Tuesday 5 February 2013

அமுத சுரபி


அகல் விளக்கினைப்போல்
சுடர் விட்டு நிழல்விட்டு எரியுது.

முள்ளாய் குத்தினாலும்
முகமது சுகம் கொண்டு பரப்புது.

அன்னநடை ஏறி நடந்தால்
குழுங்கி அசைந்து சிரிக்குது.

அரசியாயினும் கோட்டை
மீதேறியே ஒய்யாரமாய் கிடக்குது.

இறையமைத்த மெத்தையே
இருப்புக் கதியாய் உறங்கித்தவிக்குது.

பசிக்கு விருந்தாய் அன்பாய்
ஊறிய அமுதூட்டி மகிழுது.

கைபிடிக்க இதமாக தந்து
தனை மறந்து கசங்குது.

கசங்கிக்கசங்கி இன்ப மழை
ஆன்மக் கடலினுள் ஊற்றுது.

பருவத்தில் பூத்த குலையாய்
வெளிவந்து உலகம் மிரட்டுது.

படைத்தவன் படைத்தான்,
படைப்பு மறந்து விடைத்தான்.

அடுத்தவன் பிடித்தான் படைக்க,
முதலடி எடுத்து வைத்தான்.

பாகனில்லாத ஆனை,
மீட்கப்படாத வீணை,

ஈர்க்கப்படாத மனம்,
குவிந்து தவிக்கும் பாலை,

இன்பக்குளத்தில் அக்கறையின்றி
அக்கரையில் நீ.

துன்பத்தனிமையில் துயரில்
இக்கரையில் நான்.

1 comment: