Thursday 28 February 2013

விலையும் காதல்


மயங்கிய மாலையில்
மறைந்த கதிரவன் உறங்கிவிட
உள்ளத்துப் புன்னகையுடன்
பூத்து நின்ற மூன்றாம்பிறை.

மனம் உறங்கி, மயங்கிய
உடலுறங்கி, கலைந்த இடை
மறுபடியும் உயிர்கொள்ள,
பூவையவள் முகம் பூத்தாள்.

மலர்ந்து குழுங்கும் மலருக்கும்,
மடிந்து வீழ்ந்த கானகக்கனிக்கும்,
மனம் வீசும் காதலுக்கும்
விளையாட விலைவைக்கும் கலை.

கன்னடத்துப் பைங்கிளிகளும்,
சுந்தரத் தெலுங்கின் சுந்தரிகளும்,
மலையாள மங்கையரும், மயங்கும்
மொழிபேசும் கண்ணாள், தமிழச்சி.

காதல் பேசிநிற்கும் விழியும், உருவும்
கைகளுக்குள் அடங்கிட மறுக்கும்.
உறவி உருமல் கலந்து
உரசும் படுக்கைக் உணர்த்தும்.

வார்த்தை மொழி இங்கில்லை,
உயிருருக்கும் காதல்மொழியுண்டு.
கட்டுண்டால் காண்கையில்
சுற்றிப்பிணைந்த நாகம்தனே.

முழுயிரவும் விளையாடி,
முனுமுனுப்பில் கவிபாடி,
சிலையேறிய மலர்ந்த வெள்ளி
மயங்கி மஞ்சளாய் வீழ,

மலையேறி கார்மேகமும் ஏறி
கார்கூந்தல் மேலே இட்டபூவாய்,
வானேறி வெள்ளிமுளைத்த காலை,
காட்டிய பாதையில் மறைந்தாள்.

பேரின்பமாய் சிற்றின்பம் விதைத்து.

புலியவள் பெண்

கரைபுரண்டு ஓடிடும் கங்கையவள். 
கங்கை கொண்ட வேங்கையுமவள். 
சங்கை தெரித்தோடும் குரல் மங்கையவள், 
சதங்கை சதிராடும் நடமாடிடும், 
பாங்கை, மங்கை கொண்டு குழைத்தவள் 
தங்கை நிலையறிந்த தங்கையவள். 
புங்கையின் நிழல் துயிழ்ந்து புன்னகை 
தவழ புங்கையை மறந்து நிற்பவள். 
முருங்கை, பங்கை வருத்தி வறுத்து, 
பருங்கை பதிய வெருங்கை கொண்டு, 
பங்கை போர் தொடுத்து பதம்பார்த்து, 
தேவைக்கு நீட்டிடும் பாசக்கையவள். 
தங்கையால் பிடித்த அக்காளை ஏறுவாள்.

உயிர்கொடுத்த உறவு...


