Thursday 13 June 2013

அளப்பறியா நம் அன்பு

கண்ணுக்கெட்டிய வரை
தேடித்தேடிப் பார்க்கிறேன்.
காணவில்லை அன்பே உன்
கருப்புச் சேலையின் அழகு.

கார்கூந்தலின் ஒட்டிய
கருப்பை சுமந்த அலையினில்
காக்கைக்குஞ்சியின் பிளந்த
வாயின் சிவந்த அசப்பை
வெளியில் கண்டேனடி.

காமம் கண் மறைத்து
காதல் கதை சொன்னேன்.
வந்ததும் வராததுமாய்
வார்த்தைத் தூரிகைகொண்டு
உயிரினுள் இன்பம் பூசுகிறாய்.

உள்ளத்தில் முகம் பதித்துக்
உண்மையாய்க் கேட்கிறேன்,
உயிரணுக்கள் உரிமையுடன்
உணவுண்ணும் சத்தத்தை.

உள்ளிருந்து வான்வந்து
நினைவினுள் புகுந்து நின்று
கனவுக்கு உயிரூட்டுகிறாய்.

இன்பமாகவோ துன்பமாகவோ
மனதை உரசிக்கொண்டேயிரு.
பிரிவுத் தூரம் அதிகமாயினும்
உயிருண்ட உன்னுடல் காந்தம்
ருசித்துக்கொண்டேயிருக்கிறேன்.

வாழ்க்கை வரைமுறையுண்டு
வாழும் உயிர்களனைத்துக்கும்.
இறப்பறியா அருகம்புல் அது
அளப்பறியா நம் அன்பு.

No comments:

Post a Comment