Wednesday 12 June 2013

ஒரு கிராமத்துத் திருமணம்

அன்று ஒரு கிராமத்து வீட்டில், அவளின் மகளுக்குத் திருமணம். ஆம் வீட்டில் வைத்துத்தான் திருமணம். காலை மணி 9 க்கு. காலை வேலைகளையனைத்தையும் முடித்துக்கொண்டு கிளம்ப 7 ஆகிவிட்டது அவனுக்கு. தோழி வேறொரு திருமணம் சென்றுவிட்டபடியால் அவன் தனியே  காரில் கிளம்பிச் சென்றான். 45 நிமிடதூரம்தான். ஒரு அமுத்தலில் வந்துவிடும். வாஜ்பாயியின் கைங்கர்யம். 4 வே ட்ரேக்கின் டோல் கலெக்ஷன் தொகையைக் கூட்டியிருக்கின்றார்கள் போலும். இப்பொழுதெல்லாம் சென்னை சென்றால் டோலுக்கு மட்டும் 800 ரூபாய் ஒதுக்கிடவேண்டும். பஸ்ஸுக்கு டிக்கெட் என்றால்கூட 200 லிருந்து அதிகபட்சம் 800 தான். இந்தியாவில் எதையும் கேட்க நாதியில்லாத நிலைமை. நம் ஜனநாயக அரசியல்  முறைகள் முற்றுமாக மாற்றியமைத்திடல் வேண்டும். சரி.
அது ஒரு வீட்டின் சம்மதத்துடன் நடைபெரும் காதல் திருமணம். கேட்கவே இவ்வளவு சந்தொஷமெனில், பார்க்க, அதுவும் ஒரு கிராமத்தில்? இவ்வளவு எளிமையாகவும், மனதுக்கு இனிமையாகவும் ஒரு திருமணம் நடந்திட முடியுமா, என்பதை நினைத்து பொறாமைப்பட்டான். மாப்பிள்ளை வீட்டார் கிருத்துவர்கள். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம், பொட்டு நெற்றியில் பெண்களுக்கு இல்லையெனில் பாதியழகு மறைந்துவிடும். மல்லிகைச்சரம் கூந்தலில் தொடுக்கவில்லையெனில் மீதியழகும் காலியாகிவிடும். மொத்தம் 100 பேர் இருந்திருப்பார்கள். அதில் பெண்ணின் கல்லூரித்தோழிகள் மட்டும் 20 பேர் இருப்பர். கொண்டாட்டமாக மண்டபம் களைகட்டியிருந்தது. காலை உணவு....  பக்குவமான கேசரி, சுடச்சுட பூரி, நெய்யில் செய்யப்படாவிடினும்  மிகவும் சுவையான பொங்கல், பூப்போன்ற இட்லி, சாம்பார், சட்னி. திகட்டாத, திருப்தியளிக்கும் உணவு. இதன்பின் உங்களால் மதிய உணவை சாப்பிட முடியாது. திருமணங்களில் உணவே திருப்தியை தந்துவிடுகிறது. மதிய உணவுக்கு வெஜ் பிரியாணி அடுப்பில் மணந்துகொண்டிருந்தது. 
கல்லூரிப்பெண்கள் சேலையில் நிற்க, கூந்தலில் மல்லிகை ஆடித்தவழ, ஒவ்வொருநொடியும் தன்னழகை சரிசெய்து அழகுநடையில் மகிழ, அது ஒரு சோலையாக காட்சியளித்துக்கொண்டிருந்தது. அதோ ஒருத்தி அவனையே கண்கொட்டாமல் பார்க்கிறாள். நிறம், கருப்புக்கும் மாநிறத்துக்கும் நடு. சிரிப்பழகி. அங்குமிங்குமாய் அலைந்துகொண்டு, இடையிடை மறைவினில் நின்று ஒளிந்துகொண்டு அவனைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவனும் அதைத் தெளிவாகக் கவனித்தும்விட்டான். முக்கால்கிழம் அவன். அதையும் மனத்தில் நினைத்துக்கொண்டான். என்ன