Thursday 13 June 2013

அன்று தலைத்தீபாவளி

திருமணம் முடிந்து தலைத்தீபாவளி. முந்தயநாள் மாலையே தோழியை அழைத்துக்கொண்டு அவளின் சொந்த ஊருக்கு சில ஸ்வீட் வகைகளைக் கையில் கவ்விக்கொண்டு பஸ்ஸில் கிளம்பினான். தோழியின் வீட்டை நெருங்கும்வேளை ஒரு பரபரப்புடன் இன்பமாய் இருந்தது மனது. ஏனெனில் தீபாவளி என்பது விழா அல்ல, ஒரு சிறப்பான கொண்டாட்டம் அவனுக்கு. அப்படித்தான் இதுவரை வாழ்ந்துவந்திருக்கின்றான். வீடு சென்றதும் எவருக்கும் ஒரு இன்ப உணர்ச்சியும் இன்றி சோகநிழலில் உழன்று நிற்பதைக் கண்டான். அவனுக்கு சுத்தமாக மொத்த மூடும் தொலைந்துவிட்டிருந்தது ஒரு நொடியில். பின் அப்படியும் இப்படியுமாக நேரத்தை விரட்டிக்கொண்டு இருந்தான். மணி 9. அவனுக்கு சப்பாத்தி மிகவும் பிடிக்கும் என்பதால், அதுதான் அன்று இரவு உணவு. மாப்பிள்ளையான அவனை மிகவும் மரியாதையுடன் நடத்தினார்கள், தோழியின் குடும்பத்தினர். அவனுக்கு வெருப்பானது. நினைத்திருந்த கொண்டாட்டம் அத்தனையும் மிஸ்ஸிங். எரிச்சலுடன் 10க்கு படுக்கைக்குச் சென்றுவிட்டான்.
அவனின் எண்ண ஒட்டங்கள் சிறகெடுத்தன. அவன் வீட்டில் அவனது தங்கையரின் குடும்பங்கள் அனைத்தும் வந்திருப்பார்கள். எல்லொரும் அரட்டையிலும், வெடிகள் கொளுத்துவதிலும், விசிடியில் விரும்பின சிறந்த படங்கள் பார்ப்பதிலும் ஓடிக்கொண்டிருக்கும். தீபாவளிக்குண்டான பலகாரங்களை குடும்பத்துப் பெண்கள் செய்யத் துவங்கியிருப்பார்கள். அன்றுமட்டும் அம்மா ஒரு தோழியினைப்போல் மாறிடுவார்கள். என் அருகில் தோழி படுத்திருந்தாள். இடிக்குக்கூட அசைக்கமுடியாத அருமையான ஒரு ஆழ்ந்த தூக்கம். கொடுத்துவைத்தவள். எதற்கும் கவலை கிடையாது. தனக்கு என்ன தேவை என்பதில்மட்டும் தெளிவு. இப்படிக்கூட ஒரு பிறவி இருக்குமா? கோபம்கோபமாக வந்தது. இரவு 2 மணியை நினைவிருந்தது, அதன்பின் அப்படியே தூங்கிப்போய்விட்டான்.
பட்டென அதிகாலை 5க்கே விழித்துக்கொண்டுவிட்டான். எல்லோரும் அங்கே அவன் வீட்டில் குளித்துவிட்டு வெடிவெடிக்க ஆயத்தமாக இருந்துகொண்டிருப்பார்கள். இங்கே என்ன செய்வதென புரியாமல் விழித்துக்கொண்டிருந்தான். மாடியிலிருந்து கீழே இருங்கிவந்தும் பார்த்தான் எவரும் முழிப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியஇல்லை. தன் மனம் போல குளித்துக் கிளம்பினான், இவையெல்லாம் எதற்கு என்று புரியாமலே. சும்மா உட்கார்ந்திருந்தான். ஒரு 6க்கு ஃபோன்வந்தது. அவன் அப்பாவும் அம்மாவும் பேசினார்கள். கொண்டாட்டமாக நடந்துகொண்டிருந்ததை சொல்லினார்கள். அவன் ஒன்றும் சொல்லவில்லை, சொல்ல ஒன்றும் இல்லாததால். 7மணிக்குத்தான் ஒவ்வொருவாராக விழிக்கத்துவங்கினார்கள். 10க்கு காலையுணவு. அம்மாவின் சமையலில் ஒருநாள் எண்ணை கூடிவிட்டதால் சாப்பிட மறுத்து சாப்பிடாமல் போய்விட்டான். இங்கு? ஹூம், மனசுக்குள் தாயிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான். பின் 11, 12, 1, மற்றும்2 ஆனது. ஏதோ சம்பிரதாயமாக கொஞ்சம் வெடிகள் போட்டனர். மதிய உணவுக்கு நான்வெஜ் செய்திருந்தார்கள். பொதுவாக அவன் வீட்டில் தீபாவளி அன்று அமாவாசை திதியில் வருவதால் நான்வெஜ் கிடையாது. பிறகு ஒரு குட்டித்தூக்கம். அதன்பின் 5 க்கு ஊருக்குக்கிளம்பினான்.

அங்கு அவனின் உறவுகள் எல்லோரும் அவனுக்காகக் காத்திருந்தனர். வீட்டினுள் நுழைந்ததும், அன்று செய்யப்பட்ட அத்தனை பலகாரங்களும் ருசிபார்க்க அவன் முன் வைக்கப்பட்டன. எல்லாவற்றையும் சுவைத்தபின், சிறுசுகள் எல்லாம் அவனை வெடிவெடிக்க அழைத்தனர். 10000 த்திலிருந்து அனைத்தையும் அந்தச் சிறுசுகளையே போடவைத்து எல்லொரும் மகிழும் சூழ்னிலை உருவாக்கினான். ஒரு அணுகுண்டை ஸ்டைலாக பத்தவைத்த தங்கையின் மாப்பிள்ளைக்கு ஒரு சிறுகல் கன்னத்தில் பட்டுத்தெரித்ததில் சிறு ரத்தக்காயம். இரவு 2 படங்கள் விசிடியில் அனைவரும் சூழ அமர்ந்துகொண்டு அரட்டையுடன் சிரிப்பும் சிங்காரமுமாக கேளியும் கிண்டலுமாக பார்த்துமகிழ்ந்தான். தோழிக்கு வெடி போடவோ பார்க்கவோ பிடிக்காததால் அரைக்குள்ளேயே அடைந்துவிட்டாள். இரவு 2 மணியிருக்கும் அந்த வெரும் தரையிலையே படுத்துறங்கிவிட்டான் அவனையறியாமலேயே. 

No comments:

Post a Comment