அழகாய் ஒரு கூடு, அந்த வேம்பின் உச்சியில். அதில் உற்சாகமாய் இரு மைனாக் குஞ்சுகள். அம்மா இரைகொண்டுதர எதிர்பார்த்து நாள்முழுவதும் வாய்பிளந்து அவைகளின் இன்பக் கொண்டாட்டங்கள். களுத்தை நிறுத்த முடியாது ஊஞ்சலாட்டத்தில் நிற்கும் அந்த ஒரு குஞ்சியின் போட்டி போடும் அந்த உத்வேகம். வேலையென்னவோ உணவு உண்பதுமட்டுமே. காட்டுக்காற்றுக்கும், ஆடும் கிளை ஆட்டத்தின் அலைவுக்கும், கனலாய் சுடும் சூட்டுக்கும் கற்றுக்கொண்டுவிட்டன. அவைகளின் இப்போதய குறிக்கொள் ஒன்றுமட்டும்தான், உணவு. அதைத்தரும் தாயும், தந்தையும். மலர்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் உதவிடும் அந்த பூச்சி இனங்களும் அவைகளின் புழுக்களும்தான் அந்த உணவு. அந்தத் தாய்க்கும் தந்தைக்கும் முட்டையிட்டு குஞ்சுகளைப் பொறிக்கவைத்து பின் தன் குஞ்சுகளை வளர்த்து அவைகள் பறந்து பழகும்வரையிலும் அவைகளுடன் இருந்து பாதுகாப்பது. இதுவே ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் இட்டிருக்கும் கட்டளை, மனிதன் தவிர. அதாவது எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தன் இனத்தினைப் இனவிருத்திப் பெருக்குவது.
அப்படித்தான் அவைகள் இறைவனின் கட்டளைக்கேற்ப தன் குஞ்சுகளை வளர்த்து வந்தன. அவைகளை பாம்புகள், பருந்துகள், காக்கைகள் போன்ற தன் எதிரிகளிடமிருந்தும் கண்ணுற்று காப்பாற்றிடவும் வேண்டும். மைனாக்கள், சிறிய உடலமைப்பினைக் கொண்டிருப்பினும் அவைகள் மிகவும் தைரியம் கொண்டவை. எந்த எதிரிக்கும் பயப்படுவதேயில்லை. ஒருமுறை ஒரு நாகம் மரமேறின பொழுது, பறந்துபறந்து தாயும், தந்தையும் அதை பரமேற விடாமல் கடைசியில் அதன் கண்களில் கொத்துகொத்தென கொத்தி அது இறந்தே போக வழிவகுத்தது. இப்படியாக அவைகளின் இன்ப வாழ்க்கை இனிதே சென்றுகொண்டிருந்தது.
ஒரு அதிகாலை நேரம் ஒரு லாரியிலிருந்து கொட்டிக் கிடந்த அந்த தானிய வகைகளை பொறுக்க ரோட்டின் கரைகளில் பறந்து கிடந்தது அந்த தாய் மைனா. அதிகாலையின் மயக்கத்தில் அரைமனதுடன் செய்திருந்த அந்த வேலையில் க்ஷண நேரத்தில் பாய்ந்துவந்த அந்த விலையுயர்ந்த பென்ஸ்காரில் அடிபட்டேவிட்டது. ரோட்டின் விளிம்பில் அது துடித்துக்கிடந்ததை அதன் ஆண்துணையினாலும் ஒன்றும் உதவிட முடியவில்லை. அதன் கண்முன்னேயே அந்த மரணம் நிகழ்ந்து முடிந்தது. வேதனையை சுமந்த ஆண் அந்த ரோட்டினைக் கடக்க முயன்ற நிலையில் ஒரு பேருந்தில் மாட்டி அந்த இடத்திலேயே அதுவும் மரணித்தது.
கூட்டில் வாழ்ந்த இரண்டு குஞ்சிகளில் ஒன்று மிகவும் இளையது. சொல்லப்போனால் அதற்கு இரக்கையின் சிறகுகள்கூட இன்னும் முளைத்திடவில்லை. மற்றது கிட்டத்தட்ட முழுவடிவமும் அமையப்பெற்றது. தாயும், தந்தையும் இறந்த அந்த நாள் முழுவதும் அந்தக் குஞ்சுகளுக்கு உணவு தரப்படவில்லை. சிறிய இளைய குஞ்சு மிகவும் வாடிய நிலையில் இருந்தது. பெரியது கொஞ்சம் தெம்பாகவே இருந்தது. கலக்கமாக மட்டுமே குடிகொண்டு இருந்தது. மறு நாளும் தாய்தந்தையைக் காணாததால், கூட்டிலிருந்து பறந்து செல்ல முடிவெடுத்து ரெக்கையினை அடித்து பறக்கத் துவங்கியது. படபடவென பதற்றத்துடன் பறந்து அடுத்த மரம்வரையிலும் நன்றாகவே பறந்தது. கிளையில் அமர எத்தனித்த பொழுதுதான் தவறு நிகழ்ந்தது. அப்படியே கீழே விழுந்துவிட்டது. பின் எவ்வளவோ முயன்றும் அதனால் பறக்கமுடியவில்லை. அந்த வழியில் சென்ற ஒரு சிறுவன் அதைக் கண்டு அந்தக் குஞ்சியினை தூக்கி ஒரு சிறு கிளையின்மேல் அமர்த்திவிட்டான், ஒரு வலுவான கொத்து ஒன்றினை பெற்றுக்கொண்டே.
இப்பொழுது அதிகமான பயத்துடன் மேலெழுந்து பறக்கத்துவங்கியது. மிதக்கத்துவங்கியது. சுவற்றின்மேல் அமர்ந்து பழகியது. பலமுறை பழகிக்கொண்டு கூட்டிற்கு வந்துசேர்ந்தது. அங்கு மயங்கின நிலையில் இருந்த சிறுகுஞ்சி இப்பொழுது பட்டென தன் தாய்தான் வந்துவிட்டதென எண்ணி தன் மஞ்சள் கலந்த சிவப்பு வாயை பிளந்து காட்டி உணவு எதிர்பார்த்து நின்றது. பெரிய குஞ்சிக்கு இப்பொழுது அதன் தம்பி உயிருடன் இருப்பதுகண்டு சந்தொஷமாகியது. அவனுக்கு உணவு தேடி காட்டினுள் சென்றது. அப்பொழுது ஒரு எலுமிச்சை மரத்தினூடே அதிகமாக புழுக்கள் நெளிவதைக் கண்ணூற்று, அவைகளில் நன்றாக பருத்த புழுக்களை கொத்தியெடுத்துக் கொண்டு கூட்டை நோக்கி பறந்தது. தன் தம்பிக்கு அவற்றைக் கொடுத்தது. கொத்திய புழுக்களை அந்த சிறிய குஞ்சு படக்படக்கென விழுங்கி தன் பசியினை ஆற்றிக்கொண்டது. தன் அண்ணனைக் கண்டு சந்தோஷப்பட்டது. அண்ணனும் தம்பி உணவு கொண்டதும் தன்பசி தீர்க்க பறக்கத் துவங்கியது...

