Sunday 25 November 2012

ஒவ்வொரு நொடியும்


அலையலையாய் சுற்றி வலம்வந்து
தித்திப்பாய் உணவு படைக்கிறாய்.

அடிக்கடி என்னைத் தேடித்தேடி
வாசல்கதவினை உளைக்கிறாய்.

காற்றாகிப்போனாலும் கதவினை
கரிசனத்தொடே அடைக்கிறாய்,

எப்படியும் ஒருநாள் உன்காற்று வரும்
என்ற முழுமையான நம்பிக்கையுடன்.

அவனுக்கு இது பிடிக்கும் என்றே
அந்த சமையல், காலமாய் அமையும்.

ஆகாசமாய் களைந்து அமர்ந்திருப்பினும்
ஆயாசமாய் படுக்கையில் சரிந்திருப்பினும்,

சந்திப்பில் நீ சிந்திய நினைவலைகளின்
நிகழ்வுகள் சொரூட்டுகிறது நிழலாய்.

மாடியில் காட்டிய கலவிக் கண்ஜாடை,
கண்டுகொண்டு புரட்டிய என் அறியாமை.

கடலைக்கறியினை எனக்காய் அமைத்து
மனமடி சமைந்து நின்ற நொடிப்பொழுது,

மலர்ந்த மனம் உடையவில்லை
உடலும் தன் நிலை மாறிடவில்லை என,

முட்டைகளை முன்னிலைப்படுத்தி,
உணர்த்திய உன்னின் அன்புக்காதல்,

பண்புடன் படைகொண்ட துணை கவ்வி
நடைபயிலும் விந்தையான வித்தைகள்.

நடத்திட முடியாத இன்ப உளைச்சல்,
நடத்திநிற்கும் கனவுகள் விதைத்து.

இந்த நொடி நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்
என்ற கனவிலேயே நகருகிறது வாழ்க்கை.

கருவறை சிற்பம்


என் சுவாசம் நீயே
என் தேடல் நீயே
உயிருள்ள தெய்வம் நீயே

என் கருவின் கதகதப்பில்
இதமான இன்பம் நீயே

மூச்சி முட்ட நடக்கும் போது
வலி தெரியாத
வரம் நீயே

காத்து கிடக்கிறேன்
நீ வரும் நாட்களை எண்ணி

உன் சிரிப்பில்
என்ன மாயம் உள்ளதோ ?
எண்ணி எண்ணி பார்க்கிறேன்

என் கருவில் வராத
என் கருவறை சிறப்பமே

ஆணும்பெண்ணும்.


குமரிக்கடல் கண்டு ரசித்து
குலைகுலையாய் அலை குழைத்து,

அதனினுள் ஆடிக் கால்நனைத்து
இன்பத்தைப் பருகி இனித்து நிற்க,

பேரலையின் வீரியம் வீழ்த்தி
விளையாடி என்னைக் கரைசேர்க்க,

குடித்த உப்பு, கண்ணீர் கலக்க,
கனவுக் காதலன் கண்டு கைபிடிக்க,

இன்பமாய் உள்ளுக்குள் உறைந்தது,
குடித்த காதலா? கொப்பளித்த காதலனா?

சினத்தால் இனம் காத்த சிவனுக்கும், 
மணத்தால் மயங்கவைக்கும் மல்லிகைக்கும், 

குணத்தால் குடிகொண்ட கண்மணிக்கும், 
மனத்தால் மகிழவைக்கும் மங்கைக்கும், 

பணத்தால் பதுங்க மறுக்கும், 
வனத்தால் வாழ்வு சிலிர்க்கும், 

ஈனத்தால் தனித்து நிலைக்கும், 
மானத்தால் மலர மறுக்கும், 

ஊனத்தால் உயிரை மரிக்கும், 
சனத்தால், சாவு உணரப்பட்டு, 

இனத்தால் வேறுபட்டுத் துடிக்கும், 
இன்பமான இணைவு, ஆணும்பெண்ணும்.

Tuesday 20 November 2012

காதலியின் கணம்


உரசும் மேகங்கள் மழைதர
வெட்டிநிற்கும், மின்னலினை.

உன்னின் நினைவுகள் உரசும்
என்மனம், பூக்கிறது காதலில்.

மின்னலைப் பிடிக்கமுடிவதில்லை.
காணமட்டுமே முடிகிறது.

காதலைக் காணமுடிவதில்லை,
உணர்த்தவே முடிந்திருக்கிறது.

எவைகளால் செய்யப்பட்டவை,
இந்த மின்னலும், காதலும்.

நிரந்தரமான நிதர்சனம் நீ.
நினைவுகளில் வளையவரும் சுகந்தம்.

கொள்ளக்கொள்ள அளவுகூடிடும்
முடிவுரையற்ற காவியக் காதல்.

நீ கொண்ட காதலின் கணம்,
பூமிக் கடலின் கரிக்கும் உப்பளவு.

அளவற்ற ஆன்மாவின் ஆழமது,
தூக்கிச் சுமக்க தடுமாறுகிறது உயிர்.

