Wednesday 29 May 2013

பாதை மாறிய ரயில் பயணம்

கூலி வேலை செய்து வரும் வருமானம் அவனின் தாய்க்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. எத்தனை நாட்கள் அம்மாவின் வருமானத்திலேயே வாழ்ந்து கிடப்பது. அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டார். குடி, குடி கெடுத்துவிட்டது. தக்கிமுக்கி +2 படித்து முடித்துவிட்டேன். வேலைதான் கிடைக்கவேயில்லை. அத்தனை கெஞ்சியும் வேலைதர யாவருக்கும் முடியவில்லை. கூலிவேலை பார்க்க அம்மா பலமுறை அழைத்தாள். மனமில்லை. மேலும் அதில் நுழைந்திட்டால் காலம் முழுமைக்கும் அங்கேயேதான். அம்மாவை உட்காரவைத்து உணவு பரிமாறி, இன்பமாக அவளை வாழவைக்க வேண்டும். அம்மாவிடம் சொன்னான், மதுரைக்கு சென்று வேலை பார்க்கப் போவதாய். அம்மா கொடுத்த காசை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
மதுரையின் வீதிகளிலெல்லாம் அலைந்து திரிந்து, களைத்து, காசை காலிசெய்து, இப்பொழுது என்ன செய்வது என்பதினைக்கூட செய்வதறியாது சென்னை செல்லும் ரயிலில் டிக்கெட்கூட எடுக்க முடியாமல் ஏறினான். பசி வயிற்றைக் கிள்ளியது. அப்பொழுதுதான் உணர்ந்தான் உணவுகொண்டு 2 நாட்கள் கடந்ததை. அப்படியே சுருண்டு படுத்துவிட்டான். திண்டுக்கல் வந்தது. அருகினில் அமர்ந்திருந்தவர்கள் பேசிக்கொண்டு உணவருந்தினர். அவர்களிடம் கைனீட்டி பிச்சையெடுக்க மனம் கூசியது. அவர்கள் பேச்சிலிருந்து அந்த பிரியாணி, வேணு பிரியாணி என்பதுவும், அது மிகவும் ருசியானதுமாக இருக்குமெனவும் அறிந்துகொண்டான். பசி மேலும் கொன்றது. எழுந்து அமர்ந்தான். அப்பொழுது அவனருகில் ஒரு அழகான இளம்பெண், வயது 14 தானிருக்கும், நின்றுகொண்டு வெள்ளரிப்பிஞ்சு விற்றுக்கொண்டு இருந்தாள். இவனைப் பார்த்ததும் புரிந்துகொண்டுவிட்டாள் இவன் பசியினால் துடிக்கிறான் என்று. கரிசனத்துடன் உடனேயே 4 பிஞ்சுகளை அவனுக்குக்கொடுத்து சாப்பிடச் சொன்னாள். அவன் அவனிடம் காசு இல்லை என்பதினை சைகை செய்தான். அவள் அதை பொருட்படுத்தாமல், அவன் கைகளினுள் பிஞ்சுகளை திணித்தாள். அவற்றை உண்டவுடன் உடனேயே உயிர் வந்ததை உணர்ந்தான். அவள் இப்பொழுது மற்ற இடங்களுக்குச் சென்று விற்கத்துவங்கினாள். சிறிது நேரத்திலேயே கூடையில் இருந்த அத்தனை பிஞ்சுகளையும் விற்றுத் தீர்த்தாள்.
பின்னர் அவனருகில் வந்திருந்து அவனை பற்றி விசாரித்தாள். சொன்னான். அவர்களுக்குள் நன்றாகப் பேசிக்கொண்டார்கள். அவள் தினமும் 6 கூடைகள்வரை பிஞ்சுகள் விற்கிறாள். ஒரு கூடைக்கு செலவுபோக 250 சம்பாதிக்கிறாள். உற்சாகமாக கதைகளைக்கேட்டபின் மனதில் ஒரு இனம்புறியாத நம்பிக்கை பிறந்தது அவனுக்கு. அவள் சொன்னாள் வேணு பிரியாணி பொட்டலங்கள் விற்றால் நல்ல வியாபாரம் நடக்கும் என்றும் ஒருனாளைக்கு 1000 ரூபாய்வரை சம்பாதிக்கலாம் என்றாள். திருச்சியில் இறங்கி மறுபடியும் திண்டுக்கல் அவளுடனேயே வந்துவிட்டான். இரவு ப்ளாட்ஃபாமிலேயே படுத்து உறங்கினான்.
மறுனாள் அவளே அவனை வேணு பிரியாணி ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றாள். இருவரும் சேர்ந்தே தொழில் செய்வது என்று முடிவு செய்தனர். நினைத்தபடியே தொழில் நன்றாக இருந்தது. ஊருக்குச் சென்று அம்மாவையும் கூட அழைத்து வந்துவிட்டான். 5 வருடங்கள் கடின உழைப்பு. அவளையே திருமணம் செய்துகொண்டான். இப்பொழுது வீட்டிலேயே பிரியாணி தயார் செய்து ரயிலில் விற்கிறார்கள். வீடு கட்டிமுடித்தபின் அம்மாவுக்கு வைரத்தோடு வாங்கிக் கொடுத்தான். அவள் ஆனந்தமாக அதை ரசித்தாள். மருமகளுக்கே அதைப் பரிசாகக் கொடுத்தாள்.

