Sunday 21 October 2012

சிறைஎடுக்காதே


கருங்கூந்தலாய் படர்ந்து கிடந்த
வான்மேகம் உதிர்த்தது தேன்மழையை.

மனம் விரும்பி மணம்பரப்பும் மலர்கள்
மயங்கி அதில் தேன் கலந்தது.

காதலியே, கலந்ததேனை பிரித்தெடு
எனில் நானென்ன அன்னமா சொல்.

சிக்கிய என்னை பிரித்தெடுக்க
சிறகெடுத்து வந்தவளே கொஞ்சம் நில்.

நிலாவிடமே சொல்லியுன்னைச்
சிறையெடுக்க அனுப்பிவைக்கவா?

அந்த ஒரு நாள்


அது ஒரு இன்பமான மாலை,
என் தோட்டத்தினைத் தொட்டதும்
பூத்துச் சிணுங்கிய முல்லை
தெவிட்டாத தேனை ஊறியது.

அது வேரில் பழுத்த பலா,
வேர்விழுது பட்டதும் துடித்த நிலா,
வாரிவிழுந்து எடுத்துக் கொண்டது,
தேன் சிந்திய முல்லையை.

திறந்த புத்தகம் வேதனைதான்,
பிறந்து ஆளான அன்றைய நிலை,
கொண்டுதந்தது இன்பமான இந்தவேளை,
இந்தவேதனை, நரக சிந்தனை.

மனதில் வலுவில்லை


கனல் கக்கும் கோபத்தில்
காததூரம் கடந்திருப்பினும்,

கண்ணே, உன் ஒரு கண்ணசைவு,
கலவரப்படுத்தி கவிழ்த்திக் கட்டிக்கொள்கிறது.

ஓடவும், விலகவும் முடியாமல்,
விரும்பவும், ரசிக்கவும் தெரியாமல்,

விட்டில் பூச்சியின் விண்ணளந்த,
வித்தையாய் முடிந்துவிடுகிறது.

காட்டுமாடை கவ்விக் கிடக்கும்
ஓநாய்கள்போல் உயிருடன் கொல்கிறாயே?

என்செய்வது, காதலிலிருந்து
கடைசிவரை தப்பமுடிவதில்லையா?

கருணைகொள் அன்பே, இனியொரு
துன்பம் சுமக்க மனதில் வழுவில்லை.

முழுவதுமாய் கொடுத்துவிடுகிறேன்,
என்னை கொளுத்துவதுவும் உன்கையில்.

விலகியோட முனையும் ஒவ்வொரு
தருணமும் முன்னைவிட ஒட்டியே தவிக்கிறேன்.

ஒருவழிசொல்


என்னைத் தோல்வியுறச் செய்வதில்
அப்படியென்ன மகிழ்ச்சி உனக்கு,
எனதன்புக் காதலியே?

என் வருத்தமான, சோகமான
ஊஞ்சலில் சுகமாக, சந்தோசமாக
உன்னால்மட்டும் எப்படி ஆடிவரமுடிகிறது, என்னாருயிரே?

என்தோல்வியின் மேல்தான் உன்னின் ஆகாசக்கோட்டை அமையுமென்றால்,
அதில் எனக்கொரு அனுமதிச்
சீட்டைமட்டும் கொடுத்துவிடு.

ஒரேயொருமுறை என் கூப்பாடுக்கு,
ஒரு ஹல்லோ சொல்லிவிட்டாயானால்கூட போதும், என் இதயம் துடிப்பதை நிறுத்திக்கொள்ளுமே என்னன்பே!

இன்றைய மாலையையாவது
பூங்காற்றின் மென்மையையும்,
பூக்களின் நறுமணத்தையும்,
மனதின் புதுப்புது சங்கீதத்தையும் தொடுத்து நிரப்பிடுவாயா என் கண்மணியே!

ஓட்டையாய் கிடக்கும் இந்த உடலினுள்
ஈட்டியாய் குத்தாமல், சாரையாய்
சுற்றிப் பிணைந்து சாஸ்திரம்
உரைக்கமாட்டாயோ?

ஊஞ்சலில் நீயாட, உன் ஓரவிழியில்
நானாட, உள்ளத்தின் மையத்தில்
நம் காதலாட, கடைசி நிமிடம்வரையில்
உன்னைநான் கொன்றுகொண்ட இருக்கவேண்டும்.

ஊசலாடும் உயிர், ஓய்ந்துபோகாமல்
உடலுடன் ஒட்டிவிட உதவிடுவாயா உயிர்த்தோழியே, என்ஜென்மப்பாதியே!