கண்ணீரே வாழ்க்கையாக


எனக்குப்பின் எனக்கு மூன்று தங்கைகள் இருக்கின்றனர். தாய் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்கள். தந்தை என்னின் டீனில், சீட்டு விளையாடும்பொழுது மொத்த சொத்துக்களையும் மூன்று வருடங்களில் இழந்த நிலையில், மாரடைப்பில் தன் 40 வயதில் கவலையின்றி இறந்துபோனார். நான் 12 th மிகவும் நன்றாகப் படித்திருப்பினும், பணம் போதாமையினாலும், என் தங்கைகளை கவனிக்க வேண்டியதிருந்ததாலும் பிகாம் படித்தேன். மாலையில் ஒரு நகைக்கடையில் கணக்கு எழுதும் ஒரு வேலையிலும் சேர்ந்துவிட்டேன். நகைக்கடை என்றதும் நிறைய சம்பளம் என்று தவறாக நினைத்துவிட வேண்டாம். ஆனாலும் எனக்கு அது ஓரளவுக்கு போதுமானதுதான்.
பின்னர் ca படிப்பு, எல்லென்டீயில் இப்பொழுது வேலைகிடைத்து, இரு அன்புத் தங்கைகளுக்கும் திருமணம் முடித்துக்கொடுத்து, அவர்களின் குழந்தைகளுக்கு காதுகுத்தி முடித்து, அம்மாவின் கேன்சரைக் கண்டுபிடித்து, குணப்படுத்தி, அன்புக் கடைசித் தங்கையை டாக்டருக்கும் படிக்கவைத்து, அப்பாடா நெடும் பயணம். ஆத்மதிருப்தி அளித்த இன்பப்பயணம்.
இப்பொழுதுதான் பிரச்சனை. என்னுடன் சக வேலைசெய்யும் பெண். அவள் மிகவும் அழகானவள்தான். தோழியாகத்தான் அவளுடன் பழகியிருந்தேன். மதியவேளைகளில் சக நண்பர்களுடன் இன்பமாக எல்லோரும் அரட்டையடித்துக்கொண்டு வாழ்ந்தவர்கள்தான். அவளின் கண்கள் அவளின் காதலை உணர்த்தத் துவங்கியது. ஒருநாள் வேலைமுடித்து செல்லும்வேலையில் காபிஷாப்புக்கு அழைத்தாள். முதல் அனுபவம் என்பதினால் கொஞ்சம் குருகுருவேனவே இருந்தது. அங்கு லிப்டில் மாடிக்குச் செல்லும்வேளை எங்களைத் தவிர எவருமில்லை. ஆனாலும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. என்னோடு எப்படியெல்லாம் அரட்டையடிப்பாள் அவள். உணவுவேளை பொழுது அவள் அடிக்கும் லூட்டி என்ன, கிண்டலும் கேலியும் என்ன. இங்கே பேரமைதி. இப்பொழுது அவளும் அமைதியானது கொஞ்சம் புல்லரித்தது. இதுதான் காதல்போலும். எதிரெதிரில் அமர்ந்ததினால் ஒருமுறை கால்கள் உரசிக்கொண்டன. அல்லது வேண்டுமென்றே அவள் கால்களை நீட்டி உரச வழி செய்திருக்கவேண்டும். ஒரு ப்ரௌனி வித் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்துவிட்டு, என்ன விஷயம் என்று துணிவுடன் அவளைக் கேட்டேன்.
குனிந்துகொண்டே தன் காதலை சொன்னாள். பின்னர் அவளின் ஒன்றுக்குமற்ற மாமன் மகன் ஒருவன் இருக்கின்றான், அவன் அவளை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி மிரட்டுகிறான், என்றாள். அவன் ஒரு பக்காவான கிராமத்து ரவுடி. நாம் உடனேயே திருமணம் செய்துகொள்ள வேண்டும், தாமதித்தல் வேண்டாம் என்றும் சொன்னாள். அவன் அவனின் கடந்துவந்த வாழ்க்கையின் வடுக்களை அவளுக்கு உணர்த்தி, என் தாய்தான் எல்லாம் முடிவு செய்தல்வேண்டும் என்று சொன்னான். பின்னர் பேசிமுடிந்து கிளம்பும்பொழுது, அவன் மனத்தில் ஒரு புத்துணர்வுடன் பிரிந்து சென்றான். அவள் ஒரு கலக்கத்துடனேயே வீடுவந்து சேர்ந்தாள்.
வீட்டில் அவளது மாமன்மகன் அமர்ந்திருந்தான். மொத்தவீடும் அவனை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அம்மா அவனுடன் அவளின் அறைக்கு வந்துகொண்டிருந்தது தெரிந்தது. அது அவளுக்குப் பிடிக்கவில்லை.
அவனுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதுமட்டும் உணர்வு உரைத்தது. இரவு படுக்கையிலும் உறக்கம் கொள்ளவில்லை. காலையில் தன் தாயிடம் திருமண விஷயம் குறித்து பேசிட அமர்ந்தபோழுதுதான் அந்த போன் வந்தது. அவனின் நண்பன்தான் பேசினான், அவன் காதலியான அந்தப்பெண்ணைக் கொலைசெய்திருக்கிறான் அந்த மடையன் மாமாமகன். அவனால் வாயடைத்துப்போய் ஒன்றுமே பேசிடமுடியவில்லை. அதிர்ச்சியில் அசையாமல் இருந்தான். அவனின் அம்மா கேட்டாள், உன்னின் அத்தைமகள் ஒருத்தி அழகாக இருப்பாள், அவளை உனக்குக் கேட்கலாமென்றிருக்கிறேன், உனக்கு சம்மதமா என்றாள். எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லையம்மா. நீங்களும் எந்தங்கைகளுமே எனக்குப் போதும் என்றான், கண்களின் கண்ணீருடன்.
அந்தக் கண்ணீர் பல அர்த்தங்களை சுமந்து நின்றது.

