Sunday 9 June 2013

அவளும் சாந்திதான்

அன்று காலை, கொஞ்சம் மந்தமாகவே துவங்கியது. சூரியனும்கூட சோம்பலுடனேயே கண்விழித்துத் தென்பட்டான்.  அன்று அவனுக்கு ஒரு பங்காளியின் வீட்டுத் திருமணத்திற்கு செல்லவேண்டியதிருந்தது. 12 க்கு நகைகளையனைத்தையும் வைத்து சாமிகும்பிடுதல் வைபவம். மாலையில் நிச்சயம் செய்தல் விழா. மாலையில் அந்த மண்டபம் முழுமைக்கும், மண்டபம் அமைந்த சாலை முழுமைக்கும் கார்கள்தான். மொத்த விருதுநகர், தூத்துக்குடி ஊரிலுள்ள அனைத்து கார்களும் அந்த மண்டபத்தில்தான் குவிந்து கிடந்தன. 6.30 க்கு விழா என்பதால் அவனும் தோழியும், தோழிக்கு அவளின் பால்யகால ஸ்னேகிதிகளை பார்க்க வேண்டியதும் இருந்ததால் 6 க்கே மண்டபம் சென்றுவிட்டனர். அவன் அழகிய பெண்கள் அலங்கரித்த, தோதுவான  ஒரு இடத்தினைக் கண்டுகொண்டு அமர்ந்தான். கிட்டத்தட்ட அரைக்கிழங்களில் பாதிப்பேர் வைரம் அணிந்திருந்தனர். அதைக் காண்பிக்க தங்கள்தங்கள் உறவுகளைத் தேடித்தேடி பேசிக்கொண்டு மகிழ்வுடன் இருந்தனர். கணவன்கள் மிகவும் அமைதியாக இருந்தனர். வீட்டிலிருக்கும் பொழுது எப்படியெனத் தெரியவில்லை.
மேடையருகில் அமைந்திருந்த சிறிய மேடையிலிருந்து நாதஸ்வர இசை ஒழுகி வழிந்துகொண்டிருந்தது. அவ்வளவு மில்லியதாய் ட்ரம்ஸை இசைக்கமுடியும் என்பதை வாழ்வில் அன்றுதான் அவன் உணர்ந்தான். இடையில் அழகாக அந்தப் புல்லாங்குழல் இசைவேறு. எல்லாமும் சேர்ந்து மனதில் இறைவனைக் கலக்க முயன்று கொண்டிருந்தது. அழகியப் பெண்களையும் அருகினில் நிறுத்திக்கொண்டு இசையையும் அனுபவிப்பது சாத்தியமில்லை என்பதால் அவன் கவனம் திரும்பத்திரும்ப அழகினை ரசிப்பதிலேயே லயித்தது.  பெண்களுக்கு சமஉரிமைகள் கிடைக்கப்பெற்றபின் உலகம் மிகுந்த சந்தோசமாக இயங்கத் துவங்கியதை அங்குதான் உணரமுடிந்தது. கூட்டமும் மிக அதிகம். மாநிலத்தின் ஆட்டொமோபைல் உலகம் அனைத்தும் குவிந்திருந்தது.
அந்தநேரம்தான் அந்தபெண், தன் 10 வயதுமகளுடனும் அவளின் கணவனுடனும், சுற்றுமற்றும் அமர இடம் தேடிக்கொண்டிருந்தாள். சிக்கென ஒரு காட்டன் கலந்த பச்சைநிற பட்டுப்புடவையினை நேர்த்தியாகக் கட்டியிருந்தாள். பாவாடை கட்டியிருப்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. அது சாத்தியமா என்பதுவும் புரியவில்லை. பின்புற ஜாக்கெட், பவுர்ணமி நிலவு பின் தசமி திதியில் அமர்ந்ததுபோல் இடம்விட்டு முதுகின் மிகச் சிறிய பகுதியினைமட்டும் ஆக்கிரமித்துக்கொண்டு, ஆண்களையெல்லாம் துன்பப்படுத்திக்கொண்டு இருந்தது. களுத்தில் ஒரு சிறிய வைரநெக்லஸ், வைரத்தோடு, வலதுகையில் வைரவளையல்கள், இடதில் ஒரு ரொலெக்ஸ் வாட்ச். தாலியில்லை. சட்டென அவனுக்குப்பின் இருந்த இடத்தில் வந்தமர்ந்தாள். அழகாகவும் இருந்தாள். அவன் சுத்தமாக அதை எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் கேரளச்சாயல் தெரிந்தது அவளிடம். அவளும் தியானத்தினை உருவாக்கக்கூடியவள்தான்.  போறாமைகொள்ளாதே! கோபமும் கொள்ளாதே! அவள் உன்னைவிட கொஞ்சம் அழகில் கூடத்தான் இருந்தாள். ஆனால் உடல்வாகில் கொஞ்சம் பின்தங்கிவிட்டிருந்தாள்.
