Wednesday 21 December 2011

என்னை மன்னித்து விடு தோழனே!!!...

நிலவு வளர்வதும் இல்லை...
தேய்வதும் இல்லை...
ஆனால்???...
கண்கள் காணும் காட்சி என்னவோ ...
அப்படித்தான்...

தோழனே!!!...
என் மீது கொண்ட
உன் நட்பின் அன்பும்
நிலவினைப் போல்தானோ...

சில நாட்கள் வளரும்
சில நாட்கள் தேயும்
ஒரு நாள்
இல்லாமலே கூட போகலாம்...

எஞ்சி நிற்பது என்னவோ
பசுமையான நினைவுகளையும் தாண்டி
மனதின் பாரங்கள் மட்டுமே...

அதுவும் ஓர் நாள் மறையலாம்
காலத்தின் மாற்றத்தால்....

தோழனே!!!...
உன் நட்பின் அன்பினை மட்டுமே
சுவாசித்த எனக்கு
கிடைத்த பரிசுதனோ இது...

நண்பர்கள் கேட்டு
நான் ஒருபோதும்
இல்லை என்று சொன்னதில்லை...

என் நட்பையே வேண்டாமென்று
வெறுத்தபோதிலும் கூட...

எதையும் செய்வேன்
என்னை தோழியாக நினைத்த
உன் அன்பு மனதிற்காக...

மனதினால் என்னை விட்டு
பிரிய நினைத்த உனக்கு
நான் தரும் புத்தாண்டுப் பரிசு...

என் நினைவுகளைத் தாண்டிய
உன் சந்தோஷம் மட்டுமே...

இதில் என்றும்
என் சந்தோஷத்திற்கு இடமில்லை...

இனி என்னால்
உன் மனதிற்கு தடுமாற்றம் இல்லை...

இது சரியா ? ... தவறா?...
எனத் தெரியவில்லை...

இருந்த போதிலும்
இதைவிட சிறந்த பரிசாய்
என்னால் உனக்கு
தேர்வு செய்ய இயலவில்லை...

நான் தரும் இந்தப்பரிசு
உனக்கு கண்டிப்பாய்
வரும் புத்தாண்டுகளிலே
மலர்ச்சியைத் தரும் என்பதில்
ஒருபோதும் எனக்குச் சந்தேகமில்லை...

இவையெல்லாம்
உன்னைப் புரிந்து கொண்டதால்
உன் நன்மைக்காகவே செய்கிறேன்...

இனிவரும் நாட்களில்
உன் கனவு நினைவாகி
இலச்சியத்தின் உச்சியை அடைந்து
மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்...

இதுவரை என்னால்
உனக்கு உண்டான காயங்களுக்கு
வருந்துகிறேன்...

என்னை மன்னித்து விடு தோழனே!!!...

Thursday 15 December 2011

நினைவிலும் கனவிலும் நீயே என்பதன் சான்று....

அன்று
நீ என்னை கடந்து சென்ற
சில மணித்துளிகளால்...

இமைகள் அசையாது நின்றது
பிரிவின் வலி பறந்தது
இதயம் லேசாக பனித்தது
இதழ்கள் தானாக சிரித்தது
இரத்தம் உற்சாகத்தில் பாய்ந்தது
மனம் நினைவில் பதித்தது
இரவு அமைதியில் ஆழ்ந்தது
விடியல் புத்துணர்ச்சியில் விடிந்தது
பொழுது மகிழ்ச்சியில் நகர்ந்தது!!!

இருந்துதும் அடங்காது...

பசித்தவனின் ஒரே தேடல்
உணவாகதான் இருக்கும்....
அவ்வாறே,
என்னுள் உயிரான
உன்னை காணும்
என் தேடல்...
அது தொடரும்
என்றும்.....

உன்னை காணாது
ஏங்கி தவித்து
சிவந்த என் விழிகள்... 


தன்னை அறியாது
மெல்ல மூடின
இரவும் நீண்டதால்....

விடிந்ததும் மெல்ல
விழித்து பார்த்தால்
சிவந்த என் இதழ்கள்.....

கசிந்த ஒரு புன்னகை......

பதிந்த சில தழும்புகள்.......

உடல் நனைந்த
இன்ப அதிர்வுகள்.....
மூளையின் ஓரத்தில்
ஒளிவிளக்காய் உற்சாகம்..... 

உறவு கொண்ட உடல் பூத்து, 

புன்னகைத்து கருக்கொண்டு,

வரும் மழலை உருதன்னை.

மனம் கொண்ட உறவு மருவுமே 

மையத்துள் இறையைக் கருவாக்கி 

அமைதியில் ஆனந்தக் கூத்தாடி.

நினைவில் மட்டுமல்ல 

கனவிலும் நீயே
என்னுள் வாழ்கிறாய்
என்பதன் ஒரு சான்றாக
சிரித்தது...... 

 

உன் மௌனம்
எனக்கான தண்டனை அல்ல..
என் நேசத்திற்க்கானது.....

என் நேசமே
நீதான் என்பதால்
உனக்கானது......

உன்னை என்
நேசமாக கொண்டது
தவறு எனில்....

என்னை மட்டும் தண்டித்துவிடு....
என் நேசத்தை விட்டுவிடு!!!


Sunday 4 December 2011

ஒரு கேள்வியும் ஒரு பதிலும்

 

அவனை நினைக்கையில்
என்னுள் பலமுறை
எழும் கேள்வியை
இன்று அவன் என்னிடமே
கூற கேட்டேன்...
 

" ச்சா, நா ஏன் இப்படிருக்கேன்னு தெரியலயே?! "
 

ஆனால் அவனுள்
அவன் நினைவில் வேறொருத்தி....
 

இருக்கட்டும் அப்படித்தான்!
அவன் நினைவுகள் தரும்
மகிழ்ச்சி ஒன்றே
என்றும் எனக்கு போதும்!...
 

" ச்சா, நா ஏன் இப்படிருக்கேன்னு தெரியலயே?! "
 

இந்த நொடியும் என்னுள்
அதே கேள்வி எழுகிறதே!! 

 

நிற்கமுடியாமல் சிதறிக் கொட்டும் நீர்விழுது
கொண்ட கணத்த கார்மேகமாய்,

இன்பம் நிறைந்த அன்பு மழையை எனக்குள்
நித்தம் கொட்டித்தீர்க்கும் எனதன்பே!

அம்பு எய்திய மனம் விம்மி வீழ்ந்தபின்னும்
வம்பு செய்த மனம் கொண்ட என் ஆருயிரே,

கற்பனையில் காதலுக்கான கற்பை உரசிப்
பார்க்கும் கண்ணான என் கண்மணியே,

உன் உலகத்தினுள்ளே உறைந்து கிடக்கும்என்னை
கடைந்து கண்டெடுக்க நீ அனுப்பிய கறை நிலா,

உறுத்தி நிற்கும் காதலில் முழுமை பெற்றுத்
திரும்பவந்து சேர்ந்துவிட்டாளா?

இல்லை, திரும்ப வெட்கப்பட்டு திசை மறந்து
தினவெடுத்த தோள்களுடன் ஓடிவிட்டாளா?

 

கண்கள் கலங்கின
இதயம் வலித்தது
உலகமே இருண்டது!

உனது பதிலால் அல்ல
எனது கேள்வியால்.....

அப்படி ஒன்றை
கேட்டிருக்கக்கூடாது தான்
உன்னிடம் நான்!!!