அவன் எனக்கான ராஜகுமாரன்


 கொச்சிக்கு அருகிலே ஒரு சிறிய அழகிய பீச். செராய் பீச். மிகவும் தனிமை வாய்ந்தது. சீசனில் அலைகள் அளவுடன் அலையலையாய் கரைதொடும் கடல்கொண்டது. கடவுளின் நாடு என்பதால் பகலில்கூட வெறுப்பேற்றும் வெயிலில்லை. மீன்பிடித்து கரைக்குவரும் படகுகளின் கூட்டமும் ஒரு கண்கொள்ளாக்காட்சி.
எங்களின் மூன்றுநாள் கல்லூரி விடுமுறைக்கு நாங்கள் தேர்ந்தெடுத்தது அங்குதான். பெண்களாக பத்துப்பேர் ஒருவேனெடுத்து, தலைமைக்கு எங்களின் தோழியின் அப்பாவையும் அம்மாவையும் துணைகொண்டு சென்றிருந்தோம். கொச்சினில் தங்கியிருந்து அங்கு எல்லாம் சுற்றிப்பார்த்து முடித்து கடைசி நாள் காலையில் செராய் வந்திருந்தோம்.
கடலில் இறங்கிக் குளித்துக்கொண்டிருக்கும்வேளை இரு வாலிபர்கள் எங்களின் அருகில் குளித்துக்கொண்டிருந்தனர். ஒருவனுக்கு நல்ல அகண்ட மார்பு. லாவகமான நீச்சலில் குளித்தான். சிலநேரங்களில் கடலின்மேல் மிதந்தான். கன்னியாகுமரிக்கடலைச் சேர்ந்தவன்போலும், கட்டான உடல், அவன் கைக்குள் கடல். கனவுனாயகன்போல கச்சிதமாகவே இருந்தான். ஒருநிமிடத்தில் மனதை அள்ளிக்கொண்டான். அவனைக் காண்பதிலேயே என்மனம் ஈடுபாடாய்க் கிடந்தது. மிகவும் சிறிய அரைக்கால் டிராயர் அணிந்திருந்தான். சிக்ஸ்பேக் தோள்கள். நிச்சயமாக ஜிம்முக்கு செல்பவன் என்பதை அவனின் பருத்த கால்கள் உணர்த்தின. நாங்கள் எல்லோரும் திரும்பிச் செல்லும் அலைகளின் சுழலில்கூட இயைந்து நிற்க முடியாமல், உருண்டுகொண்டுதான் குளித்தோம். சிலநேரங்களில் அந்த ஈரத்தில் அங்கங்களின் அத்தனை அடையாளங்களும், கூசும் உதையசூரியன்போல் வெளிவிழுந்து, பெண்ணை உறுதிப்படுத்தி நின்றன. அவன் யாரையுமே கண்டுகொள்ளவில்லை. அது எனக்கு கொஞ்சமேனும் கோபமாகவே இருந்தது. இளம் பத்து பெண்களுக்கும் நேர்ந்த ஒரு குறைபோலவே உணரமுடிந்தது. என்தொழியிடம் கூறினேன். அவனை உன்னைப் பார்க்கவைக்கவா? என்று சொல்லிக்கொண்டே, என்னையும் இழுத்துக்கொண்டு கொஞ்சம் கடலினுள் சென்றாள். பயமாக இருந்திடினும் பிடித்திருந்தது. அவனுக்கு மிக அருகில் சென்றுவிட்டோம். திடீரென அவள் என்னைவிட்டுவிட்டு திரும்பிவிட்டாள். கழுத்துவரையான கடலினுள் கத்திவிட்டேன், நான். இப்பொழுது அவன் என்னைக்கண்ட பின் என்பக்கமாகப் பாய்ந்து என்கைகளைப் பிடித்து இழுத்து இடையில் கைவளைத்து அப்படியே கரைக்கு இழுத்தான். ஒரு பெரிய அலை எங்களை அப்படியே புரட்டி எடுத்துக் கரை சேர்த்தது. பட்ட இடங்களில் வலி மறைத்து வதனம் இனித்தது. கடலைக் கொஞ்சம் குடித்து கண்கள் சிவந்தது. சிவப்பு அவனாலா இல்லை உப்பின் உறுத்தலா என்பதினை பிரித்துணர முடியவில்லை.
நன்னீரில் குளித்து உடைமாற்றி உணவருந்த அமர்ந்தோம். அவனும் உணவுக்கு அங்கேயேதான் வந்துசேர்ந்தான். அல்லது அவன் செல்லும் இடத்திற்கு நாங்களும் சென்றிருப்போம். அவனின் மேசைக்குச் சென்று எங்களை அறிமுகம் செய்துகொண்டு அவனுடனேயே அமர்ந்து நன்றி தெரிவித்தோம். கொஞ்சம் அரட்டையடித்தோம். குமரியைச் சேர்ந்தவன். நாங்கள் நெல்லை. ire இல் வேலை பார்க்கிறான். அழகாகவே பேசினான். தீர்க்கமானது அவனின் பார்வை. மிலிட்டரி செல்ல எத்தனித்து குடும்பத்திற்காக விட்டுக்கொடுத்தவன். மெக்கானிகல் எஞ்சினியர். என்மனம் அவனை ஆட்கொள்ளத் துடித்தது. பெண்ணுக்கே உரிய ஆணவம் வேலைசெய்யத் துவங்கியது. காதல் அரும்பியது. அவனின் செல்போனை அழைத்து நம்பர்களைப் பதிந்துகொண்டோம்.
ஊர் திரும்பிய அன்றைய இரவே அவனின் செல்லில் அவனையழைத்து என்காதலை வெளிப்படுத்தினேன். அவனோ நட்புவிரும்பி, நட்பு பாராட்டி நண்பனானான். விடமாட்டேன் அவனை. அவன் எனக்கானவன், என் ராஜகுமாரன்.

