Sunday 12 August 2012

contd...

அவளின் கண்களின் கவிதையைப் பறித்தபின், அடுத்தநாள் ஒரு திருமண விழா. சூழ்நிலை அவளும் எங்களுடன் ஹோட்டலறையில் சேர்ந்து தங்க ஏற்பாடாகியிருந்தது. இந்தநிலையில், சில நண்பர்கள் அவனை இரவு பார்ட்டிக்கு அழைத்திருந்தார்கள்.
அவனுக்கு பார்ட்டிக்குப் போவதா அல்லது அவளுடன் இருந்து ஒரு இணக்கத்தை உருவாக்குவதா என்று ஏங்கித்தவித்தான்.
அப்பொழுதுதான் அவளுடன் அரட்டையடிக்கும் பொழுது அவள், அவனை கமலைப்போல இருப்பதாக ஒப்பிட்டு ஒரு அம்பினை எறிந்தாள். இதுபோதாதா அவனை மடக்க. முடிவு செய்துவிட்டான் இன்றைய கச்சேரி அவளுடன்தான் என்று. 
காத்திருந்தான். அவளும் காத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறாள். 
மற்ற எல்லோரும் உறங்கியபின் மெதுவாக குறுக்குமறுக்காக கிடந்த பொருட்களையெல்லாம் சரிசெய்தான். கதவைத் திறந்து வெளியில் சென்று பார்ட்டியில் கலந்துகொள்ளலாமா என்றுகூட நினைத்தான். சரியென்று பாத்ரூம் சென்றான்.
செல்லும்போழுதே அவளின் அசைவுகளைக் கண்ணுற்றான். அவள் இன்னும் உறங்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டான். அவள் மிகவும் அறிவாளி. அவளும் என்ன செய்துநிற்க வேண்டுமென்று நினைத்து வைத்திருந்திருப்பாள் போலும். அவள் கண்கள் இலேசாகத் திறந்திருந்தன. பார்த்துவிட்டான்.
பாத்ரூமிலிருந்து வெளிவரும்பொழுது கண்டகாட்சியில் உறைந்துபோனான். இதை அப்படியே எழுதினால் விரசமாகிவிடக்கூடும். ஆனாலும் வேறுவழியில்லை. அது அவனின் பின்வாழ்க்கையினை அடியோடு மாற்றிவிட்டதால் சொல்லியே ஆகவேண்டும்.
அவள் தன இடதுகால் சேலையினை விலகிக்கிடக்குமாறு செய்து, முழுக்காலும் வெளியில் தெரிந்துகிடந்தது. இப்படியொரு தருணத்தை வாழ்க்கையிலேயே முதல்முதலாக அனுபவித்தான். உடல் படபடத்தது. ஒரே செக்கன்டில் அமைதியாகி துணிச்சலுடன் அவள் கால்களை கைகளால் வருடினான். கொதித்தது. மெதுவாக கால் பாதங்களை முத்தமிட்டான். அவள் தடை ஒன்றும் செய்யவில்லை. அவளின் தொடைப்பகுதியை மெதுவாக அழுத்தினான். இன்பத்தின் உச்சத்தில் மிதந்தான். அடுத்து அவளின் பக்கவாட்டில் சென்று அவளின் உதட்டில் முத்தமிடத் துணிந்திருந்தான். அப்புறம்....
இப்பொழுதுதான் எல்லாம் குலைந்தது. அவள் " யாரது" என்று முனகினாள். அவன் பயந்து பாத்ரூமுக்குள் சென்றுகொண்டான். 
அவள், யாரும் கவனித்திருப்பார்களோ, என்ற சந்தேகத்தில், தண்ணீர் வேண்டும் என்று அருகில் உறங்கிய பெண்ணை எழுப்பிக் கேட்டாள். நல்ல வேளையாக ஒருவரும் இதனை அறிந்திருக்கவில்லை. 
பின் இரவு முழுவதும் அவளின் அனுமதிக்காகக் காத்திருந்தான். தூங்கவில்லை. அவளும் தூங்கவில்லை. அவள் அசையவே இல்லை. தன் செய்கைகளிலிருந்து கொஞ்சம் பின்வாங்கினான். 
விடிந்தது. 
மறுநாள் .....