அவன் எப்பொழுது எங்கு அமரும்பொழுதும் அருகிலுள்ள இருக்கையின் பின்புறம் மேல்விளிம்பில் கையை வைத்துகொண்டுதான் அமர்வான். அப்படித்தான் அன்றும் அமர்ந்திருந்தான். இப்பொழுது அவனின் கைகளுக்கு நேர்பின் அவள் அமர்ந்திருக்கிறாள். கட்டாயம் அவனின் கைகளை சந்தர்ப்பம் கிடைக்கையில் இடிப்பாள் என்று குருவி சொன்னது. சிலநேரங்களில் அவனுக்குக் கேட்கும்படியாக கொஞ்சம் சத்தமாகவேப் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தாள். சுற்றுமற்றும் திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டேயிருந்தாள். ஒவ்வொருமுறையும் அவனையும் பார்க்கத் தவறவில்லை. அவளின் கணவன் இப்பொழுது எழுந்து வெளியே கிள்ம்பினான். தம்மடிப்பான்போலும். அவனுக்கு அவள், தேவையில்லாமல் எழுந்துனின்று வழியனுப்பினாள். அப்படியே அவளின் அடிவயிற்றை அவனின் கைகளில் ஒற்றினாள். எடுக்கவில்லை. மிகவும் மிருதுவாக இருந்தாள். ஒரு 10 நொடிகளுக்குப்பின்தான் இருக்கையில் அமர்ந்தாள். இப்பொழுது அவளின் சத்தம் கொஞ்சம் அதிகமானது. அவன் அவள்நோக்கித் திரும்பி, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், என்றும் ப்ரபுவுக்கு எப்படி உறவு என்றும் கேட்டு பேச்சுக்கொண்டுத்தான்.  நெருக்கமான உறவுபோல இனிமையாக பேசிக்கொண்டேயிருந்தாள். தோழிக்குத்தான் அது பிடிக்கவில்லை. அங்குமிங்கும் கைகளை ஆட்டியாட்டிப் பேசினபொழுது பலமுறை அவனின் கைகளோடு உரசினாள். அவளின் செல்போன் நம்பர் என்னவென கேட்க நினைத்தான். ஆனால் கேட்கவில்லை.
அவள் எஸ்ஸாரெம்டி என்ற ஒரு பெரிய ஆட்டோமோபைல் கம்பெனியின் சேல்ஸ் ஜென்ரல்மேனேஜரின் மனைவி. ஆந்திராக்காரி. பெயர், ஆம் அவளும் சாந்திதான், அப்பப்பா.... எத்தனை சாந்திகள். வைபவம் முடிந்ததும் அடுத்து என்னசெய்யவேண்டும் என்று கேட்டாள். அவனும் அதன் அர்த்தம் புரியாததுபோல் சாப்பிடச் செல்லவேண்டும் என்றான். அவன் எழுந்ததும் அவளும் எழுந்து அவனருகில், மிக அருகில் வந்து கைகள் ஆழ உரசினபடி கையை விடாமல் இருக்கிக்கொண்டு கைகுழுக்கி விடைகொடுத்தாள். அவன், அவனை அந்தச் சூழ்நிலையிலிருந்து வலுக்கட்டாயமாக தன்னைப் பிரித்துக்கொண்டு உணவருந்தச் சென்றான். காதல், காதலால் இதயத்தை நிறைத்துக்கொண்டு இடமின்றி கொஞ்சம் வலி தந்ததை உணர்ந்தான்.

No comments:

Post a Comment