Friday 16 November 2012

சாரலடிக்கும் நேரம்...!


நாளை வருகிறேன் என்ற உன் குரல்
ஆயிரம் கவிதைகளை தோற்கடித்து
புதிதாய் ஒன்றை விதைத்து சென்றது...!

உன் வருகை தெரிவித்த கைபேசி
எண்ணிட இயலா முத்தங்களை
அரைநொடி பொழுதில் பரிசாய் பெற்று
இயக்கம் மறந்து மவுனமானது...!

உன் ராஜ வீதியில் உலாவரும்
ஒற்றை ராணியாய் கர்வம் கொண்டு
இதழோர புன்னகை ஒன்றை படர விடுகிறேன்...!

கண்ணாடி கூட கண்டிருக்குமோ
என் பல்வரிசையை...
இன்று வீட்டில் அனைவருக்கும்
காட்சிப் பொருளாகி வியக்க வைக்கிறது...!

அய்யோ செல்லமே,
உன்னை திட்டி கடிதமெழுதினேனே...
நாளை அவையெல்லாம் உன்
ரகசிய தீண்டலில் வீரியமிழக்க போகின்றன...!

பாரடா, உன் பெயரை
பல லட்சம் முறை உச்சரித்து
உன் கிண்டல் பேச்சுகளில்
நெஞ்சுருகி கொஞ்சுகிறேன்...!

உன் வருகை அறிந்த நொடி, உனக்குள் நான் தொலைந்து,
உன் கவிதை வரி ஒன்றை களவெடுத்துச் சொல்கிறேன்
உன் நேசம் கொண்டு நான் நனையும் பொழுதெல்லாம்
“தூறல் ஏறியது என் வானம்”...!

கை விரித்து காத்தே கிடக்கிறேன்,
உன் சாரலில் நனையப்போகும் பொழுதுக்காய்...!

Thursday 15 November 2012

காதலின் மொழி


வெற்றி பெற்றவனுக்கு
அமுதம்
தோல்வி கண்டவனுக்கு
ஆழகால விசம்

இதை தெரிந்தும் தெரியாமல்
வாழ்பவனுக்கு
புரியாத புதிர்

ஏன் இந்த ஆரவாரம்
ஏன் இந்த சந்தோசம்
ஏன் இந்த இன்ப மழை

இன்பம் நிலையில்லை
துன்பம் மட்டும் வாழ்வில்லை
இப்பொழுதுதான் தடுமாறுகிறது
என் இதயம்

Wednesday 14 November 2012

உன் நினைவுகளுடன் கருவறை சிற்பம்


உன்னைத் தேடி
ஓயாத அலைகளாக
காதல்அறையில் விழிகள் ...

மரணநதியில்
பயணிக்க மனமில்லை
உன்நினைவில் பயணம் ...

கண்ணாடி குடுவைக்குள்
உடையாமல் காத்திருக்கிறேன்
கண்ணீருடன் உனக்காக ...

தென்றலே !

என் ஜன்னல்
ஓரக் கண்ணீரை
மன்னவனிடம் சேர்த்துவிட்டாயா ?

மேக வானில்
என்னவனைத் தேடி
சுற்றி திரியும் விழிகளை
அவன் இதயத்திடம்
சேர்த்துவிடு ...