மறுநாள் காலை, பிரச்சனையேதும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டான்/டாள். அவன் இன்னுமொரு சந்தர்ப்பத்தைத் தேடினான். வந்தது. அதாவது அவள் தனியாக அமர்ந்திருந்தாள். சில நிமிடங்கள் கிடைத்தன. அவள் அவனைப் பார்பதைத் தவிர்த்தாள். வெட்கம். சுற்றி வளைத்து அவளை முத்தமிடநினைத்தான். ஆனாலும் நேற்றிருந்த துணிவை அவன் இழந்திருந்தான். எத்தனைமுறை கண்ணசைவாலேயே எத்தனை சித்திரவதை செய்திருக்கிறாள்? காதல் மொழி உரைத்திருக்கிறாள்? அடப் பெண்ணே, என்னழகுக்கண்ணே ஒருமுறை, ஒரேயொருமுறை உன் விழியம்புகளை விழிவில்லால் என்மீது எய்து நிற்கமாட்டாயா? ஏங்கித்தான் தவித்தான். 
ஆனால் அவள் வேறு வகையில் சிந்தித்தாள். அதாவது யாரோ ஒருவருக்கு சேலையைக் கொடுக்கவேண்டும் என்று, மண்டபம் செல்லும் வேலையில் சொன்னாள். அவளின் எண்ணம், எல்லோரும் மண்டபம் சென்றுவிட்டால் என்னைத் தனிமைப்படுத்தி வேறு ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று தனியாக என்னை இன்பத்தில் நனையவிடலாம் என்பது. மிக அருமையான விஷயம்தான். தற்பொழுது காரில் எனக்கு பின்புறம் அமர்ந்திருந்தாள். அவளின் கைகள் என்மேல் அழுந்த உரசின. இருவரும் அதையனுமதித்து இன்பக் காந்தப் பரிமாற்றம் செய்துகொண்டோம். முழுமையாய் கரைந்தோம். பின்னர்தான் கதை மாறிவிட்டது. மண்டபம் வந்ததும் ஒருவரும் இறங்கலில்லை, மாறாக எல்லோரும் அந்த வீட்டிற்கு வந்தார்கள். 
அருமையான நகைச்சுவைத் தருணமாக மாற்றப்பட்டுவிட்டது, எங்களின் கற்பனை காதலின் கலவி. போதுமடா சாமி. 
மறுபடியும் இன்னொரு தோல்வி. நண்பர்களே காதலிக்கமட்டும் செய்துவிடாதீர்கள். அது ஒரு பெரிய அன்புத்தொல்லை. நரக இன்பமளிக்கும் விரக வேதனை.


இப்படியாக அவளின் இரவிக்கையைப் பார்த்துக்கொண்டே விழா முடிந்தேறியது. மதிய உணவும் முடிந்தது. வீட்டில் இளம் பெண்களின் அரட்டைக் கச்சேரி அமர்க்களமாக நடந்துகொண்டிருந்தது. ஒரே கிண்டலும் கேலியும்தான். லயித்திருந்தான், அழகுப் பெண்களாயிற்றே.
திடீரென்று எல்லோரும் அவனிடம் வந்து நின்று சம்பந்தச் சாப்பாடு மறுநாள் ஏற்பாடாகியிருக்கிறது, கட்டாயம் அவனையும் தங்கியிருக்க வேண்டுமென்று வேண்டினர். உள்மனத்தில் உடனேயே சந்தோசம் கொப்பளிக்கத் துவங்கியது. ஏற்கனவே ஒரு கதை முடியாமல் தத்தளித்துக் கிடக்கிறதே. முடித்துவிடவேண்டும் இன்றிரவே என்றொரு வேகம்.
ஆனாலும் தொழில் வேலைகள் தலைக்குமேல் மறுநாள் இருந்துகொண்டிருப்பதை எண்ணி. ஊருக்குக் கிளம்ப எத்தனித்தான். காத்திருந்தான் மற்றவர்கள் கிளம்பிவர.
அந்தச் சிறு தனிமையில் திடீரென அவள் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள். ஒருவேளை காப்பி எதுவும் கொண்டுவருவாளோ? ஒரு தம்ப்ளரில் தண்ணீர் கொடுத்தாள். நான் கேட்கவில்லை ஆனாலும் வாங்கி அருந்தினேன். நேற்று இரவு நான் அவளுக்குத் தண்ணீர் கொடுத்ததை சிம்பாலிக்காக உணர்த்துகிறாளோ? அப்படித்தான் இருக்கவேண்டும். அவள் மனம் பதபதைத்தாள்.
ஊருக்குக் கிளம்ப காரில் ஏறி அமர்ந்தவுடன் அவளின் பரபரப்பு, துடிப்பு அவனையும் இரவு தங்கிவிட்டு, என்னோடு கூடுங்கள், என்று சொல்லாமல் சொல்வதாய் இருந்தது. அவள் கண்களில் ஒரு தாளாத ஏக்கம் குடிகொண்டிருந்தது. ஊர் செல்ல மனமில்லை. இரவு உறக்கமின்றி அவளின் நினைவுகளுடனேயே கரைந்தது.
இப்பொழுது அவள் தம்ப்ளரில் எனக்குத் தண்ணீர் தந்தால், எனக்கு, அது இன்று வேண்டும் என்ற கேட்பதுபோல் அர்த்தமாகிவிட்டது. அடுத்தொருமுறை தவிர, இதுவரை எனக்குத் தண்ணீரே தரவில்லை.
சிலமாதங்கள் கடந்துவிட்டிருந்தன. போன் செய்தாள் ஒருநாள். வடகம், அது இதுவென சொல்லி, செய்து வைத்திருக்கிறேன், வரும்பொழுது வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றாள். அன்றே சென்றான். மதியஉணவு தந்தாள். மதுரையை, தன் வழவழப்பான கால்களைக் காண்பித்து ஞாபகப்படுத்தினாள். 
அன்றிரவு அங்கு தங்கிட முடிவு செய்தான். அருமையான சந்தர்ப்பம். இம்முறை பிசகிவிடக்கூடாது. இரவு அவன் மாடியில் படுக்கச் சென்றான். அவர்களெல்லாம் கீழ்வீட்டில் படுத்திருந்தனர். நடுநிசியில் பூனைநடை நடந்து அவளின் அறைக்குள் சென்றுவிட நினைத்தான். அவளின் அறை தாளிடப் பட்டிருந்தது. மற்றொரு தோல்வி. இப்பொழுது தோல்விகளால் வருந்துவதில்லை. எல்லாம் சகஜமாகிவிட்டது.