தாய் மடியில் தலைவைத்து மனைவியின் மடியில் கால்வைத்து அப்படியே தூங்கிப்போய்விட்டான்.

Sunday 26 May 2013

காதலும் கடவுள்நிலையும்


அவள் என்னைப்போலவே நல்ல புத்திசாலிதான், ஆனால் அனாவசியமாக பயம்கொள்வாள். அவள் கண்கள், கவர்ந்திழுக்கும் காந்தம். என்னையும் அவளின் கண்களாலேயே இழுத்துக்கொண்டாள். கூந்தலின் அந்த அழகினிலேயே மயங்கிக்கிடக்கலாம், அவ்வளவு கருத்த அடர்த்தி. அதன் நருமணம் அவள் மணமா? அல்லது மலர்களின் மறுமணமா? புரிந்துகொள்ளமுடியவில்லை. மயங்கியபின் எழமுடியவில்லை. அழுந்த விரல் பதிக்கும் கன்னங்களில் குவிந்து நிற்கும் அந்த இதழ்கள், தேன் பதுங்கும் அழகிய பலாச்சுளையினை நினைவுருத்தும். உருத்தும் மனம் உருகி உள்செல்லத் துடிக்கும். அவள் பெண்தான், ஆனாலும் அழகிய தோள்கள் உரம்பெற்றவை. சுற்றிவளைத்து இருக்கையில், பிடிக்கையில் கொஞ்சிவிளையாடிடும் அந்தக் குஞ்சுமுயல்கள், உயிரில் ஒருமுறை விஷம் கலக்கும். மீண்டால், மீளமுடிந்தால் அங்கு வந்து மெத்தையிடும் அந்த இடைவயிறு. உணவுக்குத்தானே வயிறு, இதென்ன உயிரை உண்ணத்துடிக்கிறதே! தொட்டுவிட்டால் ஒரு உயிர்த் துடிப்பு. விட்டுவிட்டால் ஒரு சிறு மரணம். முத்தமும் மொத்தமும் ஆக சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லும் நரகப்பாதைகள்.
சொர்க்கத்திற்கான சொர்க்கப் பாதைகளும் அங்குண்டு. செல்லும்வழி புதுமை. உண்மை நிரம்பியது. இறப்பற்றது. உயிர்ப்புடன் வாழ்வது. இன்பம் நிரம்பியது. கடவுளை உணர்த்துவது. முடிவானது. முடிவில்லாதது. அதற்குமேல் இவ்வுலகில் அடைய ஒன்றுமில்லை.   
முழுமையான முத்தம், இரண்டறக் கலந்த நிலை. மடியினில் அமர்ந்தநிலை. உரச உரச உயிர்கொண்டு துடிக்கும் ஒவ்வொரு தசையின் உயிரணுக்களின் கலப்பு. உங்காந்தம் எங்காந்தம் மறைந்து நம்காந்தமாகின தருணம். கைகள் வளைத்துப் பின்னி, கால்கள் வளைய, உதடுகள் உருகியோடி, ஒட்டிய திசு ஒன்றாய்க்கட்டி, குருதிக்காய்ச்சலில் இருகி வீங்கியவன் கிடைத்த இடம் செருகி, கற்பவாசல் முட்ட, பிதுங்கின வாசல் அமைதியாகி, தேனுதிராமல், பரிமாற்றக் காந்தக்கலவை நிகழ்ந்து, உரைந்து, அசைவற்று, ஒன்றாகித் திளைக்கையில் உருவாகுமாம் இறுதினிலை, உண்மையாம் இறைனிலை, காலம் மறந்து, மறைந்து. 

