Wednesday 26 June 2013

இதுதான் காதல்நோய்

அன்றிரவு அதிகாலை ஆழ்ந்த ஒரு கனவு. கனவில் நீ. சும்மாயிருக்க வேண்டியதுதானே. ஒரே சீண்டல்கள். அதாவது விடிகாலை எப்பொழுதும் கதவைத் திறப்பதுபோல கதவைத் திறந்தால், நீ வாசலில், உலகத்தின் சந்தோஷங்கள் அனைத்தையும் உன் கண்ணுக்குள் தேக்கிவைத்துக்கொண்டு. அந்தநாள் வீட்டில் தோழிவேறு இல்லை. அவள் ஒரு உறவின் திருமணத்திற்கு சென்றுவிட்டாள்.  உன் முகத்தின் பொழிவு, என்னை மிகவும் பயமுறுத்தி, கலவரத்துடன் துன்புறுத்தத் துவங்கிவிட்டது. என்னை கற்பழித்துவிடுவாயோ என்றொரு நடுக்கம். அது முற்றிலும் கிடைத்திட முடியாத இன்பமான இம்சைகள். உள்ளே நீ வந்தவுடன் சொல்கிறாய், உலகத்தை முழுவதும் துறந்து மொத்தமாய் உன்னிடமே வந்துவிட்டேன் என்று. நீ உன் அரிபறிகளை முடித்து சோபாவில் வந்து கால்மேல்கால் போட்டுக்கொண்டு அப்பாடாவென அமர்கிறாய். உன்கால்களின் முட்டுப்பகுதிவரை உனக்கு அடங்காமல் வெளியே துறுத்தித் தெரிகிறது.  நான் உனக்கு என்திறமையின் வழிப்படி மிகவும் ருசியான மாஞ்சோலை டீயை போட்டெடுத்து தருகிறேன். நானும் உன்னருகில் அமர்ந்துகொள்கிறேன். என்னைப் பார்த்துக்கொண்டே அந்த டீயை மிகவும் ருசித்துப் பருகுகிறாய். என்ன நினைத்தாயோ எனக்கு நான் வைத்திருந்த டீயையும் உன்கையிலெடுத்து ஒரு உறுஞ்சு உறுஞ்சி அப்படியே என் வாய்க்குள் அதை செலுத்துகிறாய் என்னை கட்டியணைத்துக்கொண்டு . மலைப்பாம்பு இரையை இறுக்குதல்போல், இறுக்கிய அணைப்பால் என் மூச்சு முட்டிடச் செய்கிறாய் வாயை எடுக்காமலேயே.  உன் சேலை முழுமையாய் விலகிடுவதையும் நீ உணரவில்லை. என்முகத்தில் அழுத்திக்கிடந்த அந்த பருவமெத்தைகள், கால்களை பின்னிக்கிடந்த அந்தக்கால்கள். மூச்சு முட்டியது. உடல் நெருப்பால் பரவியது. தப்பவழியில்லை என்பதை உணரும்வேளை, கதவு தட்டப்படும் ஓசைகேட்க, பட்டென விழித்தேன். மணி 2ஐக் காட்டி சிரித்தது. உன்நினைவு மேலோங்க, நெட்டில் பதுக்கி வைத்திருந்த  உன் படங்களையெல்லாம் பார்த்து ரசித்து, துக்கம் மறைத்து, தூக்கம் மறந்து, உன்னழகில் திளைத்து, உன்னை தியானித்து அப்படியே கிடந்தேன். உறக்கம் வெறுத்தது மனம்.
தியான வாழ்வு, கனவுகளை துளியும் சிதைக்காமல் அப்படியே மூளையின் நினைவுக்குழிக்குள் பதுக்கி வைத்துக்கொள்கிறது. சரி டிவி பார்க்கலாமென ஆன்செய்தால், அங்கு சுதாரெகுனாதனின் இறையுணர்த்தும் கீர்த்தனைகள். அவளும் உன்போலவே வடிவாக இருப்பாள். நானென்ன செய்ய? குளிக்கச் செல்லும்வேளை, நாம் சேர்ந்து அந்த மணிமுத்தாறு சுனையில் குளித்தது  நினைவில்வந்து ஒட்டிக்கொண்டு உன்னழகைக்காட்டிக் காட்டி வாட்டியது.  உன்னிடம் குற்றாலத்தில் கடுமையான வார்த்தைகளில் பேசியது, முன்வந்து என்னைக் குற்றவாளியாக ஆக்கிடத் தீர்மானித்தது. மதிய உணவுமுடித்து ஆசுவாசமாக அமர்ந்தபொழுது, அன்றொருநாள் முதல்முதலாய் நேருக்குநேர் அமர்ந்திருந்த உன் கண்களில் நான் கண்ட அந்த காதலும், அது உணர்த்திய விதமும், உண்மையாகவாவென்று என்கண்களால் நான் கேட்க, நீ  தொடர்ந்து உன் அந்த அழகிய புன்னகையை வழியவிட்டு ஆமாம் என்றது. மாலையில் அலைந்த இனிய தென்றலை அனுபவித்து நிற்கும்வேளை, நீ உருவாக்கிய  உன் அந்த இரவின் அநியாயங்கள் ஒன்றுவிடாமல் என் சிந்தனையில் பூக்க, சிலிர்ப்புற்ற என் இளமையின் கூச்சலை கட்டுப்படுத்தவே முடியாமல்தான் கிடந்தேன். மொத்தமாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு அன்று வெளிநாடு செல்லக் கிளம்பியவேளை எதிர்பாராசமயம் நீ கொண்டுதந்த அந்த நீர், என்ன நீரா? அது உன் அன்பினில் விளைந்த அமுதநீரல்லவா! இன்றுவரை என்னைக் கொல்லாமல் கொன்று தீர்க்கும் காதல் நீரல்லவா! இப்படியே உன்நினைவுதான் அன்று முழுமைக்கும். உண்மையிலேயே அன்றுதான் உண்மையான காதல்நோயை உணர்ந்து கண்டுகொண்டேன்.
நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், படுத்தாலும், கனவிலும், நனவிலும், உணவிலும், உணர்விலும், உள்ளத்திலும்  உண்மையாய், எந்தன் விடிவெள்ளியாய் பூத்துக்கிடந்தது நீ, நீமட்டுமே அன்றுமுழுவதும்.
அன்றுமுழுவதுமே இரவு உட்பட உன்பற்றிய வெறித்தனமான உன் நினைவுகளிலேயே கழிந்தது.

No comments:

Post a Comment