92 வரை பலமுறை பலப்பலான பெண்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. விபச்சாரப் பெண்களை கட்டாயம் எல்லோரும் மதிக்கவேண்டும். அவர்கள் விரும்பி அந்தத் தொழிலுக்கு வந்துவிடுவதில்லை. பாழாய்ப்போன இந்த சமூகமும், அரசியலமைப்பினால் சீரழிந்து கிடக்கும் இந்த நிலையுமே காரணம். இப்பொழுதெல்லாம் அதற்கும் குத்தகைதானாம். 92 ல் எயிட்ஸ் மிகவும் தீவிரமாகிவிட்டதும் அவனால் காண்டமெல்லாம் உபயோகிக்க விருப்பமில்லாமையுமே காரணமாகிவிட்டது. ஒருமுறை காண்டம் உபயோகித்தபொழுது, கிழிந்துவிட்டது. 
அதன்பின் வியாபார நண்பர்களுடன் செல்வான், அரட்டையடிப்பான், ஆனால் செக்ஸ் கிடையாது. விருப்பமில்லாமல் போய்விட்டது.
93 ல் தாமமு வின் காலம் முடிந்துவிட்டது. 
அவன் தாயார் இறந்ததை அவனால் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் தாய், சாமி கும்பிடுவதென்ன, மற்றவற்கெல்லாம் உதவிட நினைக்கும் மனப்பான்மைஎன்ன, மொத்தத்தில் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற ஒரு பெருந்தன்மை. அவர்கள் ஏன் இறக்கவேண்டும். அப்படி என்ன கெடுதல் செய்திருந்தார்கள்? எல்லாவிதமான கேள்விகளும் அவனைக் குடைந்தெடுத்தன. அவர்களுக்கு ஒரேயொரு குறைமட்டுமே. அதவும் அவனால் மட்டுமே. ஒருமுறை ஒன்றுமே சொல்லாமல் தஞ்சாவூர் அருகே செல்லவேண்டும் என்னோடு வா, என்பார். மறுமுறை ராமேஸ்வரம். நானும் செல்வேன். அங்கு சென்றபின்தான் புரியும் எல்லாமே எனக்காக மட்டும்தான். முதலில் கடுப்பாக ஆகிவிடும். பின்னர் அவர்கள் மனம் நோக அவன் காரணமாக இருக்கவேண்டாம் என்று, ஒன்றும் மறுமொழி பேசமாட்டான்.
அவள் இறப்பு அவனை மிகவும் அமைதியாக்கி, அவனுக்குள் ஒரு பெரும் தேடலை பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. 
யார் கண்டது அவனின் தாயும் அவனுள் புகுந்து அவனை முற்றிலும் மாற்றிக்கொண்டு இருந்திருந்திருக்கலாம். 
தாமபி காலம் ரொம்பவும் வித்தியாசமானது.

No comments:

Post a Comment