வாழ்ந்துவிட்ட
சில காலங்களுக்காக
வாழ போகிறேன்
பல காலம் ...
(((((((((((உன் நினைவுகளுடன்))))))))))

என் சுவாம் நீயே
என் தேடல் நீயே
உயிருள்ள தெய்வம் நீயே

என் கருவின் கதகதப்பில்
இதமான இன்பம் நீயே

மூச்சி முட்ட நடக்கும் போது
வலி தெரியாத
வரம் நீயே

காத்து கிடக்கிறேன்
நீ வரும் நாட்களை எண்ணி

உன் சிரிப்பில்
என்ன மாயம் உள்ளதோ ?
எண்ணி எண்ணி பார்க்கிறேன்

என் கருவில் வராத
என் கருவறை சிறப்பமே

Sunday 11 November 2012

கோபப்பார்வை


அழகிய உன்னுருவம் பதிந்த
நிழலினை நிரடிப் பார்த்து
அதில் உன்னைத் தேடுகிறேன்.

உன்னின் மாருதியைப் போலவே
சேற்றையும் சகதியையும் முகத்தில்
வாரியிறைத்து செல்கிறது உன்கண்கள்.

காற்று கலந்துவிட்டிருக்கும்
சுகந்தத்தில் சுற்றிச் சுற்றி
தேடுகிறேன் உன்மூச்சுக் காற்றை.

சொல்லமுடியாது, என்மேல்
நீகொண்ட கோபம் என்னை
எரித்துக்கொண்டுதான் இருக்கின்றது இன்னும்.

எங்களின் தீபாவளி.


அந்தக் காலங்கள் ஒரு இனிமைதான். ரொம்ப சுதந்திரமானது. இயற்கையானது. மனதில் கவலையில்லாததும்.
1970 களில் பள்ளிப்படிப்புக் காலங்கள். தீபாவளியின் முந்தய தினம் எங்கள் கிராமத்திற்கு பயணமாவோம். மொத்தகுடும்பமும் அன்றிரவே ஆஜராகிவிடும். ஒவ்வொரு வயது தொகுதிகளும் தத்தம் வயதினருடனும் சேர்ந்துகொண்டு தங்களின் இன்பத்தை தொந்தரவின்றி அனுபவிப்போம். என்வயதொத்த இளசுகள் படையில் நாங்கள் நால்வர். ஊர் சென்றடைந்ததும் நால்வரும் இணைந்தே செல்வோம் எங்கு சென்றாலும். இது எழுதப்படாத தீர்ப்பு.
முதலில் மாமாவைக் காணத்தான் செல்வோம். மாமா என்றால் சின்னத்தை மாமா. எங்களைக்கண்டவுடன் அவர், வாங்கடா வெடிவாங்கப் போவோம் என்று எங்களை அழைத்துக்கொண்டு கடைக்குக் கூட்டிச்செல்வார். கடையில் வெளியே ஒரு சேரைப்போட்டுக்கொண்டு மற்றவர்களுன் அரட்டையடிப்பார். எங்கள் பட்டாளம், எந்த நேரத்திற்கு எந்த வெடி போடுவதென்று தீர்மானித்து முடிவுசெய்து வெடிகளை சேர்க்கத் துவங்குவோம்.
முழு இரவுக்கும் ஒலைவேடியும் துப்பாக்கி வெடியும்தான். அதன்பின் அதிகாலை 5000 சரம், மற்றும் வகைவகையான சரங்கள். மதியவேளையில் அணுகுண்டு, லட்சுமிவெடி வகையறாக்கள். மாலையில் வெளிச்சம் தரும் ராக்கெட், புஸ்வானம், மத்தாப்புகள் எல்லாம். ஒரு முழுநாள் மட்டுமே இந்தக் கொண்டாட்டம். தேவையான வெடிகளனைத்தையும் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்ததும், அனைவருக்கும் அவர்களின் தகுதி வயதுக்கேற்ப பிரித்துத் தரப்படும். மொத்தம் வெடிவெடிக்கும் வயதில் 16 வீரர்களும் வீராங்கனைகளும் உண்டு. ஒரு சத்தமும் இன்றி பிரித்து அவரவர்களுக்கு ஒரு மஞ்சள் பெருங்காயப் பையில் போட்டுத் தரப்படும். அவர்கள் அதைப் பாதுகாத்து விரும்பியநேரம் போட்டுக்கொள்ளலாம்.