Tuesday 26 February 2013

உன் சிரிப்பில் என் வெட்கம்


தென்றலாய் வீசுகிறது...
மழையாய் பொழிகிறது...
மல்லிகையாய் மணக்கிறது....
முக்கனியில் மாவாய் இனிக்கிறது....

குறைகளின்றி களங்கமின்றி
அது போன்றவைகளின்
சாயல் கூட சற்றுமின்றி
மாயமாய் நிழல் கூட எட்டி நிற்க,

தும்பைப் பூ தூய்மையிலே
உன் விழி மிதக்கும் நின் நட்பு நோக்க,
புலிகண்ட சிறுமுயலாய் மனசஞ்சும்
உன்னிடம் காதல் சொல்ல!

என்ன தவம் செய்தேன். ..
என்னையே எடுத்தணைக்க...
என்னுயிரிலேயே உன்னைக்கலக்க...
எண்ணியன எனை எள்ளி நகைக்க.

Monday 25 February 2013

இல்லைஎன்றால் கொன்றுவிடுவேன்


நீ தான் என் சுவாசம்...
எத்தனையோ காதல்கள்
என்மேல் - எனக்கு
உன்மேல் மட்டுமே காதல்..
கண்ணனும் ராதையும்போல்....

முட்கள் நிறைந்த
என் வாழ்க்கையில்
நீ மட்டும் எப்படி ரோஜாவாக...??
தேனீக்களைமட்டும் துரத்திவிட்டு வா...

நீல வானத்தில்
நிலவினை போல - என்
நீள கனவினில் நீயடி..
நித்தம்னித்தம் நிலையிழந்தேனடி...

காதல் தேசத்து
அகதி நான்..
உன் காதலன் என்று
கைது செய்தாய்..
கண்களுக்குள் வாழ்வை...

சிறை எனக்கு அல்ல
உனக்கு
என் இதயத்தில்...!!
சொர்க்கத்தின் வாசலும்
நரகத்தின் வாசலும்
உன் கண்களில் தான்....
ஆயுள் தண்டனை.

என் கிறுக்கலை கவிதை
என்பவள் நீ...
கவிதைக்குள் இருப்பவளும் நீ...
கனவுக்குள் குடைவதும் நீ!