Friday 24 May 2013

இறைவா, ஆத்மார்த்தக் காதலி


உன் பாரத்தையெல்லாம் உன் இதையத்தில் ஏற்றிவிடாதே, நான் அங்கேதான் குடி இருக்கிறேன், என்னால் அந்த பாரத்தை தாங்கிட முடியாது என்கிறாய். சொல், என் மன பாரங்களையெல்லாம் நான் யாரிடம் சொல்லிட முடியும், உன்னிடமன்றி. காதலுக்குறிய மரியாதை அதுவன்றோ. அடுத்து என்னுயிரில் கலந்திட்ட உன்னையன்றி, எனக்கும் என்னைக்கொட்ட எங்கு செல்வது? இறைவா  எல்லையில்லாத அன்பு உன்னிடம்தானே இருக்கின்றது. என் பாரங்கள்......
அறிவுப்பசி கொண்டவன் நான். ஏதாவது புதியதொன்ரை கற்றுக்கொண்டே இருக்கப் பழகியவன். சுத்தம் என்பதற்கு அர்த்தமாக வாழ்பவன். வீட்டினில் ஒரு சிறு தூசிக் குமியலைக்கூட அனுமதிப்பவனல்ல நான். வாயுபகவான் என் வீட்டில் ஒவ்வொரு நொடியும் வாசம்செய்திடல் வேண்டும் என அவனுக்குக் கட்டளையிட்டிருப்பவன். எல்லோர்க்கும் அன்பு செய்தலையன்றி வேறெதும் செய்பவனல்ல. என்வீட்டில் எந்தவேளை யார் வரினும் உணவு கொள்ளாமல் செல்ல அனுமதியில்லை. அப்படித்தான் விருந்தோம்பலை என் தாய் எனக்குக் கற்றுத்தந்திருக்கின்றாள். உதவி எவர்க்கும் தேவையெனில் அவர்கள் கேட்கும்முன் என்னால் முடிந்தவற்றை செய்திருப்பேன். பெண்மையை வணங்குபவன். பெண் குழந்தைகளை மிகவும் பிடிக்கும். தாயின் கைவண்ணத்தால் ருசித்த உணவின் வகையினை ரசித்தவன். எல்லோரின் கருத்துக்களுக்கும் மறியாதை அளிப்பவன். ஆனாலும் சிறந்த முடிவினை அறிவுருத்துபவன். எல்லா வகை விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவன். நேரம் தவறாமை கூடவே பிறந்த குணம். சொன்னால் சொன்னதுதான், யோசித்து முடிவெடுத்தபின். என்னாலேயே மாற்றிடமுடியாது. ஒரு விஷயத்தை எடுத்தால் முடிக்கும்வரை ஓய்வதில்லை. சிந்தனையில் குளித்துக்கொண்டே இருப்பேன் இரவுபகல் பாராமல். முதல்காதலை மொத்த குடும்பமும் எதிர்க்கையில் காதலி கைவிட்டதால், ஒத்துழைக்க மறுத்ததால் ஒதுங்கிக்கொண்டவன்.
வந்த மனைவி, என் குணாதிசயங்களில் ஒரு விழுக்காடுகூட தேறாமல் ஒத்துவராததால் வாழவழியின்றி, ஒதுங்கிடவும் வகையின்றி தன்வழியில் ஓடிக்கொண்டிருப்பவன். இறைவன் ஆட்டுக்குக்கூட வாலை அளந்துதான் படைத்திருக்கின்றான். அதனாலேயே மழலையில்லா வீடாகிப்போனது என்வீடு. காணுமிடமெல்லாம் அன்பு செய்து அந்தக் கறையினை போக்கிடல் வேண்டாமோ, அதுவும் நடந்திட இங்கு வழியில்லை. ஒரு கையோசைதான். அது சத்தம் வாராத ஒரு யுத்தம். என் வாழ்னாளில் இவ்வளவு நெஞ்சழுத்தம் கொண்ட பெண்ணினைக் எந்த வடிவத்திலும் கண்டதேயில்லை. கடவுள்தான் அவளைக் காத்திடல் வேண்டும்.  
உன்னின் உறவால், அன்பால், அரவணைப்பால் இறைவனை உணர்ந்தவன். வாழ்வின் அர்த்ததை அறிந்தவன். தூக்கி நிற்கும் பாரங்களை பாரமாக நினைக்காதவன். அவற்றை இதயத்தில் தூக்கிச் சுமந்தால் அந்தச் சுமையினை உன்னால் சுமக்க முடியாது என்பதால், உடலில் மனநோயாக சுமக்கிறேன். மருந்துபோட மட்டுமே உன்னின் மடிதேடுகிறேன் எனதன்பே....  