வெடிகள் கைக்குவரும்வேளை இரவு 10 மணி. பெண்கள் பலகாரங்கள் செய்யத் துவங்குவார்கள். நாங்கள் ஒலைவேடியில் துவங்குவோம். அதிரசம், முறுக்கு, சீவல், சீடை, முந்தரிக்கொத்து, அல்வா, அது கக்கும் நெய்யில் மைசூர்பாகு, வடைவகைகள், ரவாலட்டு, ரவை பணியாரம், இட்டிலி,பொங்கல் சாம்பார் அத்தனையையும் இரவு முழுவது விழித்து செய்து முடிப்பார்கள். அவர்கள் முடிக்க, நாங்கள் ஓலைவெடிகளை வெடித்துமுடிக்க அதிகாலை நாலை மணி காட்டிநிற்கும்.
எல்லோரும் குளிக்கத் துவங்குவர். எங்கள் இளவட்ட சங்கம் கிணற்றிலிருந்து எல்லோருக்கும் நீர் இரைத்துக் கொடுக்கும் வேலையைச் செவ்வனே செய்துமுடித்து குளித்து முடிக்கும்பொழுது காலை ஆறைத் தொட்டிருக்கும் மணி. பெருசுகள் முதல் அனைவரும் சேர்ந்து சாமி கும்பிட்டு, அய்யாப்பா எல்லோருக்கும் புதுதுணியினை வழங்க தீபாவளி துவங்கும்.
முதலில் 5000 வாலாவில் துவங்கி அது ஒருபுறம் களைகட்டி ஓடிக்கொண்டிருக்கும். மொத்தக் குடும்பமும் வெடிவெடிப்பதினைக் கண்டு ஆரவாரம் செய்து மகிழும். பின் விருந்து. எதை எடுப்பது எதை விடுப்பது என்பது ஒரு குழப்ப நிலையினை உருவாக்கிவிடும், அளவுக்கு உணவு வகைகள். எல்லாம் ருசியானவை. தேர்ந்த பெண்களின் கைப்பக்குவம். வாழ்வின் பாக்கியமான திகட்டிடும் நிமிடங்கள். உணவு முடிந்ததும் அரட்டைகளும் நையாண்டிப் பேச்சுகளும், கேலியும் கிண்டலுமாக நேரம் ஓடிடிடத் துவங்கும். ஒரு பிரிவு அன்று ரிலீசாகும் புதுப்படம் பார்க்கக் கிளம்பிவிடும். அப்படியே இரவின் விழிப்பு, உணவின் இனிமை, நண்பர்களின் அன்பு எல்லாமாய் சேர்ந்து நம்மை ஒரு கிறக்கத்தில் கொண்டு நிறுத்திநிற்கும். அதற்காக தூங்கிவிடவும் முடிவதில்லை. மாலையில் எல்லா வெடிகளும் தீர்ந்து, வெடிக்காத வெடிகளைஎல்லாம் தெருவில் பொறுக்கியெடுத்து சொக்கப்பானை கொளுத்தும்வரை எல்லாமும் சரியாகவே சென்றுகொண்டிருக்கும்.
ஒவ்வொரு வருடமும் சொக்கப்பானை கொளுத்தும் சமயம் யாருக்காயினும் ஒரு தீக்காயம் ஏற்படாமல் போகாது. முக்கியமாக என் பெரிய மாப்பிள்ளைக்கு ஏதாகிலும் ஒரு சிறிய காயமேனும் ஏற்படாமல் தீபாவளி முடிந்துவிடுவதில்லை. அவனுக்கும் தீபாவளிக்கும் அப்படியொரு இன்பப் பிணைப்பு.
பின்னர் சோகத்துடன் ஒருவரையொருவர் பேசிக்கொள்ளாமல், கணத்த மனதுடன் பிரிந்து ஊருக்குப் புறப்படுவோம். இதுதான் நாங்கள் வாழ்ந்த இன்பத் தீபாவளி.