உந்தன் புன்னகையே
எந்தன் முகவரி....
அதனால் தான் என்னவோ
நான் தொலையாமல்
இருக்கிறேன்....
உனக்குள் தொலைந்து கிடக்கிறேன்.

இரவினில் கூட
உன்னைப்பார்க்கிறேன்...
கண்களால் அல்ல
கனவுகளால்....
அந்தக் கலவியினை மட்டும் தவிர்.

என் ஆதிமுதல்
அந்தம் வரை
உனக்கு அத்துப்படி
அது எப்படி...
என் ரகசிய உலகத்தின்
அரசியா நீ?
ஆட்சி கொள்ளும் தரிசியா நீ?

உன் வியர்வையை
துடைத்துவிடு...
தங்கத்தில் இருந்து முத்தென்று
தங்க வியாபாரிகள்
வரப்போகிறார்கள்...


பூக்கள் உன்னை பார்த்து
பேசிக்கொள்கின்றன
தினம் நாம் பூத்து
உதிர்கிறோம்
இவள் உதட்டில்
உதிர்ந்தால்
பூத்துவிடலாம் என்று..


சூரியனை மட்டும்
சுற்றும்
சூரிய காந்தி போல்
உன்னை மட்டுமே
நான் சுற்றிக்கொண்டிருக்கிறேன்...
சுழற்றி எண்ணை வடித்திடாதே!

காதல் மோட்சம்
அடைவதற்காய்
என்னிடம் உள்ள
ஒரே மந்திரம்....
உன் பெயர் தான்...
ஓம் நமோ நிலாப்பெண்ணே...

உன்னை எவ்வளவு பிடிக்கும்
என்று கண்டு பிடிப்பதற்குள்
கூடிக்கொண்டே போகிறது
உன்மேலான என் காதல்....
வானின் உயரம் வளர்தல்போல...

இதயத்தை தொலைத்துவிட்டு
தேடினேன்
கிடைக்கவில்லை...
இதயமே என்னை
தேட தொடன்கியது...
உன் காதல் வந்தபிறகு..

காகிதங்களை காலம்
தின்றுவிடும் என்பதால்..
உன் நினைவுகள் எல்லாம்
என் மன டைரியிலே...
மரணம்கூட அழித்திடக்கூடாதென...

தினமும் இரவில்
தோற்றுப்போகிறேன்...
கனவில் வரும் - உன்
நினைவு போராட்டங்களுடன்
போராடி...
பகலில் நினைவாக வாழ.

உனக்கு நான்...
எனக்கு நீ...
நமக்கு நாம் ..
இதில் உனக்கு அதிகம்
எது பிடிக்கும்...!!
நாமென்றால் இப்பொழுதே வா....

என் கவிதைகளை நீ
வாசிக்கிறாயா
தெரியவில்லை ஆனால்
என் கவிதைகளால் நீ
வாசிக்கப்படுகிறாய்...
நீமட்டுமே யோசிக்கப்படுகிறாய்....

நீ
தனிமையை விரும்புகிறாய்
நான்
தனிமைப்படுத்தப்படுகிறேன்..
நாம்
சேர்ந்ததால் தனிமை
தனிமையாகி விட்டது போலும்...
இறைவனை செய்து நிற்கிறோம்....

காற்றின் உருவம்
தெரிவதில்லை...
உன் காதலில்
குறையை கண்டதில்லை...
உளுப்பும் சுகம் மட்டுமே அறிவேன்.

என் வார்த்தைகள்
எல்லாம் மௌனவிரதம்
இருக்கின்றன..
நாம் கண்களால்
கதைத்து விடுவதால்...


உன் உதடுகளில் தான்
என் புன்னகை
மலர்கிறது...
கண்களில் கண்ணீர்
வராதவரை....
என்கண்களில் உன் கண்ணீர்.

எனக்கு மனைவியாக
(வர) தட்சணை
எவ்வளவு கேட்பாய்...??
முத்திரையாக
இதயத்தை ஒட்டி...
கன்னம் சிவக்க முத்தம் தட்டி.