Thursday 23 May 2013

நீ அறிவாயோ?


புன்னைகையில் என்னைக்
குளிரவைத்தாய் எப்பொழுதும்.

என்னுயிருக்கு உற்சாகத்தை
ஊற்றிக் கொடுப்பாய் முப்பொழுதும்.

கட்டாயம் வருகிறேன் என்பாய்,
முடிவாய் நிச்சயமாய் வரமாட்டாய்.

கேட்டுப்பார் என்பாதங்கள் உரசிச்
சிவந்த அந்த நூலக வாசலை.

ஏமாற்றத்தில் உளையும்வேளை,
மறைவாய் ரசித்தேன் என்பாய்.

எங்கும் எதிலும் விளையாட்டுத்தான்
உனக்கு,வதங்கும் மனம் அறியாய்.

இதயத்தில் பாரத்தை ஏற்றாதே
என்கிறாய்,பாறாங்கல்லாய் பாரத்தை
ஏற்றியதே நீதானே. நன்றாக சும.

எனக்குள் ஏற்றிடும் இந்தச் சுமைகள்
இன்பத்தில் மிதக்கச் செய்யும் கலைகள்,
என்பதினை நீ அறிவாயோ?

Wednesday 22 May 2013

என் இனியவளே


உன்னியுன்னி பருகின குட்டிகள்,
வைத்தவாய் எடுக்கமுடியாமல்
அயர்ந்தன அம்மாவின் மடுவின்மேல்.

உருகி உளறித் தவித்த காதலன்,
உட்புக முயன்று தோற்றும் கனிந்த
முகம் புதைத்தான் மடுவிடையில்.

உரையில் செருகிய வாளின் உயிர்,
வழிந்து பருகிய தேனில் இறுகி,
வளைந்து குலைந்து நின்ற நிலா.

கற்பனையில் ஆயிரம் முத்தம்
பதித்தாலும் திகட்டுவதில்லை,
ஆன்மக் காதலின் காதலுக்கு.

காதோர கூந்தல் நரைத்த போதும்
என்னை காதலித்த காலத்தில்
நீ எப்படி
அழகு ரதியாக மின்னினாயோ

அதை போல
நூறு மடங்கு அழகில் கூடி விட்டாய்
இன்று நமது பிள்ளைகளுக்கு
திருமணம் செய்யும் நிலையிலும்

நீ மின்னுவதை

பார்க்கும்போது
நட்சத்திரக்கூட்டம்
வெளியே தலை காட்டவே
பயந்து போய்
எங்கோ ஒளிந்து விட்டது...

ஒரு முறையாவது
உன் மன வேதனையை
என்னிடம் கொட்டி விடு

உனக்குள் மூடி மூடி
வைத்து வைத்து
இதயத்தில் பாரத்தை ஏற்றாதே.....