செய்வது அவன் பெண்களை பெரிதும் மதிப்பவனாயிற்றே! நன்றாக மதித்தான். மணப்பெண் அழகிய தங்கநிற பட்டுப்புடவையில் வந்தாள். ஊர்பெரியவர், கெட்டிமேளம் என்றார். உடனேயே கிராமத்துமணம் கலந்த மேளம், கொட்டுகொட்டென கொட்டித்தீர்த்தது. சரங்கள் 10 நிமிடங்களுக்கு வெடிக்கப்பெற்றன. நட்சத்திர ஓட்டல் திருமணங்களில் மணமக்கள் மேல் தூவப்படும் அத்தனை சமாச்சாரங்களும் தம்பதிகளின்மேல் தூவப்பட்டன. மொத்த குடும்பங்களும் சந்தொஷமழையில் நனைந்தன. திருமணம் முடிந்தது பத்துநொடியில். 
இன்னும் அந்தப்பெண் அவனை மிகவும் விரும்பி பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவன் இப்பொழுது மணமக்களை வாழ்த்த மேடைக்குச் சென்றான். அந்தப்பெண் இப்பொழுது மணப்பெண்ணின் மிக அருகுக்கு நகர்ந்திருந்தாள். அவனைப் பார்த்து நன்கு அறிந்தவள்போல் புன்னகைத்தாள். பெரிய அழகியில்லை ஆனாலும் மிகவும் கவர்ச்சியாக சுண்டியிழுக்கும் சிரிப்பு. அவளைப்பார்த்த மாத்திரத்தில் அப்படியே ஒரு ஆத்மார்த்த முத்தமிடத் தோன்றும். ( எவளைப்பார்த்தாலும், எந்த இடம்னாலும் ஒனக்கு முத்தம்தானாடா? வாடா ஒன்ன நேர்ல வரம்போது கவனிச்சிக்கிடறேன். எப்படியானாலும் நீ இங்கதான வந்தாகனும், அப்ப ஓவுதட்ட கிழிச்சிடறேன். ) ஒவ்வொரு நொடியும் அவனைப் பார்த்துக்கொண்டேதான் இருந்தாள். ஆரவாரங்கள் ஒய்ந்து எல்லோரும் உணவுக்குக் காத்திருந்தனர். காலையுணவு எல்லைதாண்டியதால் மதிய உணவைக் கைவிட எண்ணியிருந்தான் அவன். சரி உறவுகளை பார்த்து, பின் அவர்களின் விருப்பப்படி எல்லொருமாக ஒரு க்ரூப் ஃபோட்டொவுக்கு தயாரானபொழுது அவள், அவனருகில் உரசிக்கொண்டு நின்றிருந்தாள். 56ம்- 21ம். அவள் பிகாம் முடித்தவளாம். நன்றாகவே பேசினாள். மற்றநண்பர்களுடன் கொஞ்சம் திரும்பையில் மறைந்துவிட்டாள். மணமக்களும் உள்ளே சென்றமையால் அவனும் அந்த ஓட்டு வீட்டினுள் நுழைந்து கிளம்ப, விடைபெற சென்றான். அந்த அறையினுள் அவள் இருப்பாளோவென பட்டென கதவைத் திறந்தான். அங்கே மணமக்கள் ஆத்மார்த்தமாக முத்தமிட்டுக்கொண்டிருந்தனர்.
மணப்பெண்ணின் அம்மா அவனை உணவருந்த மிகவும் கட்டாயம் செய்தாள். அவன் தட்டிக்கழித்து வாசலுக்கு வரும் சமயம் ஒரு சிறுமி 4 பேர் சாப்பிடுமளவு சாப்பாடுகொண்ட ஒரு பார்சலுடன் அவனுக்காகக் காத்திருந்தாள். கிராம மணம் கமழ பேப்பர் பூக்கலான நகர் நோக்கி நகர்ந்தான். மனம் நிறைந்திருந்ததையும் உணர்ந்தான். 

No comments:

Post a Comment