Thursday 27 June 2013

என்னவொரு வேதனை

உன் கண்ணில் இருந்து வழிந்து விழும் 
கண்ணீர் வெள்ளி துளிக்கு நான் காரணம் 
இல்லை.... 
ஆனால் அந்த வெள்ளி துளிகளை கீழே 
விழாமல் என் விழிகளால் 
தாங்கிக் கொள்வேன்..... 
காரணம் அழுவது நீ என்பதால்.....

இரவுப் பனியில் 
குளித்த பூமிக் கன்னி பெண் 
காலை சூரியனால் 
தலை துவட்டி, 
பச்சை பட்டு உடுத்தி, 
யாரை பார்க்க, 
இத்தனை 
நாணத்தோடு காத்திருக்கிறாள்?

பாடம் எழுத, கட்டுரை எழுத 
என்று எதற்காக நான் 
என் பேனாவை தொட்டாலும் 
அது எழுதுவது என்னவோ 
உன் பெயரை மட்டும்தான்...... 
எனக்கு மட்டும் பேனா 
படைக்கப்பட்டது 
உன் பெயரை எழுதவும், 
காதல் கடிதம் எழுதவும், 
மட்டும்தான்!!

என் உயிரின் 
இறுதி அணு வரை 
உன் பெயரை சொல்லிக் கொண்டே இருந்தாலும் 
சோர்ந்து போகாது. 
ஏனென்றால், 
உன் பெயர் சொல்லவே இறைவன் 
என்னை படைத்தான்! 
உன் பெயரிலேயே 
அத்தனை அன்பு இழைகிறதடி!!

உண்மையான தன்னம்பிக்கை என்றும் தோற்பதில்லை. 
எத்தனை முறை படை எடுத்தாய் 
என்பது முக்கியம் இல்லை 
போர்க்களம் உன்னுடையதா 
என்பதுதான் முக்கியம்..... 
ஏன் என்றால் வெற்றிக்கு 
போர்க்களம் தான் தேவை.

ஜன்னல்களை யாசித்தேன் 
உன் சுவாசக் காற்றை 
தென்றலில் இழைத்து 
அழைத்து வரச்சொல்லி. 
வாசலுக்கு முத்தமிட்டேன் 
கதவுகளை காதலித்தேன் 
உன் வரவை எதிர்பார்த்து. 
அழைப்பு மணியை கட்டிக் கொண்டேன் 
நீ வருவதை அது எனக்கு அறிவிக்குமென்று... 
எப்போது வருவாய் அன்பு கண்ணம்மா?

எங்கோ தொலை தூரத்தில் இருந்து 
நீ விடும் மூச்சுக் காற்றை 
வாங்கி நான் இங்கு மூச்சு 
விடுகிறேன் என்பதை 
அறிவாயா நீ? 
என் உயிர் அணுக்கள் ஒவ்வொன்றும் 
உன்னை தேடி 
ஒவ்வொரு வீதியாக அலைவது 
உனக்கு தெரியுமா? 
எங்காவது ஒரு 
என்னுடைய 
பார்வையில் நீ தென்படுவாயா 
என்று தேடி தேடி 
என் விழிகள் செத்து வருவது 
உனக்கு தெரியுமா....... 
உளறவில்லை.....நான் 
உண்மையை சொல்கிறேன் 
என்பதாவது 
உனக்கு தெரியுமா?????
புரிந்திவிட்டிருந்தால்
எனக்குமட்டும் ஏன்
இத்தனைக் கஷ்டம்..... 

என் மன சுமையை 
உன் பரந்த தோளில் 
இறக்கி வைக்க நினைத்து 
நான் உன்னை பார்த்த போது, 
உன் முகத்தின் கடுமை, 
என் நினைப்பை 
ஓட ஓட விரட்டியடித்தது. 
என்ன ஒரு வேதனை?

No comments:

Post a Comment