ஒளிகண்ட இருள்போல்


எத்தனை அம்புகள், ஈட்டிகள்
என்னோக்கி எறியப்பட்டும்
அமைதியாகத்தானே நின்றேன்.

உன்னின் பார்வை, நேர்குரலுக்காய்
எத்தனை விண்ணப்பங்கள்? முடிவில்
கஜினி, புறமுதுகிட்டு ஓடிவிட்டான் இங்கே!

வேண்டாம் விட்டுவிடுவென
விலகிச்செல்லும் அலைகளை,
விடுவதாயில்லை ஆழ்கடல்.

முகத்தில் வீசிய சொல்மறந்து
முண்டிக்கொண்டு செல்கையில்
முன்வந்து தடுத்து நிற்குது உன்னான்மா.

நேருக்குநேரான போரெனில்
வெற்றி பற்றி சற்று சிந்திக்கலாம்.
இது காற்றுடனான போர். தோல்விதான்.

இனி இந்தப் பூங்காற்று புயலானபின்,
பூத்த மலர்களுக்கு புண்ணியமில்லை.
மறைமுகம் இல்லையினி, நேர்முகம்மட்டுமே.

முகம் காட்டு இல்லை வீழ்ந்துபோ.
ஓடிக்கொண்டேயிருக்கிறேன் நான்,
உன்னோக்கியல்ல, எதிர்த்திசைநோக்கி.

என்னோக்கி முகம் திருப்பியநொடி,
ஓடியிருப்பேன் நான், ஓராயிரம் அடிகள்.
வெளிச்சம் வந்தபின், நின்ற இருள்போல.

காதலின் நிரந்தரம்


குளிர்த்தென்றல் கைவீசும் சுகம்,
மேகம் மழையுதிர்க்கும் நேரம்தான்,

வானமகள் உதிர்க்கும் மின்னல்,
கண்சிமிட்டி மகிழும் நேரம்தான்.

சந்தோஷ மலர்கள் மலர்ந்துநிற்க,
காதல்தோஷம் முடிந்தநேரம்தான்.

ஒட்டிக்கிடக்கும் சோகத்திலும்,
கூவிக்கிடந்த குயில் கதறியது.

சுகம் விதைத்து சுகித்தால்,
சோகம் வந்து சுரம் பிரிக்கிறது.

சோகம் வைத்தால் சுகமேனில்,
சோகமே சுகமாய் பூக்கிறது.

இறைவா எனக்குமட்டும் ஏன்
நிரந்தரமாய் நிம்மதி மறுக்கிறாய்?

காதலே கற்பு


காதலின் பிறப்பிடம் இறைவன்,
கற்பு, அன்புக்காதலிடம்தான், கொள்,
கைகொண்ட துணையுடனில்லை.

அப்படியில்லையெனில் அது
கைமாறிக்கொண்டே இருக்கலாம்.
காதல், களம் மாறிடுவதில்லை.

உயிர்த்தன்மை கொண்ட காதல்
ஒருபோதும் அழிவதில்லை. அஃது
கடலினைப்போல அமைதியானது.

மாறி உழன்றிடும் அலைகள்போல்
உருவங்கள் மாறிடலாம் துணையிடம்.
கலவிசுகம் உடல் கொள்ளுதற்க்காய்.

மழை பொய்த்த மேகம் செல்லும்.
கொண்டுசெல்லுமே அழிந்த கற்பை,
காதல்தன் கலவித் துணையிடம்.

Tuesday 16 October 2012

உயிர்த்தோழியே

 என்னைத் தோல்வியுறச் செய்வதில் அப்படியென்ன மகிழ்ச்சி உனக்கு, எனதன்புக் காதலியே?
என் வருத்தமான, சோகமான ஊஞ்சலில் சுகமாக, சந்தோசமாக உன்னால்மட்டும் எப்படி ஆடிவரமுடிகிறது, என்னாருயிரே?
என்தோல்வியின் மேல்தான் உன்னின் ஆகாசக்கோட்டை அமையுமென்றால், அதில் எனக்கொரு அனுமதிச் சீட்டைமட்டும் கொடுத்துவிடு.
ஒரேயொருமுறை என் கூப்பாடுக்கு, ஒரு ஹல்லோ சொல்லிவிட்டாயானால்கூட போதும், என் இதயம் துடிப்பதை நிறுத்திக்கொள்ளுமே என்னன்பே!
இன்றைய மாலையையாவது பூங்காற்றின் மென்மையையும், பூக்களின் நறுமணத்தையும், மனதின் புதுப்புது சங்கீதத்தையும் தொடுத்து  நிரப்பிடுவாயா என் கண்மணியே!
ஓட்டையாய் கிடக்கும் இந்த உடலினுள் ஈட்டியாய் குத்தாமல், சாரையாய் சுற்றிப் பிணைந்து சாஸ்திரம் உரைக்கமாட்டாயோ?
ஊசலாடும் உயிர், ஓய்ந்துபோகாமல் உடலுடன் ஒட்டிவிட உதவிடுவாயா உயிர்த்தோழியே, என்ஜென்மப்பாதியே!