காதல் கடிதங்களாக
கவிதைகளை அனுப்புகிறேன்....
உன் பதில் என்ன
காதல் தானே...?
இல்லைஎன்றால் கொன்றுவிடுவேன்....

Saturday 23 February 2013

இனியாவது இணைந்து நிற்போம்


ஒவ்வொரு நொடியும்
உன் அலைபேசி
அழைப்புக்காக காத்திருக்கின்றேன்...
எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைத்
தந்ததால் தானோ
உயிர் போகத் துடித்தேன்...
அன்பினை கொட்டிக் கொட்டி கொடுத்தாய்...
இனி கொட்டி கொடுக்க அன்பில்லை என்றா
என்னை விட்டு விலகிச் சென்றாய்...
என் பதிலுக்காக
நீ காத்திருக்கவில்லை...
உன் இனிமையான
வாழ்க்கையைக் காண
ஆவலுடன் காத்திருக்கிறேன்
உன் நலம்விரும்பியாய் நான்...
இதுதான் அன்பு
என்று உணர வைத்தாய்...
நான் உணர்ந்து நின்ற வேளையிலே
நீ வெகு தொலைவில் சென்றாய்...
மீண்டும் உன் வரவினை
எதிர் பார்த்துக்
காத்திருப்பவனாய் நான்...
எதிர்பார்ப்பைத் தந்தவன் நீயே...
எதிர்பாக்க வைத்தவனும் நீயே....
எதிர்பார்த்து நின்ற வேளையிலே...
எதிர்பாராமல் என்னை விட்டுச் சென்றவனும் நீயே...
உயிர் போக வலியைத் தந்தாய்...
இரணமாக இதயம் மாறக் கண்டேன்...
என் கவிதையின் வரிகளுக்கு...
உயிர் கொடுக்கிறது
சில நேரங்களில்
உன்னைப் பற்றிய நினைவுகள்!!!...
விக்கல் வரும் போதெல்லாம்
விம்மி விம்மி அழுகிறேன்...
என்றாவது ஒரு நாளாவது
நீ என்னை நினைக்கிறாயே
என்ற ஆனந்தத்தில் தான்...
எனக்காக நீ காத்திருந்த நொடிகளெல்லாம்
அலச்சியமாகவே தெரிந்தன எனக்கு...
ஆனால் இன்றோ?!!...
உன் இதழ் விரிக்கும்
ஒரு துளி புன்னகைக்காக
மாதங்கள் பல காத்திருக்கின்றேன்...
பொக்கிசமாய் அதனை
மனதிற்குள் பூட்டி வைக்க...
நாம் இயல்பாய் தான் பேசிக்கொள்கிறோம்...
ஆனால் கடந்த காலத்தைப் போல்
நன்றாக பேசிக்கொள்ளும் நிலை...
இல்லை போலும்...
நீ ஒன்று நினைக்க
நான் வேறொன்றை நினைக்க...
தானாக ஏதோ ஒரு வழியில் செல்கிறது...
நம் வாழ்க்கைப் பாதை...
இனியாவது இணைந்து செல்வோம்,
தண்டவாளங்கள் போல் அல்லாமல்.

Thursday 21 February 2013

உயிரே போனாலும் இறவாத காதல்.



உன் கயல் விழிகள் பார்த்து...
செக்க சிவந்த
பட்டு ரோஜாவின் இதழ்கள் பார்த்து....
பஞ்சிலும் மென்மையான
விரல்கள் பார்த்து.....
எதற்கும் அடங்காமல்
உன் அலைபாயும் கூந்தல் கண்டு,
விழுந்து விட்டேன் காதல் வயப்பட்டு.....
நான் மீண்டு எழுவதற்கு
பிடிமானம் எது?....
சென்றுகொண்டே இருக்கிறாய்.
தேடித் தேடி
களைத்துக் கிடக்கிறது உன் பார்வை.
அழுது அழுது
சலிப்பில் ஊறியபடி உன் விழிகள்.
கல்லையும் முள்ளையும்
கவிழ்க்கும் பள்ளங்களையும்
மட்டுமே சந்தித்து சிந்தித்து
நொந்து நொறுங்கி உன் பாதங்கள்.
முன்னே மறிக்கும் சுவர்களில் மோதி
உயிர் உடைகிறாய்...
நினைத்துநினைத்து நினைவு சுருங்கி
மனம் தவிக்கிறாய்.....
மரூவிமரூவி தூக்கம் மறந்து
துக்கம் கொள்கிறாய்.....