அவசர அநியாயம்


அன்று ஒரு விடுமுறைநாள். அன்றாவது நன்றாகத் தூங்கிவிடவேண்டும் என்று வாரம் முழுவதும் கங்கணம்கட்டி நினைத்திருந்தான். முந்தயவாரம் முழவதுமாய் வேலைபார்த்த களைப்பு. ப்ரொஜெக்ட் வேலை நல்லபடியாக முடிந்துவிட்டிருந்தது. அந்த நிம்மதி. ஆனால் அவன் மனைவிக்கு வெளியே செல்லவும் அவன்தான் காரோட்டி. காரோட்டுதலும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் வேண்டா வெறுப்போடுதான் மனைவியுடன் வெளியில் வந்திருந்தான். ஏழுமாடி சரவணாவுக்கு வந்திருந்தார்கள். அந்த வாரத்திற்கு வேண்டிய சாமான்கள் அனைத்தும் வாங்கவேண்டியதிருந்தது.
அவன் மெதுவாக பட்டுவிற்பனை பிரிவில் உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டு, மனைவியை எல்லாவேலைகளையும் முடித்துவிட்டு செல்லில் மிஸ்ட்கால் செய்யும்படியும் அவன் அங்கேயே காத்திருப்பதாகவும் சொன்னான்.
அழகழகான பெண்களின் அணிவகுப்பு கொஞ்சம் மனதிற்கு தெம்பூட்டியது. நேரம் சென்றது. லேசாகக் கண்ணைக் கட்டியது. அரைத்தூக்க மயக்கத்தில் கண்களைத் திறந்தும் மூடியும் ஆக அமர்ந்து இருந்தான். அப்பொழுதுதான் சட்டென கவனித்தான், எதிரே அவள் நின்றிருந்தாள். அவனின் பழைய காதலி. தனியாகத்தான் வந்திருந்தாள். அவளும் அவனைப் பார்த்துவிட்டாள். சரியாக 18 வருடங்கள் கடந்த சந்திப்பு. தற்பொழுது செங்கல்பட்டில் வசிக்கிறாள் என்று கேள்வி. அவளை அவன் மிகவும் காதலித்திருந்தான். சிறிய ஒரு பிரச்சனை குடும்பத்தில் சரிசெய்யவே முடியாதபடி பெரிய அளவில் பகையாக முடிந்து விட்டிருந்தது. கைமீறிச் சென்று விரோதமாகிவிட்டது. ஆனால் வெளியில் எவருக்குமே தெரியாது.
அவள் இப்பொழுது பயந்து ஒரு கலக்கத்துடன் சிரித்தாள். அவனும் சிரித்தபின் அவளை ஒரு தோழியாய் பாவித்து நலம் விசாரித்தான். அவளுக்கு ஒரே பையன்தான், அவனின் பெயரையே மகனுக்கும் வைத்து காதலுக்கு பெருமை சேர்க்க முயன்றிருக்கிறாள். நண்பர்களாகவே பேசிக்கொண்டனர். பழைய விஷயங்கள் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இடையிடையே அவன் முகத்தினை நேருக்கு நேராய் வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். பின்னர் நாம் இருவரும் சேர்ந்து நின்றுகொண்டு ஒரு போட்டோ எடுத்துக்கொள்வோமா என்று கேட்டாள். கடைசி தளத்திற்கு வந்து சேர்ந்து மொட்டைமாடி செல்லும் படிகளில் நின்று, அங்கு நின்ற ஒரு இளைஞனிடம் போட்டோ எடுத்துத் தரும்படி கேட்டு செல்போனில் படம்பிடித்துக்கொண்டனர். கொஞ்சம் கைகள் உரசிக்கொண்டன. இன்பமான நினைவுகளுடன் பிரிந்து சென்றனர்.
எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு மனைவியுடன் வீடு திரும்பினான். பழைய காதலியுடனான சந்திப்புப்பற்றி மனைவியிடம் எதுவும் சொல்லவில்லை. மெயில்பாக்சை கம்பியூட்டரில் ஆன் செய்தபொழுது அவனின் முன்னாள் காதலி அந்தப் புகைப்படத்தினை பிரதியெடுத்து அவனுக்கு அனுப்பியிருந்தாள். அதை ஒரு காப்பி போட்டு செல்போனில் இறக்கிக் கொண்டான்.
மறுநாள் ஆபீசில் ஒரு முக்கியமான மீட்டிங்கும் அதைத்தொடர்ந்து முக்கிய வேலைகளும் முழுமையாய் அவனுக்கு இருந்தன. இடைவெளி இல்லாமல் வேலை. அவனின் உதவியாளர் வந்து அவனிடம் கம்பெனி மாதாந்திரப் பத்திரிக்கையில் போடுவதற்காக அவனின் போட்டோ ஒன்று தேவையிருப்பதாகக் கேட்டான். கம்பியூட்டரில் இருக்கும் படம் ஒன்றை ஒப்பன்செய்து ஒருகாப்பி எடுத்துக்கொள் என்று அவசரத்தில் கவனமின்றி சொல்லிவிட்டான். உதவியாளன் மிகச் சரியாக அவன் காதலியுடன் முந்தயநாள் எடுத்துக்கொண்ட அதே போட்டோவுக்கு ஒரு காப்பி எடுத்துக்கொண்டான்.
சிலநாட்கள் கழிந்து கேண்டீனில் ஆரவாரமின்றி அமைதியாய் அமர்ந்து காப்பி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வேளை அவனின் சக பெண் ஊழியர், தோழி அவனிடம் வந்து கம்பெனியின் மேகசினைக்காட்டி அட்டைப்படத்தில் அவனருகினில் இருக்கும் அந்தப்பெண் யார் என்று வினவினாள். அப்பொழுதுதான் அவனின் தவறு அவனுக்குப் புரிந்தது. வியர்த்துக் கொட்டியது அந்தக்குளிரிலும்.

