Sunday 16 June 2013

ஆண்தன்மை - 1

உலகில் மொத்தம் இரண்டே ஜாதிகள்தான். ஒன்று ஆண்தன்மை ஜாதி, மற்றது பெண்தன்மை ஜாதி. ( இவை ஆணையோ பெண்ணையோ குறிப்பவைகளல்ல.) கவனிக்க, இவைகளிரண்டும் ஆணிலும் பெண்ணிலும் உண்டு.
அதாவது ஆண்தன்மையானது, முதலாளி, கடவுள், கலைஞன், இயக்குனர், ஆக்குபவன், சிந்தனையாளன், தலைவன், வழிகாட்டி, ஆசிரியன், தளபதி, மேலாளர் இப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் மையப்புள்ளியாக தன்னையிருத்திக்கொண்டு வெற்றியினை சுவைப்பவர். மையத்திலிருந்து ஒளிரும் விளக்கின் தீ.
ஒரு உதாரணம் : கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் ஆட்களை பார்த்திருப்பீர்கள். தலைவன் ஒருவன் இருப்பான். முழுநேரமும் உறங்கிக்கொண்டும், சீட்டு விளையாடிக்கொண்டும் இருப்பான். ஆனால் அவன் கவனம் முழுவதும் அடுப்படியின் நினைவுகளிலேயேதான் இருக்கும். 24 மணிநேரமும் விழிப்புநிலையிலேயேதான் இருப்பான். ஆனாலும் சும்மா இருப்பதுபோலவே தெரியும். ஆண்தன்மை ஜாதி.
அவனின் கீழ் வேலைசெய்பவர்களைக் கவனித்தால் அவர்கள் இரவு 11க்குத்தான் படுக்கச்செல்வார்கள். காலை 4க்கே விழித்திடுவார்கள். வேலை செய்துகொண்டேயிருப்பார்கள். ஆனால் மூளை உறங்கிக்கொண்டேதான் இருக்கும். உழைப்பு மட்டும்தான். பெண்தன்மை ஜாதி.
பெண்தன்மையானது, ஆண்தன்மையின் வெற்றிக்கு உழைப்பவர்கள். தீயினால் வெளிப்பரவும் வெளிச்சம்.
ஒன்று மையம், மற்றது வெளிச்சிதறல். ஒன்று குவிதல், மற்றது பரவுதல். ஒன்று அறிவு, மற்றது ஊழைப்பு. இரண்டுமே ஒன்றோடொன்று முழுமையான தொடர்புள்ளது.

அவர்கள் காதலர்கள். இருவருமே மையப்புள்ளி, ஆண்தன்மை கொண்டவர்கள். சிந்தனையில் வேறுபட்டிருந்தாலும் வெற்றியில் சேருபவர்கள்.  மையப்புள்ளி ஒன்றுதான், பாதைமட்டும் வேறுவேறு. ஒரே விஷயத்தை இருவேறுவிதமாக சிந்திப்பவர்கள். அதனாலேயே கோபம் அடைபவர்கள்.
அன்று அவள் சொந்த ஊருக்கு 4 நாட்கள் விடுமுறைக்கு வருகிறாள். அவனை எப்படி சந்திப்பதுவென கற்பனையை ஓட்டுகிறாள். நான்காவது நாள் ஒரு சிறு தனிமையான ரயில்பயணத்தையும் ஏற்பாடு செய்கிறாள். அவனுக்கும் சூசகமாக அது பற்றித் தகவல் தெரிவிக்கின்றாள். அவளின் எண்ணம், அவனும் அதே ரயிலில் பயணம் கொண்டு அவளை சந்தித்து காதல் பரிமாறிக்கொள்ளலாம் என்பது.

ஆனால் அவனோ, வேறு விதமாய் எண்ணம் கொள்கிறான். அதாவது அவனுக்கு அவசரம். முதல் மூன்றுநாட்களை இழக்க அவன் தயாரில்லை. அவன் வேறுவிதமாக திட்டமிடுகிறான், அவளும் அவனுக்கு உதவிடுவாள் என்கிற எண்ணத்தில். அதாவது அவள் தங்கியிருக்கும் வீட்டினருகில் ஒரு விடுதியில் அறையெடுத்து தங்கிக்கொண்டு, அவள் வீட்டைவிட்டு கிளம்புகையில் அவளை சந்தித்து அறிமுகம்கொண்டு அவளை அறைக்குக் கூட்டிவந்து காதலைத் தொடர்வது. அவர்கள் இருவரும் தங்கள் காதலை அறிந்துகொண்ட, அறிமுகப்படுத்திக் கொள்ளாத காதலர்கள். அவன் முதல் மூன்றுநாட்களும் அவளை கண்டு பேச பெரும் முயற்சி எடுக்கிறான். என்னவெல்லாமோ செய்துபார்க்கிறான், பலனில்லை, கோபம் மேலேறி ஊருக்குத் திரும்பிவிடுகிறான். அவள், அவன் வருவான் என்று நம்பி நாளாம்நாள் ரயில் பயணத்தில் அவனை காதலுடன் எதிர்நோக்குகிறாள். அவன் வராதது கண்டு அவளும் கோபம் கொள்கிறாள். அவர்கள் நடத்தின இருவேறு திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துவிடுகின்றன. திட்டம் இரண்டும் சரியானதுதான், ஆனாலும் செயலாகவில்லை. அவர்கள் இருவருமே ஆண்தன்மையில் இருப்பவர்கள். மற்றவர் வழியில் நடக்க விரும்பாதவர்கள். இதிலிருந்து புரிவது, ஆண்தன்மையர் இருவர் காதலிப்பின் ஒருவர்மட்டுமே திட்டமிடல் வேண்டும். மற்றவர் அதை கண்மூடித்தனமாய் செயல்படுத்திட வேண்டும்.     

No comments:

Post a Comment