கொஞ்சம் திரும்பிப்பார்
நான்  உன்னருகில்தான் இருக்கிறேன்.
மடியில் சாய்ந்துகொண்டுதான் விசும்புகிறாய்.

Sunday 17 February 2013

உண்மையான நட்பு இது


அவன் பெயர் குரு. பெயருக்கேற்றாற்போல் அவன் படிப்பிலும் குருதான். எங்களுடன் ஆறாம் வகுப்பிலிருந்து 11 வரை படித்தான். பள்ளியில் எனக்கு நினைவில் இருக்கும்முதல் அவன்தான் முதல் மாணவன். நன்றாகப் படிக்காத என்போன்றவர்களை அவன் ஒருபொழுதும், அவனருகில்கூட நிற்க அனுமதித்ததில்லை. நான் சிலசமயம் நினைப்பேன், படிப்பைத் தவிர அவன் எதுவுமே செய்வதில்லையோவென்று. அந்த அளவுக்கு அவன் பள்ளியில் நடந்துகொள்வான்.
puc சேவியர் கல்லூரியில் படித்தோம். அவன் காமெர்ஸ் படித்தான், நான் கணக்கு. தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகளில் எங்கள் அறைக்கு எங்களோடு வருவான். என் வாழ்க்கையில் அந்தக் காலங்களில் என்னோடு ஒரிருமுறைதான் பேசியே இருப்பான். அந்தக்காலங்களில் பேங்க்வேலை கிடைப்பதென்பது எல்லா தகப்பனும் விரும்பும் வேலைதான். அதனாலேயே அவனும் காமெர்ஸ் எடுத்துப் படித்தான்போலும்.
கல்லூரிக் காலங்களிலேயே நாங்கள், நண்பர்கள் கூட்டம் ஒரு க்ரூப்பாகவே சுற்றிவருவொம். எல்லா கெட்ட பழக்கங்களும் படித்து வைத்திருந்தோம். சொல்லப்போனால் அவற்றில் கரை கண்டிருந்தோம். கல்லூரி வாழ்க்கைக்குப்பின் அவன் பீகாம் முதல் மாணவனாகவே தேறியிருந்தான். நல்ல மார்க் பெற்றிருந்ததினால் அவனுக்கு ஸ்டேட்பேங்கில் உடனே வேலையும் கிடைத்துவிட்டது. நான் வேலையெதும் கிடைக்காமல் என் தகப்பனார் கவனித்துவந்த கடைக்கே வேலைக்கு வந்துவிட்டேன்.
இப்படியே 3 வருடங்கள் ஒடிவிட்டிருந்தன. அவனை பலமுறை பேங்க் செல்லும் வேலையில் பார்த்திருக்கிறேன். கண்டுகொள்ளமாட்டான். பின்னர் பேங்க் பரிட்சைகளும் எழுதி முடித்து அதே பேங்கில் மேனேஜராகவும் ஆகிவிட்டான். அதன் பின் நானும் வெளியூரில் தொழில் துவங்கிவிட்டதால் அவனை சந்திக்கவே இல்லை. என் தற்போதைய வாழ்க்கை மிகவும் மாறிவிட்டது. இந்தக் கதைக்கு அதுபற்றியொன்றும் தேவையில்லை.
இருபது வருடங்களுக்குப்பின் மீண்டும் அவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவனுக்கு அப்பொழுது வயது சுமார் 42 இருக்கும், எனக்கும் அதுதான். ஆனால் அவனைப் பார்ப்பதற்கு 60 வயதுபோல இருந்தான். என்னால் அவனை அடையாளம் கண்டுகொள்ளக் கூட முடியவில்லை. அந்தளவு முகம் சுருங்கி வதங்கி இருந்தான். அவனின் சக ஊளியர்களிடம் அவன் பற்றி வினவினேன். அவர்களின் பதில் என்னை உறைய வைத்துவிட்டது.
மேனேஜராக பொறுப்பேற்றதும் அந்த பேங்கிலேயே வேலை பார்த்துவந்த ஒரு பெண்ணைக் காதலித்திருந்திருக்கிறான். அவள் மிகவும் அழகாக இருப்பாளாம். ஆனால் அவள் இவனை விரும்பவில்லை. பிறகு சிலபல குழப்பங்களுக்குப் பின்னர் அவள் வேறு ப்ரேஞ்சுக்கு மாற்றல் மாற்றக்கேட்டு சென்றுவிட்டாள். அதன்பின் அவனால் சரியாக வேலை செய்ய முடியாமல் காதல்பித்துப் பிடித்த பைத்தியம் போல் ஆகிவிட்டிருக்கிறான். அவனின் மேனேஜர் பதவியும் இதனால் போய்விட்டிருக்கிறது. காதல் தோல்வி, திருமணம் செய்துகொள்ள விருப்பமின்றி குடியினுள் அவனை இழுத்துக்கொண்டது. தற்பொழுது விழித்திருக்கும் பொழுது அவனால் மதுவின்றி இருக்கமுடிவதில்லை. கதையினை கேள்விப்பட்டதும் மனதை என்னவெல்லாமோ செய்தது. நான் பார்த்த தன்னிகரில்லா குரு, கோவனாண்டியைப்போல நிற்கின்றான். அவனைப் போய்ப் பார்த்தேன். என்னிடம் சாரி கேட்டான். என்னவென்று கேட்டதும், பள்ளியில் படிக்கும் வேளையில் நடந்தவைகளுக்காக என்றான். என்னவென்று சொல்வது.
அவனை அவன் வேலையை விட்டுவிட அறிவுருத்தி, என்னொடு அவனை அழைத்து சென்றுவிட்டேன். அவனுக்கு தொழிலில் ஒரு ஷேர் கொடுத்து என்னுடனேயே வைத்துக்கொண்டேன். இப்பொழுது அவன் குடிப்பதில்லை. ஆனாலும் திருமணம் செய்துகொள்ளமுடியாது என்றே சொல்லிவிட்டான். முகத்தில் ஆனந்தம் குடிகொண்டிருப்பதை உணரமுடிகிறது. சந்தொஷமாக இறையுடன் ஐக்கியமானவனாக தோற்றமளிக்கிறான் நல்ல நண்பனாக.

Tuesday 5 February 2013

அமுத சுரபி


அகல் விளக்கினைப்போல்
சுடர் விட்டு நிழல்விட்டு எரியுது.

முள்ளாய் குத்தினாலும்
முகமது சுகம் கொண்டு பரப்புது.

அன்னநடை ஏறி நடந்தால்
குழுங்கி அசைந்து சிரிக்குது.

அரசியாயினும் கோட்டை
மீதேறியே ஒய்யாரமாய் கிடக்குது.

இறையமைத்த மெத்தையே
இருப்புக் கதியாய் உறங்கித்தவிக்குது.

பசிக்கு விருந்தாய் அன்பாய்
ஊறிய அமுதூட்டி மகிழுது.

கைபிடிக்க இதமாக தந்து
தனை மறந்து கசங்குது.

கசங்கிக்கசங்கி இன்ப மழை
ஆன்மக் கடலினுள் ஊற்றுது.

பருவத்தில் பூத்த குலையாய்
வெளிவந்து உலகம் மிரட்டுது.

படைத்தவன் படைத்தான்,
படைப்பு மறந்து விடைத்தான்.

அடுத்தவன் பிடித்தான் படைக்க,
முதலடி எடுத்து வைத்தான்.

பாகனில்லாத ஆனை,
மீட்கப்படாத வீணை,

ஈர்க்கப்படாத மனம்,
குவிந்து தவிக்கும் பாலை,

இன்பக்குளத்தில் அக்கறையின்றி
அக்கரையில் நீ.

துன்பத்தனிமையில் துயரில்
இக்கரையில் நான்.