலவு ...
எல்லாம் கனவாய் போனது..

நீயும் இல்லை ..!

நிலவும் இல்லை..!!

நான் மட்டும் தனிமையில்...

நம் நினைவுகளுடன்..
உனை மறக்க முயன்றுகொண்டு.....

மறுபடியும் துவங்கிய இடத்தில்


அவன் மிகமிக அவசரமாகவும், அளவுகடந்த ஆனந்தமாகவும் அவளைச் சந்திக்கக் கிளம்பிக்கொண்டிருந்தான். என்னென்ன எடுத்துவைக்கவேண்டும், என்னென்ன அவளுக்குப் பிடிக்கும் எல்லாமும் தேடித்தேடி எடுத்துக்கொண்டிருந்தான். அவள் இன்றுதான் வெகுநாட்கள் கழித்து வெளியூரிலிருந்து வந்திருந்தாள். ஒரு போன் வந்து அவனின் அந்தச் சூழ்நிலையின் இன்பத்தினைக் கலைத்தது. அதுவும் அவனின் நெருங்கின தொழில் நண்பனின் போன்தான். எடுத்தான்.
நண்பனின் அப்பாவும் அவனின் மாமாவும் ராமேஸ்வரம் செல்வதற்காக மதுரை வருகிறார்கள் என்றும், அவர்களுடன் துணையாக சென்று அவர்களை உதவிசெய்து கவனித்துப்பின் பூனாவுக்கு விமானம் ஏற்றிவிட முடியுமா? என்று உதவி கேட்டான் நண்பன். நண்பனின் வேண்டுகோளை செயல் படுத்தியபின் அடுத்த திட்டத்தினை யோசித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தான். அதுகேட்டதும் அவள் கோபம் கொண்டாள்.
விமானநிலையத்தில் அவர்கள் வந்திறங்கிய சமயம், வந்திருந்த மாமா கொஞ்சம் நெஞ்சு வலிப்பதாகக் கூறி அமர்ந்துவிட்டார். உடனேயே விமானநிலைய டாக்டர் வரவழைக்கப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டது. ecg கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பூனாவில் பேசினபோழுது அவர்களை மறுபடியும் சென்னைக்கே கூட்டிச் சென்று விட விரும்பினர். உடனேயே அவன், அவர்களுடன் வந்து இறங்கிய அதே விமானத்தில் பயணமானான். சென்னையில் இறங்கினவுடன் ஆம்புலன்ஸ் காத்திருந்தது. அவர்கள் அனைவரையும் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பிவிட்டு மணியைப் பார்த்தான். மணி எட்டரை என்றது. உடனே தாம்பரம் சென்று நெல்லையைப் பிடிக்க முடிவு செய்து செயல் படுத்தினான். அவன் வந்து s 1 இல் தொத்தி ஏற ட்ரைன் கிளம்ப சரியாக இருந்தது.
டீட்டீயிடம் மன்றாடி b 3 வில் ஒரு பெர்த்தை வாங்கியபின்தான் மூச்சு வந்தது.
காதலியிடம் பேசலாம் என்று அவளின் செல்லுக்கு அழைத்தான். போனை எடுத்தவள் எதுவுமே பேசாமல் விம்மிவிம்மி அழத் துவங்கிவிட்டாள். எல்லாவகையிலும் அவளிடம் பேசிப்பார்த்தான். பேசவேயில்லை. நீண்டநேரத்திற்குப்பின் அவள், இறந்துவிடப்போவதாக சொல்லிவிட்டு போனை துண்டித்தாள். போட்டுவைத்த திட்டங்களெல்லாம் தவிடுபொடி. பழையகுருடி கதவதெறடி கதையாகிப்போனது.

Thursday 13 December 2012

நீநான்


என்னுயிரின் இசைக்கு
உன்னுடல் நடனமிட,

தசைப் பையினுள் சதை
தள்ளாடித் தாளமிட,

உதிர்ந்த உறவு
உதிரத்தில் விளையாட,

இறைப் பையில் பரவித்
தவிக்கும் காற்றைப்போல்,

உன் காதல் பையில் சிக்கித்
தவிக்கிறது என் காமம்.

என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டு
கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறாய்.

முந்தானையால் உன்முகம் மறைத்து
அழகையெல்லாம் சோதிக்கிறாய்.

கால்களினால்கூட கோலமிட்டு
காதல்மொழி காட்டி நிற்கிறாய்.

கண்ஜாடை மறைத்துவிட்டால்
பெண்ஜாடை விலகிடுமென நம்புகிறாய்.

கொப்பளிக்கும் வார்த்தைகளின்
தடம் புரியாமல் தவிக்கிறாய்.

மணம் பரப்பிட முடியாமல்
மல்லிகையை தடுக்க முயல்கிறாய்.

குழலசைவும் கொழுசொசையும்
குழைந்து குளாவுவதை புரிந்திடாமல்,

கொண்ட காதலைத் துறக்க
பொய்வேஷம் கொண்டலைகிறாய்.

மறைத்திருந்தாலும் மேகம்
விலகினபின் நிலவு வானுக்குத்தான்.

தெரிந்துகொல். புரிந்துநில்.

ஒவ்வொரு நொடியும்


குமரிக்கடல் கண்டு ரசித்து
குலைகுலையாய் அலை குழைத்து,

அதனினுள் ஆடிக் கால்நனைத்து கு
இன்பத்தைப் பருகி இனித்து நிற்க,

பேரலையின் வீரியம் வீழ்த்தி
விளையாடி என்னைக் கரைசேர்க்க,

குடித்த உப்பு, கண்ணீர் கலக்க,
கனவுக் காதலன் கண்டு கைபிடிக்க,

இன்பமாய் உள்ளுக்குள் உறைந்தது,
குடித்த காதலா? கொப்பளித்த காதலனா?

அலையலையாய் சுற்றி வலம்வந்து
தித்திப்பாய் உணவு படைக்கிறாய்.

அடிக்கடி என்னைத் தேடித்தேடி
வாசல்கதவினை உளைக்கிறாய்.

காற்றாகிப்போனாலும் கதவினை
கரிசனத்தொடே அடைக்கிறாய்,

எப்படியும் ஒருநாள் உன்காற்று வரும்
என்ற முழுமையான நம்பிக்கையுடன்.

அவனுக்கு இது பிடிக்கும் என்றே
அந்த சமையல், காலமாய் அமையும்.

ஆகாசமாய் களைந்து அமர்ந்திருப்பினும்
ஆயாசமாய் படுக்கையில் சரிந்திருப்பினும்,

சந்திப்பில் நீ சிந்திய நினைவலைகளின்
நிகழ்வுகள் சொரூட்டுகிறது நிழலாய்.

மாடியில் காட்டிய கலவிக் கண்ஜாடை,
கண்டுகொண்டு புரட்டிய என் அறியாமை.

கடலைக்கறியினை எனக்காய் அமைத்து
மனமடி சமைந்து நின்ற நொடிப்பொழுது,

மலர்ந்த மனம் உடையவில்லை
உடலும் தன் நிலை மாறிடவில்லை என,

முட்டைகளை முன்னிலைப்படுத்தி,
உணர்த்திய உன்னின் அன்புக்காதல்,

பண்புடன் படைகொண்ட துணை கவ்வி
நடைபயிலும் விந்தையான வித்தைகள்.

நடத்திட முடியாத இன்ப உளைச்சல்,
நடத்திநிற்கும் கனவுகள் விதைத்து.

இந்த நொடி நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்
என்ற கனவிலேயே நகருகிறது வாழ்க்கை.