Thursday 8 November 2012

பெண்களின் காதல்


அவள் காதலிக்கின்றாளா என்பதினை அவனால் அறிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால் அவளின் பார்வைகள் காதலையே அவனுக்கு உணர்த்திநின்றன. ஆனாலும் கேட்டுவிடும் துணிவு இன்னும் வரவில்லை. அன்று கல்லூரியின் கடைசித் தேர்வுநாள். அவனுக்கு ஏனோ அன்றையதினம் ஒரு இருப்புக்கொள்ளா நிலையையே ஏற்படுத்தி நின்றது. வாழ்க்கை ஏனோ அலுப்புத்தட்டியது. விரக்தியுடந்தான் கல்லூரிக்குச் சென்றான். அவள் அவனைக் கண்டுகொண்டதுபோலவே தெரியவில்லை.
நாகர்கோவிலில் பெரும்பாலான பகுதிகளில் முந்திரிமரங்களைக் காணலாம். அந்தக்கல்லூரி வளாகத்திலும் ஒரு பெரிய முந்திரிமரம் இருந்தது. அழகிய கூடாரம் அமைத்ததை ஒத்திருந்தது. முந்திரிமரத்தின் ஒரு அழகிய சிறப்பு, அதன் கிளைகளினூடே உள்சென்றால் அது ஒரு அழகிய அறையினைப்போல் இருக்கும். அதன் கிளைகள் அமரும் நாற்காலியைப்போலும், படுத்துறங்குமளவு அகலமானதாயும் இருக்கும். உட்புறம் முழுமையாய் நிழல் பரவி மிகவும் இதமாகவும் இருக்கும். வெளியிலிருந்து பார்ப்பவர் எவருக்கும் உள்ளிருப்பவர்கள் எவரும் இருக்கும் அடையாளம் தெரிந்துவிடாது, என்பதுவும் ஒரு சிறப்பு. அதன் கனிகள் ஒரு தனிச் சுவை பொருந்தியது. பருப்பு கேட்கவே வேண்டாம், விந்துநாத சக்திக்கு துணைநிற்பது. மொத்தத்தில் காதலர்களுக்காகவே இறைவனால் படைக்கப்பெற்றது எனக்கொள்ளலாம்.
அவன் சோகத்தினால் மிதக்கும் தருணங்களில் அந்த மரக்கிளைகளின்மேல் படுத்திருப்பான். அன்றும் அவன் கடைசிநாளின் அந்தத் தருணங்களில் அங்குதான் வந்து அமர்ந்துகொண்டான். அவளிடம் அவனால் பேசமுடியாமல் போனதால் அவன்மேலேயே கோபம்கொண்டான். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு எறும்பு அவனின் கால்வழியேறி மேல்நோக்கி ஊர்ந்து ஏறிக்கொண்டிருந்தது. கண்ணோக்கி அதைக்கவனித்தவாறு கிடந்தான். அவள் இப்பொழுது கல்லூரியிலிருந்து வீட்டிற்குக் கிளம்பிச் சென்றிருப்பாள் என்று நினைத்துக்கொண்டு ஒரு முடிவுடன் எழுந்தான். எறும்பும் அவனின் முகத்திற்கு இப்பொழுது வந்துவிட்டது. அதை உதறித்தள்ளிவிட்டு நிமிர்ந்தான். கிளம்ப முடிவெடுத்தான்.
கிளைகளினூடே அவள் நடந்து வந்துகொண்டிருப்பது தெரிந்தது. என்ன இந்தப்பக்கம், என்றபடியே அவளை வரவேற்றான். அவள் அவனை எல்லா இடங்களிலும் தேடினதை சொன்னாள். எல்லா நம் நண்பர்களும் சென்றுவிட்டதை சொல்லிக்கொண்டே அவனின் கைகளை உரசிக்கொண்டு அருகில் அதே மரக்கிளையினில் அமர்ந்தாள். நடுவகிடு எடுத்துத் தலையைப் பின்னியிருந்தாள். விளக்கின் தீயினைப்போல் நெற்றியில் போட்டு. இரட்டை சடையின் உச்சியில் மல்லிகை சரம் தொடுத்திருந்தாள். அவள் நடக்கையில் சப்பரத்தின்  பூ ஆரங்கள் ஆடியசைவதுபோல் அசைந்தாடின. அவசரத்தின் அறிகுறியில் சேலை கொஞ்சம் விலகி சட்டையின் ஒருபக்கம் துருத்தியது, அழகாக இருந்தது. அது இப்பொழுது அவனுக்கும் சொந்தமாகிவிடும் போன்ற அபாயமும் தெரிந்தது. அதுபற்றி அவள் கவலைகொண்டதாகத் தெரியவில்லை. ஏன் தனியாக இங்கு வந்து அமர்ந்துகொண்டிருக்கிறாய் என்று கேட்டுக்கொண்டே அவன் தொடையை உரசிக்கொண்டு நெருங்கியமர்ந்தாள். ஏதோ பூச்சியொன்று காலைக் கடித்துவிட்டதென்று சொல்லிக்கொண்டே கால்பக்கம் சேலையினை சிறிது விலக்கினாள். புதுநிறமாக இருந்தன, வரைந்து செதுக்கின கால்கள். சலங்கை கட்டின கொழுசுகள் ஒலிஎழுப்பி ஓய்ந்தன. அவனுக்கு உடல், ஆனந்தத்தில் கொதித்தது. ஆனாலும் துணிவு வரவில்லை. எறும்பொன்று கடித்த இடம் சிவந்திருந்தது. அவன் கைகளைஎடுத்து மென்மையாக தடவினாள். காதலிக்கின்றாய் என்றால் சொல்லிவிடு என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுதே அவளை கிளையோடு சேர்த்து வளைத்து அனைத்து இருகத்தழுவினான். ஆழ முத்தமிட்டான். முத்தத்தில் எல்லாமும் சரியாகப் பொருந்தின. விலகின சேலை முழுவதுமாய் விலகி தொடையினைக் காட்டிக்கொடுத்தது. அழகான இளமயிர்கள், நெற்பயிர்களை நினைவுறுத்தி மறைந்தது. உலகமும் மறந்தது.