ஏன் என்றால் அந்த இதயத்தில்
நான் இருக்கிறேன்
என்னால் அதிக பாரத்தை
சுமக்க முடியாது

என் இனியவளே....

Monday 13 May 2013

தேட வைக்கும் காதல்..!


எல்லா பேருந்து பயணத்திலும்
எனக்கென்ன என்று
என் தோள் சாய்ந்து விட்டு
நீ சென்று விடுகிறாய்..

நீ போன பின்னும்
அந்த சுமை கேட்கும்
என் தோள்களுக்கு
நான் என்ன சொல்வேன்..

உன்னை உரசிய ஸ்பரிசம் தேடி
என் உறக்கத்தை கலைக்கும்
உள் உணர்வுகளை எப்படி அள்ளி முடிப்பேன்..

எல்லாம் என்னில் இருந்த போது
காதல் மட்டும் தேடினேன்..

காதல் கிடைத்தபின்
தொலைக்க முடியாததை கூட
தேடித் தவிக்கிறேன்....

நிலவைத் தொடும்
எண்ணம் வருகிற போதெல்லாம்
உன் நினைவை தொட்டு
விண்ணில் பறக்கிறேன்..

என் வாழ்க்கை ஓடம்
தரை தட்டும் நேரங்களில்
உன் வார்த்தை துடுப்புகளில்
என்னை ஏந்திக் கொள்கிறேன்...

ஆசை அலை என்னில்
முட்டும் போது
உன் விழி தீண்டலில்
என் விரதம் முடிக்கிறேன்..

வார்த்தை ஜாலங்களில்
யாரேனும் எனை வசை பாடும்
நேரங்களில் நீ பரிசளித்த
"பொறுமை" சிறகில் பயணம் மேற்கொள்கிறேன்..

காதல் ஒன்று தான்
உன்னில் கொடுத்தேன்...
வாழ்வுக்கான அத்தனையும்
அட்சயபாத்திரமாய் நீ அள்ளி தருகிறாய்..!

Saturday 11 May 2013

காதல் காதல் காதல்


கண் பட்டது,
உள்ளம் தொட்டது,
மனம் கனிந்து விட்டது,

நெருங்க சுட்டது,
அள்ளியள்ளி இட்டது,
திரும்பவும் விரும்பிக் கட்டது,

மயங்க மயங்கும் கூட்டது,
உயிர் கலந்து கெட்டது,
உரக்க உரக்கக் கேட்டது,

கிறங்கிக் கிடக்கும் சிட்டது,
தங்கத் தாம்பாளத் தட்டது,
உயிர் படைக்கும் திட்டது,

மிஞ்சிய அளவு தீட்டது,
ரத்தம்வரை தொட்டது,
அத்தம்வரை எட்டது,

பிறப்பில் கொண்ட பாட்டது,
இறவாத உயிரின் பூட்டது,
வெடித்துச் சிதறும் வேட்டது,

பூத்த கொடி நட்டது,
உதிராத முத்தம் நீட்டது,
ஊனை உதிர்த்து பிட்டது.

மறுபடியும் கசிந்த ஒளியில்
கண்கள் கண்ணில் பட்டது.

Wednesday 8 May 2013

இதுதான் காதலா


திரும்பின திசையெங்கும்
வேலால் குத்தும் கொடூரம்.
முன்னும்பின்னும் மூளையை
சிதைக்கும் சிந்தனை பாரம்.

கிழக்கே சில கதறல்கள்,
வடக்கே சில வன்மங்கள்,
தெற்கே சில தன்மானத் தெறிப்பு,
மேற்கே சில மனித அத்தங்கள்.

வானத்தைப் பார்த்தேன்,
விரிந்துகிடந்த சூனியம்.
விண்ணுக்குள் அலையலையாய்
உந்தன் இனிய வாசம்.

உற்று நோக்கினேன்,
ஊடே உடனே உரைத்தது
மறைந்துகிடந்த உன்னின்
ஒப்பிடமுடியாத அன்பு.

அதைத்தான் காதல் என்கிறோமா?
மனமும் ஊணும் குளிர்ந்தது...
மஞ்சத்தில் மகிழ்வைக் கவிழ்ந்தது
திணறி முட்டிநின்ற மூச்சு.