Sunday 16 June 2013

ஆண்தன்மை - 2

ஒருமுறை மிகவும் சிரமம் கொண்டு, அவளுடன் தனிமையில் இருக்க வழி ஏற்படுத்தித் தந்தாள் அவனின் அன்புக் காதலி. எல்லொரையும் வேலைக்கு அனுப்பினபின், தான் நிறைய வேலைகள் செய்யவேண்டியதிருப்பதைப்போல் காட்டிக்கொண்டு  வீட்டிலேயே இருந்து அலுவல்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். தோழிக்கு சமையலறையில் முக்கிய வேலையொன்றை கொடுத்துவிட்டு, மாடியில் அந்தப்பொடியன் தூங்கிக் கொண்டிருப்பதையும் உறுதி செய்தாள். அவன் சோபாவில் அமர்ந்துகொண்டு வாக்கிங் செல்லக் கிளம்பிக்கொண்டு இருந்தான். அவள் மாடியில் அவன்முன் தோன்றி நின்றுகொண்டு, அவள் அவனுக்காக காத்திருப்பதை அவனுக்கு உணர்த்தினாள். ( அவள்நோக்கி அவன் ஒரு காதல் முத்தத்தை சிந்தி காற்றில்  அனுப்பியிருக்கலாமோ? காலம்கடந்த சிந்தனை. )
சட்டென அவன் புரிந்துகொண்டு திட்டமிட்டான். அவனின் திட்டம் ஒருநாளும் அவளின் திட்டங்களுடன் ஒத்துபோவதேயில்லை. அது தெரிந்தும், அவன் திட்டமிட்டான். அதாவது வெளியில் செல்வதுபோல் சென்று பின் கார்ஷெட் வழியாக யாரும் அறியாவண்ணம் மறுபடியும் வீட்டினுள் நுழைந்து, மாடியேறி அவளின் அறைக்குள் நுழைந்துவிடுவது என்றும், அவள் அங்கு திரும்பி நிற்கையில்  அவளின் பின்புரம் அவள் இடுப்பை வளைத்து கன்னங்களை அசையவிடாமல் பிடித்து ஒரு ஆத்மார்த்தமான ஒரு முத்தமிடுவதற்கு திட்டம்.  விடைபெற்று வெளியில் சென்றான். ஒரு 2 முறை அந்த ஏரியாவினை சுற்றி வந்தான். பொதுவாக 7 முறை சுற்றுவான். திட்டமிட்டபடி எல்லாவற்றையும் செயல்படுத்தி அவளின் அறைக்குள்ளும் நுழைந்தும்விட்டான். ரத்தம் சூடேறிக் கொதித்தது. ஆண்மை சிளிர்த்தது. அவளின் அறையினுள் அவளை அங்கும் இங்கும் கண்களை ஓடவிட்டு எல்லாவிடங்களிலும் தேடினான். அவள் அதற்குள் குளித்து முடித்து அலுவலகம் சென்றுவிட்டிருந்தாள். மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தான். அளவுகடந்த கோபமும் கொண்டான்.
அவளின் திட்டம் என்னவாக இருந்திருக்கும், என மூளையை கசக்கினான். மற்றதைத்தான் கசக்க முடியவில்லையே என்ற ஒரு ஆதங்கம். மாடியிலிருந்து அவனுக்கு சைகை தந்தாள். அவனை உடனேயே மாடிக்கு அவள் அறைக்கு வரவழைக்க நினைத்திருப்பாள்போலும். எல்லாம் மறுமுறையும் தவறிவிட்டதை உணர்ந்தான்.
ஆண்தன்மையின் இரண்டாவது ஷக்தி பிரழ்வு. இருவரும் ஆண்தன்மையில் செயல்படுவது தவறா நல்லதா? அது இனிமேலும் வெற்றிபெறுமா, காலம்தான் பதிலுறைத்தல் வேண்டும்.

அடுத்த முறை தவறு நடவாவண்ணம் இருக்கவேண்டுமென கடவுளை நினைவில் கொண்டு சிந்தித்தான். கடவுள் ஒரு யோசனை தந்தார்.
அதாவது அவளுக்கு நெட்டின்மூலம் சூசகமாக ஒரு செய்தியை அனுப்பினான். மாலை 6க்கு நூலகத்திற்கு அவன் வந்துவிடுவதாகவும், அவள் தற்செயலாக நூலகம் வருவதுபோல் வந்துவிட்டால் சந்தித்துக்கொள்ளலாம் என்பதுபோல்.
அவன் மாலை உலாசெல்வதுபோல் நடந்து சரியாக 6க்கு நூலகம் வந்துசேர்ந்துவிட்டான். அவள் வந்திருக்கின்றாளாவென அங்கு பார்க்கிங்கில் நின்ற வாகனங்கள் அனைத்தையும் சென்று பார்த்தான். அவள் இன்னும் வந்திருக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின், நூலகத்தின் முன் அமையப்பெற்ற பென்ச்சில் அமர்ந்தான். 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கார் வந்திருக்கிறதாவென சென்று பார்த்தான். அவளைத் தவறவிட்டுவிடக் கூடாதல்லவா.
அங்கு மாலை 9க்குத்தான் இருட்டும் என்பதால் கவலையில்லை. 7க்கு நூலகத்திலுள்ள அனைவரும் கிளம்பத் துவங்கினர். அவள் பொதுவாக அலுவலகத்திலிருந்து 5.30க்குத்தான் வருவாள். 6மணியென்பது சரியான நேரமாகத்தான் அவனுக்குப் பட்டது. அவள் வரவேயில்லை. வீட்டிற்கு பொடிநடையாய் வந்துசேர்ந்தான். சேர்ந்து 15 நிமிடங்களில் அவளும் வீடு வந்துசேர்ந்தாள். அவனைப்பார்த்து நக்கலாய் ஒரு சிரிப்பு வேறு சிரித்தாள். அது அழகாக இருந்ததால் அவனுக்கு அவள்மேல் இருந்த கோபமும் ஆதவன் கண்ட பனிபோல் விலகியது. வேறு என்ன செய்ய?

No comments:

Post a Comment