Sunday 14 October 2012

என் சுவாசம்


கண்ணிமை காட்டி
என்னை களவாடினாய்

தொலைந்த என்னை
தேடுகிறேன்

உன்னில் நான் இருந்தால்
சொல்லி விடு !....

விட்டு விடுகிறேன்
தேடுவதை......

நெருப்பாய் சுடுகிறாய்
மெழுகாய் உருகுகிறேன்
என் வேதனை புரியவில்லையா ?...........

ஏங்குகிறது மனம்
கரைகிறது என் காதல்
கருணை பிறக்காதா....................................

என்னை பாரடி கண்ணே
என் இதயம் துடிக்கவில்லை

என் உயிர் போகிற ஒலி
கேட்கிறதா.........

என்னை மறுத்தது ஏன்?
விடை சொல் ..
சுவாசிக்க மறுக்கிறது
என் சுவாசம்

சில்லென்ற ஒரு
வார்த்தை சொல்

மீண்டும் பிறந்து வருகிறேன்
உனக்காக ..........

Monday 8 October 2012

கவிதையே போதும்


சிந்தித்தேன், இதழ் சிந்தித் தேன் எடுத்து,
சினம் சிந்தி எரித்துவிட்டாள்.

சிரித்தேன், வஞ்சி தேன் வந்துநிற்கும் என,
எண்ணிய என்னை நானே வஞ்சித்தேன்.

பார்த்தேன், தேன் எடுக்கவந்த வண்டை,
சிறகொடித்த சூறைக்காற்றாய் நீ!

மறந்தேன், மஞ்சம் எண்ணிய நெஞ்சம்,
உரித்துச் சேர்த்த உந்தன் கவிதைகளை.

கரைந்தேன், கவித்தேன் கலக்கும் இந்த
நிரந்தரம் போதும் என் மீண்டும் கலந்தேன்,

பயமில்லை


விழுந்த ஒரு துளியையும் திரும்ப
விரும்பி எடுத்துக்கொண்ட கார்முகிலே,

அரும்பிய மனதினில் நானென்ன காதல்
நிரம்பிய உன் நாணத்தையா கேட்டேன்?

திரும்பிக் கொண்டு நிற்கிறாய்.
குறும்பு செய்ய இதுஒன்றும் கூதக்காத்தல்ல.

பூத்தப்பூ நறுமணம் புரியவில்லை உனக்கு,
புரியுமா புல்லாங்குழலின் உருண்டோடுமிசை?

உள்ளத்தின் கொட்டமடிக்கும் புன்சிரிப்பு,
எனக்குமட்டும் புரியவில்லை பூத்தபோழுது.

இறைவன் கொடுத்த அந்த இனிய
இசையை இஷ்டமின்றி இசைப்பதேன்?

சிரிப்பில் கள்ளமில்லையென கரைந்தேன்,
சிங்காரி, சிரித்தே கொன்றுவிட்டாயடி சிரிப்பை.

இன்னும் ஜாலவித்தை எத்தனை வரும்சொல்,
மரணம் ஒன்றும் பயமில்லை எனக்கு.

Saturday 6 October 2012

முடிந்தது


முடிந்தது, முடிந்தது.
முடியாதது தெரிந்தது.
முடிந்தது முடிந்திருப்பின்,
முடியாதது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

முடிந்ததை முடியவே விடாமல்
முடித்தது, முயன்ற உன் முயற்சி.
முடிந்துவைத்ததை, முடித்து
முடிவில் சாதித்துக்கொண்டாய்.

முடிந்து முடிந்து முகம் மறைந்து,
முகம் முழுதும் கறை படிந்து,
முயன்று நின்ற முன்பாதி,
முயன்ற பின்நின்ற பின்பாதி,

உணர்த்திநின்றதே, அழித்துநின்றதே,
கணத்துநின்றதே, என் ஜென்மப்பாதி.
ஆண்டவா, துணைபுரிந்திடு போதும்
இனிவேண்டாம் வேறுஜென்மம்.